Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 டிசம்பர், 2018

பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது - Part 3: கடன் (Debt)

Image result for How to select a good stock  using Debt / Equity ratio

சென்ற பதிவில், ஒரு நிறுவனத்தின் EPS மற்றும் ROCE-ஐ வைத்து அந்த நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறனை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி  பார்த்தோம். இந்த பதிவில், ஒரு நிறுவனம் வாங்கியுள்ள கடன் பற்றி ஆராய்ந்து, அந்த கடன் நிறுவனத்திற்கு உதவியா, இல்லை உபத்திரமா என்பதை எப்படி கண்டு கொள்வது பற்றி பார்ப்போம்.


ஒரு நிறுவனம் எதற்காக கடன் வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள,  கற்பனையான "குமரன் வேட்டிகள்" என்ற ஒரு நிறுவனத்தின் வரலாறு பற்றி பார்ப்போம். ஈரோட்டை சேர்ந்த சுய தொழில் ஆர்வமுள்ள சரவணன் என்பவர், தன்னுடைய சேமிப்பிலிருந்து Rs 5 லட்சத்தை போட்டு, "குமரன் வேட்டிகள்" என்ற ஒரு வேட்டி தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். அந்த நிறுவனதின் முதலீட்டை, Rs.500 மதிப்புள்ள 1000 பங்குகளாக பிரித்து, 60% பங்குகளை அவர் வசமும், 40% பங்குகளை "குமரன் வேட்டிகள்" நிறுவனம் வசமும் கணக்காக வைக்கிறார். இந்த 1000 பங்குகளும், நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்குகள் (Approved Shares). அதில் 60% (600 பங்குகள்) ஒதுக்கப்பட்ட பங்குகள் (Allocated  shares), 40% நிறுவனம் பெயரில் உள்ள ஒதுக்கப்படாத பங்குகள் (Unallocated  Shares ). முதல் வருடம், ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மட்டும் அவருடைய நிறுவனத்தில் உற்பத்தியாகும் வேட்டிகளை விற்கிறார். வேட்டிகளின் தரம் காரணமாக, அந்த வருடம் உற்பத்தி செய்த அனைத்து வேட்டிகளும் விற்று, Rs 7 லட்சம் வருவாயினை ஈட்டியது. அவரிடம் வேட்டி நெசவு செய்ய தறிகள் இல்லை; வாடகை தறிகளில் வேட்டி நெசவு செய்தது, நூல் வாங்கியது மற்றும் வியாபார செலவு அனைத்தும் Rs. 5 லட்சம். ஆக மொத்தம், அந்த வருடத்திற்கான நிகர லாபம் Rs.2 லட்சம்.
முதல் வருடத்தில்:
                    EPS = 200000 / 1000 = Rs 200
                    Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு)
                    ROCE = (200000 / 500000) * 100 = 40%

இப்போது சரவணனின் திறமையையும், குமரன் வேட்டிகளுக்கு உள்ள வரவேற்பையும் பார்த்து, அவரின் நண்பர்,   சுப்பிரமணி, "குமரன் வேட்டிகள்" நிறுவனத்தில் பங்குதாரராக ஆசைப்படுகிறார். நிறுவனத்தின் 20% பங்கிற்கு (200 பங்குகள்) அவர் Rs. 2 லட்சம் கொடுக்கிறார். இப்பொழுது, நிறுவனத்தின் ஒரு பங்கு, Rs 1000 ஆக உயர்ந்து விட்டது. இந்த புதிய முதலீடு Rs 2 லட்சம், மற்றும் முந்தைய ஆண்டின் வியாபாரத்தின் மூலம் கிடைத்த பண கையிருப்பு Rs 7 லட்சம் ஆக மொத்தம் Rs 9 லட்சத்தில், Rs 2 லட்சத்தில் ஒரு தறியும், மீதமுள்ள 7 லட்சத்தில், உற்பத்தியை பெருக்கி, ஈரோட்டிற்கு அருகில் உள்ள 3 மாவட்டங்களில் விற்பனை செய்ய, குமரன் வேட்டிகள் நிறுவனம் முடிவு  செய்கிறது. இரண்டாம் ஆண்டில், 3 மாவட்டங்களில் குமரன் வேட்டிகளின் விற்பனை ஜோராக நடை பெற்று Rs 13 லட்சத்திற்கு வியாபாரம் ஆகியது. தற்போது, தறி அவர்களிடம் உள்ளதால், உற்பத்தி செலவு குறைந்து, லாபம் Rs 4 லட்சமாக உயர்ந்தது.
இரண்டாம் வருடத்தில்,
                 EPS = 400000 / 1000 = Rs 400
                 Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000            (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்)
                  ROCE = (400000 / 900000) * 100 = 44%

இன்னும் விற்பனையை பெருக்க எண்ணி, பங்கு சந்தையில் பணம் புரட்ட குமரன் வேட்டிகள் நிறுவனம் முடிவு செய்து, 20% பங்குகளை (200 பங்குகள், பங்கு ஒன்று 2500 ரூபாய்) 5 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு செய்து பங்கு சந்தையில் IPO (Initial Public Offering) மூலம் அறிமுகப் படுத்துகிறது. குமரன் வேட்டிகளின் கடந்த இரண்டு வருட செயல்பாட்டை வைத்து, நம்பிக்கை கொண்ட பங்கு சந்தை முதலீட்டார்கள், அதிக ஆர்வம் காட்டி 20% பங்குகளையும் வாங்கினர். இப்போது கிடைத்த Rs 5 லட்சம், முந்தைய ஆண்டின் வியாபார தொகை Rs 13 லட்சம் ஆக மொத்தம் 18 லட்சத்தை வைத்து, மூன்றாம் வருடம் விற்பனையை 10 மாவட்டங்களுக்கு விரிவு படுத்த குமரன் வேட்டிகள் முடிவு செய்கிறது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, 10 மாவட்டங்களிலும் விற்பனை சிறப்பாக நடந்து, Rs 30 லட்சம் அளவிற்கு வியாபாரம் நடந்தேறியது. அதில் செலவு போக, 12 லட்ச ரூபாய் லாபம் கிட்டியது. இதனால், பங்கு சந்தையில் உள்ள குமரன் வேட்டிகள் நிறுவனத்தின் 200 பங்கினை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டு, பங்கின் விலை கட கடவென உயர்ந்து ஒரு பங்கு Rs 4000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
மூன்றாம் வருடத்தில்,
                  EPS  = 1200000 / 1000 = Rs 1200
                  Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000 (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்) + Rs 400000 (இரண்டாம் வருட லாபம்) + 500000 (பங்கு சந்தையின் மூலம் கிடைத்த முதலீடு)
                  ROCE  = (1200000 / 1800000) * 100 = 66%

தற்போது, குமரன் வேட்டிகளின் வரவேற்பை கண்டு பெரும் நம்பிக்கை கொண்ட அந்நிறுவனம், நான்காம் ஆண்டில், தனது பொருளை தமிழகம் முழுமைக்கும் விற்கவும், வேட்டிகளுடன், சட்டையையும் உற்பத்தி செய்து விற்கவும் முடிவு செய்கிறது. அதற்கான கூடுதல் முதலீடாக 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், கூடுதல் தேவையான 40 லட்சம் ரூபாயை
இரண்டு வழிகளில் திரட்டலாம்.
 -  ஒன்று, நிறுவனத்தில் பங்குதார்களின் ஒப்புதலுடன் கூடுதலாக பங்குகளை அறிமுகபடுத்தி, அதை மீண்டும் பங்கு சந்தையில் விற்று பணம் திரட்டுவது. இதற்கு பெயர் Equity Dilution. பங்குதார்கள் இதனை விரும்புவதில்லை, காரணம் - இதனால் EPS குறையும், பங்கிற்கான மதிப்பு சந்தையில் குறையும்.
 - இரண்டாவது, வங்கியில் கடன் பெறுவது.

குமரன் வேட்டிகள் நிறுவனம், பங்குகளை அதிகபடுத்துவதற்கு பதிலாக, கடன் வாங்க முடிவெடுத்தது. குமரன் வேட்டிகள் நிறுவனத்தின் தற்போதைய பங்கு மதிப்பிலும் , வியாபார திட்டத்திலும், நம்பிக்கை கொண்ட வங்கி, Rs 40 லட்ச ரூபாயினை, கடனாக வழங்கியது. துரதிஷ்டவசமாக, நான்காம் வருடம், குமரன் வேட்டிகளுக்கு போட்டியாக ஒரு நிறுவனம் ஆரம்பித்து, குமரன் வேட்டிகளின் விற்பனையை குறைத்து விட்டது. சட்டை விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. நான்காம் ஆண்டில், குமரன் வேட்டிகளின் மொத்த வியாபாரம் 60 லட்சமாக இருந்தது. செலவுகள் போக கிடைத்த லாபம் 20 லட்சம்.
நான்காம் ஆண்டில்,
                வியாபார தொகை = Rs 60 லட்சம்
                செலவு = Rs 40 லட்சம்
                லாபம்  = Rs 20 லட்சம்
                Rs 40 லட்சத்திற்கான வட்டி = 6 லட்சம்
                நிகர லாபம் = 14 லட்சம்
                EPS  = 1400000/1000 = Rs 1400
                Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000 (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்) + Rs 400000 (இரண்டாம் வருட லாபம்) + 500000 (பங்கு சந்தையின் மூலம் கிடைத்த முதலீடு) + 1200000 (மூன்றாம் வருட லாபம்) + 4000000 (வங்கி கடன்)
ROCE  = (14,00,000 / 70,00,000) * 100 = 20%

இந்த கற்பனை நிறுவனத்தின் வரலாறில் பார்த்தது போல, ஒரு நிறுவனம், அதனுடைய வியாபாரத்தை பெருக்குவதற்கு, ஒரு கட்டத்தில் கடன் பெறுவது அவசியமாகிறது. ஆனால், வாங்கிய கடன் அந்த நிறுவனத்தின் பங்குதார்களின் முதலீட்டில் எவ்வளவு விகிதம் என்பதை பொறுத்து அந்த நிறுவனத்திற்கு கடனின் காரணமாக தொல்லை வருமா என்பதை கண்டு கொள்ளலாம்.

நம்முடைய கற்பனையான குமரன் வேட்டிகளின் பங்குதாரர்களின் முதலீடு: Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000 (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்) + Rs 400000 (இரண்டாம் வருட லாபம்) + 500000 (பங்கு சந்தையின் மூலம் கிடைத்த முதலீடு) + 1200000 (மூன்றாம் வருட லாபம்) = 30 லட்சம்
வாங்கிய கடன்: 40 லட்சம்
கடன் மற்றும் பங்குதாரர்கள் முதலீட்டிற்கான விகிதம் = 40 / 30 = 1.33
ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் = நிகர லாபம் / வட்டி = 20/6 = 3.33, அதாவது, குமரன் வேட்டிகளின்  லாபத்தில் கிட்டத்தட்ட 30% வட்டிக்கு செல்கிறது.

இங்கே பார்த்தது போல, ஒரு நிறுவனத்தின் கடன் எவ்வளவு, கடன் மற்றும் முதலீட்டிற்கான விகிதம் எவ்வளவு (Debt /Equity ), லாபத்தில் வட்டியின் பங்கு என்ன என்பதையும், EPS மற்றும் ROCE -யுடன் சேர்த்து ஆராய வேண்டும். குமரன் வேட்டிகள் நிறுவனம், கடன் வாங்காமல், கிடைத்த லாபத்தை மட்டும் மறு முதலீடு செய்திருந்து படிப்படியாக வியாபாரத்தை பெருக்கியிருந்தால், ROCE கீழே போயிருக்காது.

கடன் எப்பொழுதும், நிறுவனத்தின் மொத்த முதலீட்டிற்கு கீழே இருப்பது நல்லது. (Debt / Equity விகிதம் 1-க்கு குறைவாக இருப்பது). அதே போல, லாபத்தில் வட்டியின் பங்கும் 20%-க்கு குறைவாக இருப்பது உத்தமம்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சில விஷயங்கள்







ஜோதிட சாஸ்திரப்படி பெண்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி பொதுவான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.


• திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.


• கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு போகக்கூடாது.


• பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.


• அமாவாசை, நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.


• மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.


• பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).


• கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.


• பெண்கள் எப்போதும் முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது.


•  கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.


• தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.


• வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயைச் சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?







இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம்.


கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம்.


பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.


இக்கோயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் என்ற இக்கோயிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.


17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர். இந்தக் கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.


பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி. இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும் என்று கூறப்படுகிறது.


தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5 மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரமிப்பின் உச்சம்.


மேலும், இக்கோயிலில் தான் 22 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

சனி, 29 டிசம்பர், 2018

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?







சிலருக்குக் காலையில் எழுந்ததுமே வயிற்றைக் கிள்ளுவது மாதிரி இருக்கும். கிடைக்கிற எதையாவது எடுத்துச் சாப்பிட்டு, பசி போக்குவது அவர்கள் வழக்கமாகவும் இருக்கும். பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வெறும் வயிற்றில் இப்படிக் கண்டதையும் சாப்பிடுபவர்கள் கவனிக்க..! இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை.... கூடாதவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்!











எதைச் சாப்பிடலாம்?

கோதுமையில் தயாரான உணவு... சிறப்பு!

காலைக் கடன்களை முடித்து, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்த பிறகு, டிஃபனுக்கு நல்ல தேர்வு கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரி, தோசை முதலியன. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசிப் பருப்பில் செய்த `தால்’ கூடுதல் சிறப்பு. நம் உடலுக்கு நாள் முழுக்கத் தேவையான புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து அத்தனையும் கிடைக்கும்.







கேழ்வரகு கூழ்... கேடு தராது!

`ராகி’ என சொல்லப்படும் கேழ்வரகின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். எடைக் குறைப்புக்கு உதவும்; சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கொழுப்பைக் குறைக்கும். கேழ்வரகில் புரோட்டீன்களும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. ரத்தசோகை தீர்க்க உதவும். செரிமானத்துக்கு நல்லது. பிறகென்ன... கேழ்வரகு கூழை மருத்துவர் ஆலோசனையுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.







முட்டைக்குச் சொல்லலாம் வெல்கம்!

வேக வைத்த முட்டையை, காலை டிஃபனோடு சாப்பிடுவது அவ்வளவு நல்லது. முட்டையின் வெள்ளைப்பகுதியில் உள்ள அதிகமான புரதச்சத்து, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைத் தூண்டும். அதோடு, அன்றைய தினத்துக்கு நமக்குத் தேவையான கலோரிகளும் கிடைத்துவிடுவதால், மேலும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை வரவழைக்காது.





தர்பூசணிக்கு தலை வணங்கலாம்!


வெறும் வயிற்றில் தாராளமாகச் சாப்பிடலாம். நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்களை அழிக்கும் தன்மையுள்ளது; வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. நம் ஆரோக்கியம் காக்கக்கூடிய நீர்ச்சத்துள்ளது தர்பூசணி. எல்லா நாட்களிலும் தர்பூசணி கிடைப்பதில்லை என்பதால், கிடைக்கும் நாட்களில் வாங்கிப் பயன்படுத்தலாம்.






கோதுமை பிரெட்டுக்கு `ஓ’ போடலாம்!


கிரீன் டீ, கோதுமை பிரெட் ஸ்லைஸ் இரண்டு... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட அருமையான காம்பினேஷன். கோதுமை பிரெட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும், குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டும் நம் உடலுக்கு சக்தி தருபவை. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கச் செய்பவை.


எதைச் சாப்பிடக் கூடாது!

பேக்கரி ஐட்டங்கள் வேண்டாமே!

முதல் நாள், `ஈவினிங்க் ஸ்நாக்ஸுக்கு ஆகும்’ என வெஜிடபுள் பஃப்ஸ், எக் பஃப்ஸ் போன்ற எதையாவது வாங்கிவைத்திருப்போம். அவற்றில் ஒரு பகுதி சாப்பிடாமல் மீதமாகியிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும், உண்ண வேண்டும் என்கிற வேட்கையைத் தூண்டுவிதத்திலும்கூட அவை இருக்கலாம். சிலருக்கு, முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு, `இவை வீணாகிப் போய்விடுமே’ என்கிற கவலை வரும். அதனாலேயே, காலையில் அதை வெறும் வயிற்றில் உள்ளே தள்ளுவதற்குத் தயாராக இருப்பார்கள். பேக்கரியில் தயாராகும் இதுபோன்ற மாவுப் பண்டங்களில் `ஈஸ்ட்’ சேர்ப்பார்கள். அது, நம் வயிற்று ஒழுங்கை பாதிக்கும்; எரிச்சலை ஏற்படுத்தும்; வாயுத்தொல்லையை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.





ஸ்வீட்ஸுக்குச் சொல்லலாம் 'நோ’!
சிலருக்கும் இனிப்போடு அன்றைய நாளைத் தொடங்குவது பிடிக்கும். அதற்காக, லட்டில் தொடங்கி ராஜஸ்தான் ஹல்வா வரை, விதவிதமாகப் பொளந்துகட்டுவார்கள். உண்மையில், வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடாமல் நாளைத் தொடங்குவதே, அன்றைய தினத்தை இனிமையாக்கும் என்பதை மனதில் கொள்க. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், வெறும் வயிற்றில் நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்புகளில் இருக்கும் சர்க்கரை, உடலின் இன்சுலின் சுரப்பைக் கடுமையாகப் பாதிக்கும்; அது கணையத்துக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, சர்க்கரைநோய் தொடங்கி பெரிய உடல்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எச்சரிக்கை.





தயிர், யோகர்ட்... தவிர்க்கவும்!
`முதல் நாள் ராத்திரியே உறைக்கு ஊற்றி, காலையில் தயிரில் லேசாக சர்க்கரை தூவி, ஜில்லுனு சாப்பிடுற சுகம் இருக்கே. அது அலாதியானது’ என்கிற ரகமா நீங்கள்? தயிரோ, யோகர்ட்டோ தவிர்த்துவிடுங்கள் பாஸ்... குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஏனென்றால், இதில் கொழுப்பைக் கூட்டும், சர்க்கரையை சேர்க்கும் காரணிகள் உள்ளன. நல்ல குணங்கள் சில இருந்தாலுமே, டயட்டில் இருப்பவர்களுக்கு யோகர்ட், தயிர் வெறும் வயிற்றில் வேண்டவே வேண்டாம்.







தக்காளிக்குத் தடை போடலாம்!
`சமையலறைக்குப் போனோமா, ஒரு தக்காளியை நறுக்கித் துண்டுகளைச் சாப்பிடுவோமா...’ என வெறும் வயிற்றில் அமிலம் கரைப்பவர்களும் நம்மில் உண்டு. ஆம்... இது உண்மையும்கூட. தக்காளி நல்லதுதான். அது வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பல கூட்டுப்பொருட்கள் (Ingredients) நிறைந்தது, மறுப்பதற்கில்லை. ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது,  வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்திவிடும். இது தொடர்ந்தால், கேஸ்ட்ரிக் அல்சர் வரை வந்து அவதிப்பட நேரிடும்.





வாழைப்பழம்
காலையில் ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்துப்போட்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்காக ஒரு செய்தி... வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்; இதய நோய்களை வரவழைத்துவிடும்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கோவிலில் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவோம்....



ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவது ஆலயம் என்பது நாமறியாமலே பல ஞானிகளும் பெரியவர்களும் கூடும் இடம் ஆலயத்துள் ஆண்டவன் ஒருவனே பெரியவனஅங்கே வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதற்காக, இறைதரிசனத்துக்கு முன்பே, அங்கு காலடி பதித்த அத்தகைய பெரியவர்களின் திருப்பாதங்களுக்கு நம் வணக்கத்தைச் செலுத்துமுகமாக ஆலயப்படியை தொட்டு வணங்குகிறோம்.


ஆலயங்களுக்கு ஏழை, எளியவரும் வருவதுண்டு.


நம் ஆணவத்தையும் பகட்டையும், வீண்பெருமையையும் அங்கேயே விட்டுவிட்டு, இறையடியார்களான அவர்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிடுவதாகவும் ஆகிறது.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
,

வைரத்தின் வரலாறு



உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.


இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது.


வைரம் எப்படி உருவாகிறது?


பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.


வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?


இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.


வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?


வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.


வைரத்தை ஏன் காரட் (Carat) முறையில் எடை போடுகிறார்கள்?


இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்படுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை. இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.


சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?


ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.


உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.


ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?


தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.


வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?


ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் மண் (35/40 லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.


இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?


இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.


பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?


முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.


வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?


வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத் தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.


வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?


வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.


இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?


கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.


இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?


தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது Part 2: EPS, ROCE

index



 
 
 
 
 
 
 
 
இந்த பதிவை ஆரம்பிக்கும்  முன்பு, முந்தைய பதிவில் சொன்ன முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே திரும்பவும் பதிவு செய்ய வேண்டும் - "பங்குகளை வாங்கும்  போது, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்குவதாக  நினைக்காமல்,நிறுவனத்தையே வாங்குவதாக எண்ண  வேண்டும்". இந்த எண்ணம் இருந்தால் தான் வாங்கபோகும் பங்கை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து வாங்க மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

சரி,இப்போது இந்த தலைப்பிற்கு வருவோம். முந்தைய தலைப்பில் சொன்னது  போல, ஒரு வளமான எதிர்காலம் உள்ள தொழில் துறைய  தேர்ந்தெடுத்த  பின்பு,  அடுத்து செய்ய வேண்டியது, அந்த துறையில், வருங்காலத்தில் நன்கு வளரக்கூடிய வாய்ப்புகள் உள்ள ஒரு நிறுவனத்தை தேர்வு  செய்வது. ஒரு துறை வளரக்கூடியது  என்றால், அந்த துறையில் பல நிறுவனங்கள்  ஈடுபட்டிருக்கும்.இந்த பல  நிறுவனங்களில், ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கடினம்  என்றாலும், அதனை  எளிதாக்குவதற்கு, அந்த நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வியாபார வளர்ச்சியை தெரிந்து கொள்ள சில காரணிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த  பதிவிலும், அடுத்த பதிவிலும் பார்ப்போம்.

  1. ஒரு பங்கின் மூலம் கடந்த நிதியாண்டில் கிடைத்த நிகர லாபம் (Earnings Per Share):

ஒரு நிறுவனம் ஒரு பங்கிற்கு எவ்வளவு ரூபாய் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் ஈட்டியது என்பதை தெரிந்து  கொண்டால், அந்த நிறுவனம் எந்த அளவுக்கு லாபகரமான நிறுவனம் என்பதை அறிந்து  கொள்ளலாம். ஒரு பங்கிற்கான லாபத்தை ஏன் பார்க்க வேண்டும்? மொத்த லாபத்தை வைத்து ஏன் ஒரு நிறுவனத்தை எடை போட கூடாது என்ற கேள்வி உங்களில் எழும்.  ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை வைத்து அதனை அளவீடு செய்வதை  விட,ஒரு பங்கிற்கான லாபத்தை வைத்து அளவீடு  செய்யும்போது, அந்த நிறுவனத்தின் செல்யல்பாட்டை பற்றிய இன்னும் தெளிவான பார்வை  கிடைக்கும்.

ஒரு பங்கிற்கான லாபம்(EPS) = நிகர லாபம் (Profit After Tax ) / மொத்த பங்குகளின் எண்ணிக்கை (Total number  of shares )

ஒரு நிறுவனத்தின் காலாண்டு அல்லது முழு  நிதியாண்டிற்கான, நிகர லாபத்தை (Profit After Tax) தெரிந்து கொள்ள, BSE India ((http://www.bseindia.com/) வெப்சைட்டில், நிறுவனத்தின் 'Financials' பகுதியில், பார்க்கவும். அதே போல, மொத்த பங்குகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, BSE India ((http://www.bseindia.com/) வெப்சைட்டில், நிறுவனத்தின் 'Shareholding Pattern' பகுதியில், பார்க்கவும்.

உதாரணமாக, ராமு ஸ்டோர்ஸ், சோமு ஸ்டோர்ஸ் என்ற இரண்டு மளிகை கடைகள் இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.  ராமு ஸ்டோர்ஸ் கடையின் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்திற்கான மொத்த லாபம் Rs. 50,000 என்றும், சோமு ஸ்டோர்ஸ் கடையின் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்திற்கான மொத்த லாபம் Rs. 100,000 என்றும் வைத்துக்கொள்வோம். பொத்தம் பொதுவாக பார்த்தால், சோமு ஸ்டோர்ஸ் மிக லாபகரமான நிறுவனம் போல  தெரியலாம். ஆனால், அடுத்து வரும் கணக்கை பாருங்கள். அப்பொழுது இன்னும் தெளிவான பார்வை இந்த இரு நிறுவனங்களை பற்றி கிடைக்கும்

ராமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு தாரர்கள் 10 பேர் தலா 10000 முதலீடு செய்துள்ளனர்.
சோமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு தாரர்கள் 40 பேர் தலா 10000 முதலீடு செய்துள்ளனர்.
இப்போது, பங்கிற்கான லாபத்தை கணக்கிடும் போது, ராமு ஸ்டோர்ஸ் ஒரு பங்கின் மூலம் ஈட்டிய நிகர லாபம் = 50000 / 10 = Rs .5000
சோமு ஸ்டோர்ஸ் ஒரு பங்கின் மூலம் ஈட்டிய நிகர லாபம் = 100000 / 40 = Rs .2500

மொத்த லாபத்தை பார்க்கும்போது சோமு ஸ்டோர்ஸ்-ன் லாபம் இரட்டிப்பு போல தோன்றும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபத்தை பார்க்கும்போது ராமு ஸ்டோர்ஸ்-தான் சோமு ஸ்டோர்ஸ்-ஐ விட இரட்டிப்பு லாபத்தை வழங்கியுள்ளது. எனவே ராமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் உகந்த முதலீடு.

நாம் பார்த்த உதாரணம் போல, ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை மட்டும்  பார்க்கும்பொழுது, அந்த நிறுவனம் சிறப்பானதாக தோன்றும், ஆனால் அந்த நிறுவனம் ஒரு பங்கிற்கு ஈட்டிய லாபத்தை கணக்கிடும் போது தான் அதனுடைய உண்மையான  செயல்திறனும், நிர்வாகத்தின் திறமையும் நமக்கு தெரிய வரும். ஒரு நிறுவனத்தின் EPS பற்றி தெரிந்து கொள்ள, அந்த நிறுவனத்தை BSE இணைய தளத்தில் (http://www.bseindia.com/) தேடி, Financials பகுதியில், EPS -ஐ பார்க்கலாம்.

ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கினால் கிடைக்கும் லாபத்தின் அளவு (EPS) உயர உயர, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்களின் நம்பிக்கை  உயரும். இதன் காரணமாக இந்த பங்கிற்கான தேவை (Demand) அதிகமாகும். Demand  அதிகமாகும்போது,இந்த பங்கின் விலையும் உயரும்.

2. மொத்த மூலதனத்திற்கான வருமானம் (ROCE  -  Return On Capital Employed):
ஒரு நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள உதவும் அடுத்த குறியீடு, அந்த நிறுவனத்தின் லாபம், மொத்த முதலீட்டில் எவ்வளவு சதவீதம் என்ற ஒரு குறியீடு. இது கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது

மொத்த மூலதனத்திற்கான வருமானம் (ROCE) = நிறுவனம் ஈட்டிய லாபம் / நிறுவத்தின் மூலதனம்.

உதரணமாக, பாபு ஹோட்டல், கோபு ஹோட்டல் என்ற இரண்டு உணவகம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
பாபு ஹோட்டலின் ஒரு ஆண்டிற்கான லாபம் : Rs 50000
கோபு ஹோட்டலின் ஒரு ஆண்டிற்கான லாபம் : Rs 50000
இரண்டு ஹோட்டல்களும் ஒரே அளவு லாபத்தை  ஈட்டியுள்ளன. எனவே இவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தேடுக்க மேலும் விவரங்கள் தேவை. அந்த கூடுதல் விவரத்தை, கீழ்க்கண்டவாறு வருமானம் மற்றும் மூலதனத்திற்கான விகிதத்திலிருந்து (ROCE) தெரிந்து  கொள்ளலாம்.
பாபு ஹோட்டலின் அதிபர் தன்னுடைய சொந்த பணம் Rs 100000 மற்றும் வங்கியிலிருந்து Rs 100000 கடன் - ஆக மொத்தம் Rs 2 லட்சத்தை மூலதனமாக போட்டு ஹோட்டலை நடத்துகிறார்.
கோபு ஹோட்டலின் அதிபர் தன்னுடைய சொந்த பணம் Rs 100000 மற்றும் வங்கியிலிருந்து Rs 50000 கடன் - ஆக மொத்தம் Rs ஒன்றரை  லட்சத்தை மூலதனமாக போட்டு ஹோட்டலை நடத்துகிறார்.
இப்போது, வருமானம் மற்றும் மூலதனத்திற்கான விகிதத்தை பார்க்கும்பொழுது,
பாபு ஹோட்டல்: 50000/200000 = 25%
கோபு ஹோட்டல் : 50000/150000 = 33.33%
எனவே, 100 ரூபாய் முதலீட்டிற்கு 33.33 ரூபாய் வருமானம் பெற்றுத்தரும் கோபு ஹோட்டல்  தான், 100 ரூபாய் முதலீட்டிற்கு 25 ருபாய் வருமானம் பெற்று தரும் பாபு ஹோட்டலை விட சிறந்த நிறுவனம் மற்றும் நம்முடைய பணத்தை முதலீடு செய்ய உகந்த நிறுவனம்.
ஒரு நிறுவனத்தின், ROCE பற்றி தெரிந்து கொள்ள, http://www.screener.in/ என்ற இணைய தளத்தை உபயோகிக்கலாம்.

ஒரு நிறுவனத்தின் பங்கை தேர்வு செய்யும்போது, கடந்த சில ஆண்டுகளில் (அல்லது காலாண்டுகளில்), EPS மற்றும் ROCE எந்த அளவுக்கு உயர்ந்து வந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். மிக  முக்கியமாக, எதிர்காலத்தில் இதே அளவு உயர வாய்ப்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். எதிர்காலத்தை எப்படி கணிப்பது? எதிர்காலத்தை கண்டிப்பாக துல்லியமாக கணிக்க வாய்ப்பில்லை. அப்படி கணிக்க முடியும் என்றால், வாழ்க்கையிலும், வர்த்தகத்திலும் ஒரு சுவாரசியமே இருக்காது :)
ஆனால், கடந்த காலத்தில் போட்ட முதலீட்டை வைத்து நிறுவனம் ஈட்டிய வருமானத்தை  வைத்தும், நிறுவனத்தின் வியாபாரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளை வைத்தும் (உ.ம். - நிறுவனம் ஒரு புதிய பொருளை சந்தையில் அறிமுக படுத்த உள்ளது அல்லது புதிய கிளையை துவக்க உள்ளது), முந்தைய பதிவில் சொன்னது போல, அந்த நிறுவனம் சார்ந்துள்ள தொழிலுக்கு வருங்காலத்தில் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் வைத்து, அந்த நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை ஓரளவு கணிக்க  வாய்ப்புள்ளது. அப்படி சரியாக கணிப்பவர்கள், சரியான பங்குகளை  வாங்கி, தங்களின் முதலீட்டை வளமாக்குவார்கள்.
 
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம்








இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளில்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகின்றது.


இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.


இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கி இருப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

வெங்காய வடகம்

சின்ன வெங்காயத்தை வைத்து வடகம் எப்படி செய்வதென்று பார்ப்போமா !

Image result for வெங்காய வடகம்

தேவையான பொருள்கள் -
  1. சின்ன வெங்காயம் - 2 கிலோ 
  2. வெள்ளை முழு உளுந்து - 200 கிராம் 
  3. காயப்பொடி - 1 தேக்கரண்டி 
  4. கடுகு - 1 மேஜைக்கரண்டி  
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. மல்லித்தழை - 1 கட்டு 
  9. கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு 
கரகரப்பாக அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 10
  2. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  3. பூண்டு - 1 பெரியது 

செய்முறை -
  1. 2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.                                                                     
  2. உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். 
  3. மல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து வைக்கவும்.
  4. மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5.  பருப்பை நன்றாக  கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.                         
  6. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.                   
  7. பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது.
  8. அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.                                                   
  9. இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.                         
  10. பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.
இனி வெங்காய வடகத்தை எப்படி வறுப்பது என்ற ஒரு சிறிய பதிவு -

தேவையான பொருள்கள் -
  1. வெங்காய வடகம் - 8
  2. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வடகங்களை போடவும். பிறகு திருப்பி போடவும்.                       
  2. இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் எடுத்து சாப்பிடலாம்.                                                
  3. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வடக குழம்பும் வைக்கலாம். வடகத் துவையலும் அரைக்கலாம்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

லைக்கினால் என்ன பயன்?.....

Image result for லைக்

உங்கள் பதிவுக்கு ஒருவர் லைக்கிட்டாலோ, கமெண்ட் செய்தாலோ அந்த பதிவு உங்கள் நண்பர்களின் டைம்லைனில் முன்னால் வந்து நிற்கும், உதாரணத்திற்கு இரண்டு வருடத்திற்கு முன் நீங்க பதிவிட்ட எதாவது ஒரு பதிவிற்கோ, போட்டோவிற்கோ யாராவது லைக்கோ, கமெண்ட்டோ இட்டால் அது உங்கள் நண்பர்களின் டைம்லைனில் வந்து நிற்கும்

இதில் இன்னொரு விசயம் இருக்கு, அந்த பதிவிற்கு யாரெல்லாம் லைக் இடவில்லையோ அவர்கள் டைம்லைனில் தான் வந்து நிற்கும், உங்களின் ஒரு பதிவிற்கு நான் லைக் இட்டுருந்தால் உங்கள் டைம்லைனில் வந்து தேடினாலும் நான் லைக் இடாத பதிவுகளை மட்டுமே காட்டும், அதுவே கமெண்ட் செய்திருந்தால் என் கமெண்ட்டுக்கு அடுத்து வரும் கமெண்டுகள் அனைத்தும் எனக்கு நோடிபிகேசன் காட்டும், (பெரும்பாலும் நான் பெண்களுக்கு கமெண்ட் போடாமல் இருக்க காரணம் இந்த நோடிபிகேசன் அலர்ஜி தான்)


தெரிந்தோ, தெரியாமலோ அதிக லைக் வாங்குவது பிரபலம் ஆக ஒரு தகுதியாக பெரும்பாலான முகநூல் பதிவர்களால் பார்க்கப்படுகிறது. அதனால் தன் பதிவுக்கே தானே லைக் போடும் பதிவர்களும் இருக்கிறார்கள், என்னை எனக்கே பிடிக்கலைனா எப்படின்னு என்ற லாஜிக் பதிலும் வைத்துள்ளார்கள். (நான் இதுவரை என் பதிவுக்கோ, என் கமெண்டுக்கோ லைக் இட்டுக்கொண்டதில்லை)

அதிக லைக் வாங்குவது எப்படி?

முகநூல் மட்டுமல்ல, இந்த மொத்த சமூகமும் கண்ணாடி மாதிரி தான், நீங்க கண்ணாடியை பார்த்து சிரித்தால் அது உங்களை பார்த்து சிரிப்பது போல் இந்த சமூகமும் எதிர்வினை ஆற்றும் அதனால் உங்கள் டைம்லைனில் நீங்கள் கடக்கும் பதிவுகளுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் லைக் போட்டு விடுங்க, கூடவே நல்ல பதிவுகளுக்கு கமெண்டும் போடுங்க, நானெல்லாம் கமெண்ட்டாலே இத்தனை நண்பர்களை சேர்த்தேன் ப்ளாக் காலத்தில் இருந்து.



தினமும் உங்கள் நட்பு வட்டத்தில் யாருக்கு பிறந்தநாள் என்று பார்த்து வாழ்த்து சொல்லுங்கள்., அப்படியே அவர்கள் ஆக்டிவா இருக்காங்களா அல்லது அவரது நண்பர்கள் டேக் பண்ண பதிவு மட்டும் அவர் டைம் லைனில் இருக்கா, அதுக்கு அவர் லைக்காவது போட்டு வைத்திருக்காரான்னு பார்த்து ஆக்டிவா இல்லைனா அவரை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிடுங்கள், ஆக்டிவா இருக்கும் புது நண்பர்களை சேருங்கள்

அதிக லைக் வேண்டுமென்றால் பெரும்பான்மைக்கு சொறிந்து கொடுக்கும் மானக்கேடான செயலையெல்லாம் நாம் செய்ய வேண்டியிருக்கும், அதனால் உங்கள் எழுத்து உங்கள் ஆளுமையின் வெளிப்பாடா இருக்கனும்னு மட்டும் நினையுங்கள் ஆட்டோமெடிக்கா லைக் மேல் இருக்கும் மோகம் போய்விடும்.
 
பின்குறிப்பு:.
எனக்கு 500 நண்பர்கள், 100 ஃபாலோர்ஸ் இருக்காங்க, அதில் 98% ஸ்லீப்பர் செல்ஸ் தான், லைக் போட்டா எங்க இவன் கூட சேர்த்து நம்மையும் களி திண்ண வச்சிருவானோன்னு பயந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள் 😂😂😂😂💪💪💪💪💪💪
 
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

ஆண்டாளுடன் கருடன் அமர்ந்தது ஏன் ?







ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. முகூர்த்தநேரம் நெருங்கியும் மணமகனான பெருமாள் வரவில்லை. ஆண்டாள் கருடாழ்வாரை உதவிக்கு அழைத்தாள். 'பெருமாளை உடனே அழைத்து வர வேண்டும். இந்த உதவிக்காக பெருமாளின் பக்கத்தில் நான் அமரும் போது உன்னையும் அருகில் இருக்கச் செய்து பெருமைப்படுத்துவேன்,” என்று வாக்களித்தாள். மகிழ்ச்சியுடன் கருடன் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமாளைத் தோளில் தாங்கியபடி வந்து சேர்ந்தார். திருமணமும் குறித்த நேரத்திற்குள் சிறப்பாக நடந்தது. கைகொடுத்த கருடனைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் ஆண்டாள், பெருமாள் இருவருடன் கருடாழ்வார் சேர்ந்து வீற்றிருக்கிறார்.



மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

சிவனுக்கு நெற்றிக்கண் ஏன் ?







சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என புராணங்கள் சொல்கின்றன. நெற்றிக்கண் என்பது அழிவு சக்தி அல்ல. அது ஞானத்தின் அடையாளம். இந்த ஞானக்கண்ணை லேசாக திறந்து, பெண்ணாசையைத் துாண்டும் காதல் தேவனான மன்மதனை அவர் அழித்தார். இதனால் தான் தியானம் செய்யும் போது, புருவ மத்தியில் (நெற்றியின் அடிப்பகுதி) நமது கருத்துக்களை ஒன்று சேர்க்கிறோம். அப்போது மனம் அடங்குகிறது. ஆசை குறைகிறது. எதைச் சேர்த்து வைத்தாலும் அதனால் பயனில்லை என்ற ஞானம் பிறக்கிறது. நெற்றிக்கண் என்பது ஆசையை அடக்கும் கருவியாகும்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

மிக்ஸர் சட்னி

Image result for மிக்ஸர் சட்னி


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மிக்ஸர் - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  3. மிளகாய் வத்தல் - 1
  4. உப்பு - சிறிது 

தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. எல்லா பொருள்களையும் மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  அரைக்கவும்.
  2. அடுப்பில் கடாயயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இட்லி, தோசைக்கு சுவையான மிக்ஸர் சட்னி ரெடி 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

சமஸ்கிருதம் கற்று கொள்ள


தமிழ் வழியே சமஸ்கிருதம் கற்று கொள்ள கீழுள்ள பொத்தானை சொடுக்கவும்

Image result for learn sanskrit




 



மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

ஒரு கூர்வாளின் நிழலில்

 Image result for ஒரு கூர்வாளின் நிழலில்

ஒரு கூர்வாளின் நிழலில் மின்னணு நூலினை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்



மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

திரும்பி பார்க்கின்றேன்....



நான் +2 படித்துவிட்டு, இஞ்சினியரிங்கிற்காக, எண்டிரன்ஸ் எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். பொதுவா எனக்கு அப்போது எதிர்காலத்துல, அப்படியாகனும், இப்படியாகனுங்கிற எண்ணம் எல்லாம் இல்ல, எங்க வீட்டில் என் அண்ணங்க யாரும் காலேஜுக்கு போகாததால, என்னை எப்படியாவது இஞ்சினியர் ஆக்குவது என்று என் அப்பாவின் முடிவாகயிருந்தது. சின்ன குழந்தைங்ககிட்ட எதிகாலத்துல நீ என்னவா ஆகப்போறன்னு கேட்டா, டாக்டர்னு பட்டுன்னு எதையும் யோசிக்காம சொல்லுறது மாதிரித்தான் நானும், இஞ்சினியராவேன்னு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்ப எல்லாம் சத்தியமா எனக்கு செமஸ்டர், அரியர், பஸ்ட் கிளாஸ், புராஜெக்ட், பிராக்டிகல்..... இப்படியான டிபிகள்ஸ் இருக்குமுன்னு தெரியாது.

எண்டிரன்ஸ் கிளாஸுக்கு போகனும்னு, என் நண்பர்கள் அனைவரிடமும் ஐடியா கேட்டு, தென்காசியில் சேரலாமுன்னு முடிவுபன்னி, அப்பாகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி, என் அப்பா “நாளைக்கு சீக்கிரம் ரெடியாகு, கவுன்சிலிங் கு போகனும்

என்னதுதுதுதுதுது கவுன்சிலிங்ஆஆஆஆஆஆஆ
சத்தியமா அப்போ எல்லாம் கவுன்சிலிங் னு பேர கேட்டாலே சும்மா உடம்புலம் நடுங்கும் ஆனா நானே இப்போ கவுன்சிலிங்கு போக ரெடி ஆகணும் சில பல பிரபல கல்லூரி எல்லாம் டவுன் ல தான் ஆனா இப்போ நாங்க அதுக்கு போகல எங்க அப்பாவோட பிரெண்டோட பிரெண்ட் எதோ அங்க எண்டிரன்ஸுக்கு வகுப்பு எடுப்பதாகவும், சிறந்த ஆசிரியர்களின் சீறான மேற்பார்வையில், சிறப்பான கல்வின்னு, ஏதோ ஒரு நாதாரி ரைமிங்க என் அப்பாகிட்ட சொல்ல, எங்கப்பாவும், நாம் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொன்னா, நம்ம புள்ளயாண்டான் நம்மள பேசி சமாளிச்சி அங்க போகவேமாட்டான்னு தெரிஞ்சிகிட்டு, முயலுக்கு காலே இல்லங்குற அளவுக்கு விடாப்பிடியாக நின்றதால, வேற வழிதெரியாம, ஒரு மாசம் தங்கிப்படிக்க, பெட்டிகட்டி பஸ்ஸுல பயணித்துக்கொண்டிருந்தேன்.
பஸ்ஸுல போகும் போது, ஜன்னல் ஓரமான சீட்டில் சாய்ந்துகொண்டு, இந்த சினிமாவுல வருகின்ற மாதிரியான பிளாஸ்பேக். எங்க குடும்பத்தில், என் அண்ணன், என் அத்தை மகன்கள், பெரியப்பா பையன், மற்றும் என் சொந்தத்தில் உள்ள அனைத்து குடும்பத்தில் இருந்தும் யாராவது ஒரு ஆள், அங்கே படித்தவர்களாக  இருப்பார்கள் நல்ல படிச்சு பெரிய ஆளாக இருப்பார்கள் என கனவுல நினைச்சுட்டு வந்தேன் பட் உண்மை என்னனா அங்க படிச்ச யவனும் பத்தாவது தாண்டவில்லை, அப்படியோரு ராசியான பள்ளிக்கூடம் அது.
அவங்க, அங்க படிக்கும் போது, நான் ரொம்ப சின்னபையன், என் அப்பா, என் அண்ணன், மற்றும் சொந்தகார பயலுகள பாக்குறதுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு, திண்பதற்கு எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். சொன்னா நம்ப மாட்டீங்க, உண்மையில், சேது படத்துல வருகின்ற சீன்மாதிரியே இருக்கும் (சேது படம் பார்த்தபோது எனக்கு, இந்த சின்ன வயது ஞாபகம் தான் வந்தது), எல்லோரையும் மொட்டையடித்து, தட்டுடன், ஒரு கைலியோடு பார்க்கும்போது......என்னால தாங்கவே முடியாது. எங்கப்பா வந்ததும், எங்க ஊருக்காரங்க வந்து, சாப்பாடு சரியில்ல, கொசு கடிக்குது, வாத்தியார் அடிக்குறாருன்னு, எங்கப்பாவ வரசொல்லுங்கன்னு ஏகப்பட்ட புகார்களும், வீட்டுக்கு சொல்லியனுப்புற விசயங்களுமாய் இருக்கும். (எங்க குடும்பத்து பசங்க, படிக்காம போனதுக்கு இந்த பள்ளிக்கூடம்தான் காரணம் என்று நான் கண்டிப்பா சொல்லுவேன்).
அங்குள்ள கொடும தாங்க முடியாம, இரவுல சுவர்யேரி குதித்து, வீட்டுக்கு ஓடி வந்தவங்கள, அடியடின்னு அடிச்சு மறுபடியும் அங்கயே அனுப்பிவைக்கிறது, வெங்காயத்தை நைத்து, அக்குளுக்குள்ள வைத்து, வேண்டுமென்றே காய்ச்சல் வரவழைத்து ஊருக்கு வருவது. பள்ளிக் கூடத்துல இருந்து ஓடிவந்து, அப்பாக்களின் அடியிலிருந்து தப்பிக்க, தாத்தாவிற்கு வடை, பஜ்ஜி வாங்கி கொடுத்து நிலைமையை சமாளிக்க, அனைவரும் பரிதவித்த முகத்துடன் லைன் கட்டி நின்னது...................எல்லாம் என் கண்முன்னாடி வந்து போனது.
நீங்களே சொல்லுங்க, இவ்வளவு பெரிய ட்ராஜடியான பிளாஸ்பேக்க வச்சிகிட்டு, என்னால எப்படி அங்க படிக்கமுடியும்???????.
அப்ப எங்களுக்குன்னு (என் கேஸ் மாதிரி, அங்கும் எங்க ஊருக்காரங்க 10 பேரு இருந்தாங்க) இருந்த ஒரே ஆறுதல் அது, அந்த பள்ளிய அடுத்தது , மெடிக்கல் காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் மட்டும் தான். காலையில்  கூட்டம், கூட்டமாக பொண்ணுங்க எல்லாம் போகும், ஆனா நல்ல பிகரா, இல்லா சொத்த பிகரான்னு பாக்குரதுக்கு சுவர் ஏறித்தான் குதிக்கனும். என்னடா வாழ்க்க இது, விதி இப்படி, ஸ்டம்ப ஊனி, பேட், பாலுடன் கிரிகெட் விளையிடுறேன்னு எண்ணி ரொம்ப கான்டாயிடுச்சி. என் அண்ணன்மார்களோட காலத்தில் ஏற்பட்ட கொடுமையை விட, இது பெருங்கொடுமையா இருக்கேன்னு வாழ்க்கையை வெறுத்து, விட்டுட்டு போன ஒரே வாரத்துல, ஐயா, பேக் டு பெவிலியன்.
நான் ஏதோ செய்யாத குற்றத்த சென்ஞ்ச மாதிரி என் அப்பா, எண்ரன்ஸ் எக்ஸாம் முடிஞ்சு, ரிசல்ட வரும் வரை எங்கிட்ட பேசவேயில்லை. இப்ப நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு, ஆனா அந்த நேரத்துல அது ரொம்ம வசதியா இருந்திச்சு. நான் நினைத்த இடத்துலயே படித்தேன், சினிமாவிற்கு போனேன், நல்லா ஊர் சுத்தினேன், கிரிகெட் விளையாடினேன்..... ஆனா புத்தகத்த மட்டும் தொடவேயில்ல.
ரிசல்ட் வந்ததும் மார்க்க பார்த்துவிட்டு (அடிங்ங்க..., யாருடா அவன்..., மார்க் எத்தனன்னு கேட்கிறது?), என் அப்பா சொன்னது, “என் பேச்ச கேட்டிருந்து படிச்சிருந்தா................., இன்னும் நல்ல மார்க் வாங்கியிருந்திருப்பான்.
அந்த வசனத்த கேட்டுவிட்டு நான் சொன்ன பஞ்ச் டயலாக் (எங்கப்பா போனதுக்கு அப்புறம் தான்) என்னனு தெரியுமா???
.
.
எங்க படிக்கிறோம்ங்குறது முக்கியமில்ல,

எப்படி படிக்கிறோமுங்குறது தான் முக்கியம்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

பெண்ணின் பெயரில் பெருமாள்







பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாற, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இந்த வடிவத்துடன் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயாலி என்ற இடத்தில் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். 'ரயாலி' என்றால் 'விழுதல்'. மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் காட்சி தந்தபோது அவர் தலையில் சூடியிருந்த மலர் இங்கு விழுந்ததால் இவ்வூருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் விரல் நகம், ரேகைகள் துல்லியமாகத் தெரியும்படி சிலை நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறம் பெண்ணின் சாயல் உள்ளது.


கால்களில் தண்டை, சிலம்பு அணிந்து வட்டமாக கொண்டை முடிந்து, மலர் சூடி காட்சி தருகிறார். முன்புறத்தோற்றம் ஆணைப் போல் உள்ளது. ஆண் வடிவத்தை 'ஜெகன்' (உலகை ஆள்பவர்) என்றும், பெண் வடிவத்தை 'மோகினி' (பக்தர்களைக் கவர்பவள்) என்றும் சொல்கிறார்கள். இரண்டையும் இணைத்து சுவாமிக்கு 'ஜெகன்மோகினி கேசவப்பெருமாள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, நாரதர், ஆதிசேஷன், கருடாழ்வார், கங்கை, தும்புரு, ரம்பை, ஊர்வசி ஆகியோரின் சிற்பங்கள் சிலையைச் சுற்றி உள்ளன. சுவாமியின் பாதத்தில் தண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

நந்தியின் அருள் பெற என்ன செய்வது ?







சிவபெருமானுக்கு வாகனமாக இருக்கும் நந்திதேவரின் அருட் பார்வை அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. நந்தனார் சிவன் மீது அதீத பாசம் கொண்டிருந்தும் கூட கோயிலுக்குள் செல்ல முடியாத அவருக்கு, நீண்ட நாள் சிவதரிசனம் கிடைக்கவில்லை. காரணம் அவர் வாசலை மறைத்துக் கொண்டு இருந்ததால்தான். அதன் பிறகு சிவனின் உத்தரவுக்கு பின் ஒதுங்கிக் கொண்டார்.


சிவனின் வாகனமாகவும், கண்ணிமைக்காமல் பாதுகாப்பவருமான நந்திதேவரின் அருளைப் பெற்றவர்கள் உலகில் எட்டு பேர் தான்.


அவர்கள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் மற்றும் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் ஆகியோர். இந்த அருளாளர்களை பக்தியுடன் வணங்குவோர்க்கு நந்தியின் திருவருள் எளிதில் கிட்டும்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

புதன், 26 டிசம்பர், 2018

ஆரா என்னும் புது புரளி.......

Image result for ஆரா

ஆரா பற்றி  ஏன், எதற்கு, எப்படி என்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களால் சொல்லப்பட்ட பதில். சுஜாதா அறிவுஜீவியா என்பதல்ல இங்கே பிரச்சனை ஆனால் ஒரு கேள்விக்கு தான்தோன்றிதனமா சுஜாதா பதில் சொல்லமாட்டார் என நம்புகிறேன்

மனிதர்கள் வெப்ப இரத்த பிராணிகள், அவர்கள் உடலுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பம் நிலையாக இருக்க வேண்டும், அதனால் தான் அதிக வெப்பத்தில் நம் உடல் வியர்த்து வெப்பத்தை சீராக வைக்கிறது, அதிக குளிரில் நம் உடல் நடக்கி வெப்பத்தை சீராக வைக்கிறது, அதிக வெப்பத்தை தாங்க முடியவில்லையென்றால் உடல் டிஹைட்ரேட் ஆகி ஹீட்ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறக்கக்கூடும், அதிக குளிரை தாங்க முடியவில்லையென்றால் ஹைப்போதெர்மியா ஏற்பட்டு இறக்கக்கூடும்

நம் உடல் வெப்பத்தை அல்ட்ராவயலட் கேமரா அல்லது ஹீட் சென்சார் மூலம் பார்த்தால் புறசூழலுக்கு தனியே நம் உடல் தெரியும், அவ்வாறு வெப்பமாக இருக்கும் நம் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பகதிர்களை தான் ஆரா என பெயரிட்டு வைத்துள்ளார்கள் ஆன்மீகவாதிகள். ஆரா என்பதை 100% டுபாக்கூர்னு சொல்றதுக்கு முக்கிய காரணமே அதை ஆன்மா, ஆன்மீகம்னு இணைத்தது தான்.

ஏன் ஆன்மீகம் இருக்கக்கூடாதா? நான் உணர்ந்தேன் என்று கூட சிலர் சொல்கிறார்களே என்றால், ஆம் நான் கடவுளை பார்த்தேன் என்று கூட தான் சிலர் சொல்கிறார்கள். பேயை பார்த்தேன் என்று கூடத்தான் சிலர் சொல்கிறார்கள். உங்கள் மண்டையில் இது தான் உண்மை என நம்பவைத்து விட்டால் உங்களால் அதை ஆராயமுடியாது, முன்முடிவுகள் அதை அப்படியே நம்ப வைக்கும்

மருத்துவ குறிப்புகளை பொறுத்தவரை ஆரா என்பது ஒரு உள்ளுணர்வு. ஒரு வித எச்சரிக்கை உணர்வு. இதை பண்ணாதே, அங்கே போகாதே என உங்கள் உள்ளுணர்வு எச்சரிப்பதே ஆரா என மருத்துவம் அழைக்கிறது. அதை ஆன்மீகத்தோடு சிலர் இணைத்து கல்லா கட்டுகிறார்கள், அந்த எச்சரிக்கை உணர்வு நம் மூளையில் பல செயல்களுடன் ஒப்பிட்டு தரும் முடிவு, நம் மூளையின் வேகம் பல ஆயிரம் கணிணிகளுக்கு இணை என்பதால் நம்மால் உணரும் முன்பே முடிவு வந்து நிற்கும்

நம் ஆராவால் பிறர் பிரச்சனைகளை உணரமுடியுமா? நாம் போனில் பேசும் விதத்தை வைத்தே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை நம் நெருங்கிய நண்பர்களால் உணர முடியும், நம் உடல்மொழியை கொண்டே நம் உடலுக்கு எதோ பிரச்சனை என்பதை உணரமுடியும், மருத்துவர்கள் சோதிக்கும் பொழுது கண்ணை நன்றாக விரித்து பார்ப்பது, நாக்கை வெளியே நீட்ட சொல்லி பார்ப்பது கூட உடலில் என்ன பிரச்சனை என்பதை அறியும் வழி தான்.

யோகா என்பது ஒரு உடற்பயிற்சி, ஆனால் அதில் குண்டலினி, குஷ்பு இட்லி என கல்லா கட்டும் சாமியார்கள் கல்லா கட்ட வைத்திருக்கும் இன்னொரு சப்ஜெக்ட் தான் ஆரா, தீவிர ஆன்மீகவாதிகள் அதன் உண்மை தன்மையை அறிய முடியாது, ஏன்னா கடவுள்னு ஒன்னு இல்லைன்னு சொன்னா நம்மை பைத்தியகாரன் மாதிரி தான் பார்ப்பார்கள், அப்படி தான் இதுவும்

பெருவெடிப்பு எப்படி தோன்றியிருக்கும் என சிந்திக்கும் போது இறுதியில் என் உடல் ஆர்கஸம் அடைந்தது போல் உணர்ந்தது, அது ஒன்றை கண்டுபிடித்தேன், அதை கற்பனையில் உணர்ந்தேன் என்ற எல்லையில்லா மகிழ்ச்சி உணர்வு, அதுக்காக நானும் சாமியார்மடம் ஆரம்பித்தால் என்னை விட ஏமாற்றுகாரன் யாரும் இருக்கமுடியாது. நீங்கள் உணர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் ஆரா அப்படி ஒரு நிலை தான், பகுத்தறிவு கொண்டு ஆராயாமல் எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்
 
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்