>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 21 டிசம்பர், 2023

    21-12-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


    மார்கழி 5 - வியாழக்கிழமை

    🔆 திதி : காலை 11.53 வரை நவமி பின்பு தசமி.

    🔆 நட்சத்திரம் : அதிகாலை 01.39 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.

    🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 01.39 வரை சித்தயோகம் பின்பு காலை 06.21 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 மகம், பூரம்

    பண்டிகை

    🌷 ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் ஆகிய தலங்களில் ஆகிய கோவில்களில் எம்பெருமான் பகற்பத்து உற்சவம் ஆரம்பம்.

    🌷 திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் காலை வெள்ளி சீவிகையிலும், மாலை சிவபூஜையும் செய்தருளல்.

    வழிபாடு

    🙏 குருமார்களை வழிபட சுபம் ஏற்படும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 தேவாராதனை செய்வதற்கு உகந்த நாள்.

    🌟 மந்திரம் கற்க சிறந்த நாள்.

    🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.

    🌟 வழக்குகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற நாள்.

    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

    மேஷ லக்னம் 01.35 PM முதல் 03.17 PM வரை 

    ரிஷப லக்னம் 03.18 PM முதல் 05.19 PM வரை 

    மிதுன லக்னம் 05.20 PM முதல் 07.31 PM வரை 

    கடக லக்னம் 07.32 PM முதல் 09.40 PM வரை 

    சிம்ம லக்னம் 09.41 PM முதல் 11.43 PM வரை 

    கன்னி லக்னம் 11.44 PM முதல் 01.45 AM வரை 

    துலாம் லக்னம் 01.46 AM முதல் 03.51 AM வரை 

    விருச்சிக லக்னம் 03.52 AM முதல் 06.03 AM வரை

    தனுசு லக்னம் 06.04 AM முதல் 08.14 AM வரை 

    மகர லக்னம் 08.15 AM முதல் 10.08 AM வரை 

    கும்ப லக்னம் 10.09 AM முதல் 11.50 AM வரை

    மீன லக்னம் 11.51 AM முதல் 01.29 PM வரை
    ▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
    இன்றைய ‌ராசி பலன்கள்
    ▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
    மேஷம்

    கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். ஆர்வம் மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

    அசுவினி : புரிதல் ஏற்படும்.
    பரணி : தெளிவு உண்டாகும்.
    கார்த்திகை : பிரச்சனைகள் குறையும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    மனதளவில் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

    கார்த்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.
    ரோகினி : அறிமுகம் ஏற்படும்.
    மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
    ---------------------------------------
    மிதுனம்

    கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சில மாற்றங்களின் மூலம் மேன்மை அடைவீர்கள். வியாபாரம், இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

    மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
    திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
    புனர்பூசம் : இடமாற்றம் உண்டாகும்.
    ---------------------------------------
    கடகம்

    செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    புனர்பூசம் : சோர்வு குறையும்.
    பூசம் : மாற்றம் ஏற்படும்.
    ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.
    ---------------------------------------
    சிம்மம்

    புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும் . ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். பொருட்களை இரவல் தருவதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுவதன் மூலம் நன்மதிப்பு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் வேண்டும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
    பூரம் : கனிவு வேண்டும்.
    உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
    ---------------------------------------
    கன்னி

    சூழ்நிலைகள் அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்களால் ஆதரவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். இரக்கம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

    உத்திரம் : முடிவு பிறக்கும்.
    அஸ்தம் : அறிமுகம் உண்டாகும்.
    சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
    ---------------------------------------
    துலாம்

    குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். வியாபாரத்தில் பொறுப்புடன் இருப்பது நல்லது. உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

    சித்திரை : அமைதியான நாள்.
    சுவாதி : இன்னல்கள் குறையும்.
    விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    நினைத்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

    விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
    அனுஷம் : புரிதல் மேம்படும்.
    கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
    ---------------------------------------
    தனுசு

    புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட தூரப் பயணம் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய் வழியில் அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். சாதனை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    மூலம் : முயற்சிகள் கைகூடும்.
    பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
    உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
    ---------------------------------------
    மகரம்

    மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நலம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

    உத்திராடம் : தைரியம் பிறக்கும்.
    திருவோணம் : தேடல்கள் மேம்படும்.
    அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
    ---------------------------------------
    கும்பம்

    குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளி இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரப் பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
    சதயம் : நம்பிக்கை பிறக்கும்.
    பூரட்டாதி : மேன்மையான நாள்.
    ---------------------------------------
    மீனம்

    உறவுகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கல்விப் பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழல் அமையும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

    பூரட்டாதி : புரிதல் மேம்படும்.
    உத்திரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
    ரேவதி : மாற்றமான நாள்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக