ரசப்பொடி
தேவையான பொருட்கள்
மிளாய் வத்தல் - 10
மிளகு - 5 மேஜைக்கரண்டி
சீரகம் - 5 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி ,துவரம்பருப்பு - 3 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு -2 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
காயத்தூள் தவிர மற்ற எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
ஆறிய பிறகு அரைக்க கொடுத்த பொருள்களோடு காயத்தூளையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்து ஒரு பேப்பரில் பரப்பி விடவும்.
நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இந்த அளவு 10 தடவை ரசம் வைக்க வரும்.
கறி மசால் பொடி 😀
தேவையான பொருள்கள் -
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
சோம்பு - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு 10
கிராம்பு - 10
மராத்தி மொக்கு - 10
செய்முறை -
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொத்தமல்லி, மிளகு, சோம்பு போட்டு லேசாக வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் பட்டை, கிராம்பு, மராத்தி மொக்கு போட்டு லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் திரித்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.குருமா வகைகள், காளான் குருமா, மட்டன் குருமா செய்யும் போது பயன் படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக