புரட்டாசி 21 - ஞாயிற்றுக்கிழமை
🔆 திதி : பிற்பகல் 01.12 வரை நவமி பின்பு தசமி.
🔆 நட்சத்திரம் : அதிகாலை 03.42 வரை புனர்பூசம் பின்பு பூசம்.
🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மூலம்
பண்டிகை
🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
🌷 திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
🙏 கந்தனை வழிபட தடைகள் விலகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 செடி, கொடி, மரம் போன்றவற்றை நடுவதற்கு உகந்த நாள்.
🌟 கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌟 புதிய உணவுகளை உண்ணுவதற்கு சாதகமான நாள்.
🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 06.26 PM முதல் 08.09 PM வரை
ரிஷப லக்னம் 08.10 PM முதல் 10.11 PM வரை
மிதுன லக்னம் 10.12 PM முதல் 12.23 AM வரை
கடக லக்னம் 12.24 AM முதல் 02.32 AM வரை
சிம்ம லக்னம் 02.33 AM முதல் 04.35 AM வரை
கன்னி லக்னம் 04.36 AM முதல் 06.41 AM வரை
துலாம் லக்னம் 06.42 AM முதல் 08.47 AM வரை
விருச்சிக லக்னம் 08.48 AM முதல் 10.59 AM வரை
தனுசு லக்னம் 11.00 AM முதல் 01.06 PM வரை
மகர லக்ன ம் 01.07 PM முதல் 03.00PM வரை
கும்ப லக்னம் 03.01 PM முதல் 04.42 PM வரை
மீன லக்னம் 04.43 PM முதல் 06.21 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்
உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரை பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் சாதகமாகும். மகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் தடைபட்ட சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : ஒத்துழைப்பு உண்டாகும்.
பரணி : முயற்சிகள் சாதகமாகும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
ரிஷபம்
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். தாமதம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். இறைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
திடீர் பயணங்கள் உண்டாகும். தன தேவைகள் பூர்த்தியாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த தெளிவு உண்டாகும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு மேம்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
புனர்பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : மதிப்புகள் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
விடாப்பிடியாகச் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இரவு நேரப் பயணங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் புதிய அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : செலவுகள் உண்டாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுகூலம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : பலன்கள் கிடைக்கும்.
அஸ்தம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சித்திரை : அனுகூலம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
எந்த ஒரு செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் சார்ந்த வேலைவாய்ப்புகள் சாதகமாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சித்திரை : காரியங்கள் கைகூடும்.
சுவாதி : மதிப்பு மேம்படும்.
விசாகம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பணி சார்ந்த சில முயற்சிகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த சில நுட்பங்களை அறிவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : கனிவு வேண்டும்.
அனுஷம் : ஈடுபாடு ஏற்படும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அலுவலகப் பணிகளில் விமர்சன கருத்துகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மகரம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தடங்கல் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : வரவுகள் மேம்படும்.
அவிட்டம் : கவலைகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
தனவரவுகள் தாராளமாக இருக்கும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தடைபட்ட சில காரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்கள் சாதகமாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அவிட்டம்: தேவைகள் நிறைவேறும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------
மீனம்
உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக