Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 அக்டோபர், 2023

11-10-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

புரட்டாசி 24 - புதன்கிழமை

🔆 திதி : இரவு 07.03 வரை துவாதசி பின்பு திரியோதசி.

🔆 நட்சத்திரம் : காலை 11.01 வரை மகம் பின்பு பூரம்.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 11.01 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 திருவோணம், அவிட்டம் 

பண்டிகை

🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபத்தில் எழுந்தருளல்.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு

🙏 நடராஜரை வழிபட மனதில் புரிதல் உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 ஓவியம் வரைவதற்கு நல்ல நாள்.

🌟 புதிய கருவிகளை பழகுவதற்கு சிறந்த நாள்.

🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 06.14 PM முதல் 07.57 PM வரை

ரிஷப லக்னம் 07.58 PM முதல் 10.00 PM வரை

மிதுன லக்னம் 10.01 PM முதல் 12.11 AM வரை 

கடக லக்னம் 12.12 AM முதல் 02.20 AM வரை 

சிம்ம லக்னம் 02.21 AM முதல் 04.23 AM வரை 

கன்னி லக்னம் 04.24 AM முதல் 06.29 AM வரை 

துலாம் லக்னம் 06.30 AM முதல் 08.35 AM வரை 

விருச்சிக லக்னம் 08.36 AM முதல் 10.47 AM வரை 

தனுசு லக்னம் 10.48 AM முதல் 12.54 PM வரை 

மகர லக்னம் 12.55 PM முதல் 02.48 PM வரை 

கும்ப லக்னம் 02.49 PM முதல் 04.30 PM வரை 

மீன லக்னம் 04.31 PM முதல் 06.09 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ‌ ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்

சாந்தம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் மேஷ ராசி அன்பர்களே.. ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் பொறுமையையும், வெள்ளை நிறம் வாழ்வில் தெளிவினையும் புரியவைக்கும்.


அஸ்வினி : வருமான உயர்வுக்கான சிந்தனை உண்டாகும். 

பரணி : உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். 

கிருத்திகை : நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
---------------------------------------
ரிஷபம்

பக்தி நிறைந்த நாளாக அமையவிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே.. எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் சமயோசித புத்தியையும், சாம்பல் நிறம் செயல்பாடுகளின் தன்மைகளையும் புரியவைக்கும்.


கிருத்திகை : நவீன சாதனங்களை வாங்குவீர்கள். 

ரோகிணி : உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

மிருகசீரிஷம் : குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். 
---------------------------------------
மிதுனம்

முயற்சி நிறைந்த நாளாக அமையவிருக்கும் மிதுன ராசி அன்பர்களே.. குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு தென்கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 1ம் எண் தன்னம்பிக்கையையும், மஞ்சள் நிறம் மனதளவில் இருந்துவந்த கவலைகளையும் போக்கும்.


மிருகசீரிஷம் : வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். 

திருவாதிரை : முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும்.

புனர்பூசம் : அரசுப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். 
---------------------------------------
கடகம்

பரிவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் கடக ராசி அன்பர்களே.. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். அலுவலக பணிகளில் துரிதம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 7ம் எண் சிந்தித்து முடிவெடுத்துச் செயல்படுவதையும், பழுப்பு நிறம் மேன்மையான வாய்ப்புகளையும் உருவாக்கும்.


புனர்பூசம் : வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். 

பூசம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். 

ஆயில்யம் : பழைய சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். 
---------------------------------------
சிம்மம்

துணிவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே.. தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். இன்று உங்களுக்கு வடமேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 9ம் எண் ஆழ்ந்த அறிவையும், சிவப்பு நிறம் புரட்சிகரமான சிந்தனைகளையும் மேம்படுத்தும்.


மகம் : மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். 

பூரம் : சந்தேக உணர்வுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

உத்திரம் : நெருக்கமானவர்களால் சில மாற்றமான தருணங்கள் அமையும்.
---------------------------------------
கன்னி

மேன்மை நிறைந்த நாளாக அமையவிருக்கும் கன்னி ராசி அன்பர்களே.. குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். தொழில் மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களில் பிரியமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் நல்லிணக்கத்தையும், இளநீலம் அறிவுக்கூர்மையையும் மேம்படுத்தும்.


உத்திரம் : கொடுக்கல், வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். 

அஸ்தம் : வருமானத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். 

சித்திரை : உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். 
---------------------------------------
துலாம்

செல்வாக்கு நிறைந்த நாளாக அமையவிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.. எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். பூர்வீக வீட்டைச் சீரமைப்பதற்கான எண்ணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் தர்ம சிந்தனைகளையும், பச்சை நிறம் நெருக்கத்தையும் மேம்படுத்தும்.


சித்திரை : நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். 

சுவாதி : உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். 

விசாகம் : தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்

இன்னல்கள் குறையும் நாளாக அமையவிருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே.. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 8ம் எண் சுயமதிப்பீட்டையும், நீலநிறம் வாழ்க்கை பற்றிய உண்மை நிலையினையும் விளக்கும்.


விசாகம் : வியாபார இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். 

அனுஷம் : நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

கேட்டை : கடன் பிரச்சனைகளில் சிந்தித்துச் செயல்படவும். 
---------------------------------------
தனுசு

சிக்கல் விலகும் நாளாக அமையவிருக்கும் தனுசு ராசி அன்பர்களே.. தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வீட்டு சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் உண்மை புரிதலையும், பொன் நிறம் மனதில் அமைதியையும் உருவாக்கும்.


மூலம் : எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். 

பூராடம் : குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது நன்று. 

உத்திராடம் : வழக்குகள் சாதகமாக அமையும். 
---------------------------------------
மகரம்

மாற்றம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் மகர ராசி அன்பர்களே.. மனதளவில் சிறு சிறு தயக்கங்கள் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் மந்தமான சூழல் அமையும். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 9ம் எண் உயர்ந்த சிந்தனைகளையும், வெண் மஞ்சள் நிறம் மனதளவில் புதிய ஆற்றலையும் ஏற்படுத்தும்.

 
உத்திராடம் : கணவன், மனைவிக்கிடையே விவாதங்களை தவிர்க்கவும். 

திருவோணம் : வெளியூர் பயணங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

அவிட்டம் : அலுவலகப் பணிகளில் நிதானம் வேண்டும்.
---------------------------------------
கும்பம்

கவலைகள் அகலும் நாளாக அமையவிருக்கும் கும்ப ராசி அன்பர்களே.. சொந்த பந்தங்களின் வருகை ஏற்படும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் உழைப்பு மேம்படுத்துதலையும், வெளிர் நீலம் நிறம் உடனிருப்பவர்களை பற்றிய தெளிவினையும் உருவாக்கும்.


அவிட்டம் : அரைகுறையாக நின்ற பணிகளில் கவனம் செலுத்தவும்.

சதயம் : வழக்குகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

பூரட்டாதி : வாகன பழுதுகளைச் சரி செய்வீர்கள். 
---------------------------------------
மீனம்

பொறுமை நிறைந்த நாளாக அமையவிருக்கும் மீன ராசி அன்பர்களே.. உறவுகளின் மத்தியில் மதிப்பு உயரும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். தந்திரமாகச் செயல்பட்டு சில செயல்களை செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் பல்துறைத் திறமைகளையும், இளஞ்சிவப்பு நிறம் புதிய உணர்வுகளையும் உருவாக்கும்.


பூரட்டாதி : பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். 

உத்திரட்டாதி : வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். 

ரேவதி : போட்டித் தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். 
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக