முதலில் ஆன்லைனில் பட்டா சிட்டா பெறுவதற்கு eservices.tn.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
பின்னர் வலைதளத்திற்கு சென்றதும் “View Patta & FMB / Chitta / TSLR Extract” என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு நகர்ப்புற (Urban) அல்லது கிராமப்புற (Rural) என்பதை சரியாக tick செய்து submit செய்யவும்.
அதன் பிறகு இந்த பக்கமானது ஓபன் ஆகும். அதில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளிட்டு கீழே Submit என்ற button அழுத்தவும்.
இப்போது உங்களுடைய சொத்து விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு town Survey Land Register-ல் இருந்து உங்களுடைய சான்றிதல் சொத்து விவரத்துடன் ஆன்லைனில் வழங்கப்படும்.
உங்களுடைய சான்றிதழில் சொத்து பகுதியின் கட்டுமான வகை, நகராட்சி கதவு எண், வசிப்பிடம், நிலத்தினுடைய வகை, சர்வே எண் போன்றவை சான்றிதழில் இருக்கும்.
உங்களுடைய பட்டா சிட்டாவின் தற்போதைய நிலையை தெரிந்துக்கொள்ள:
நீங்கள் அப்ளை செய்த பட்டா சிட்டாவின் ஸ்டேட்டஸை தெரிந்துக்கொள்வதற்கு edistricts.tn.gov.in என்ற லிங்கிற்கு செல்லவும்.
இதில் உங்களுடைய Application ID-ஐ சரியாக கொடுத்து அதற்கு கீழ் Captcha Values என்பதில் கீழே கட்டத்தில் இருக்கக்கூடிய எண்ணினை பிழை இல்லாமல் கொடுத்து இறுதியாக Get Status என்பதை கிளிக் செய்யவும்.
பட்டா சிட்டா சரிபார்க்க:
முதலில் eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
பின்னர் “Verify Patta” என்பதை கிளிக் செய்யவும்.
இந்த பக்கமானது ஓபன் ஆகும். அவற்றில் உங்களுக்கென்ற Reference Number-ஐ கொடுத்து Submit கொடுக்கவும்.
ஆன்லைன் கட்டணம்:
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணமானது ரூ.100/- செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக