இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி. திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ 90 கி.மீ தூரத்தில் இருக்கிறது கொடைக்கானல். இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.
சிறப்புகள் :
அட்டகாசமான மலைவாச ஸ்தலம். சில்லென்று வீசும் காற்று, இதமான குளிர், தரையைத் தொடும் மேகங்கள் போன்ற மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது கொடைக்கானல்.
எழில் கொஞ்சும் அழகுடன், புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை 'மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன.
கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது.
எப்படி செல்வது?
திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும்.
பேருந்து வசதிகள் :
திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் பழனி ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரயில் :
கொடைரோடு ரயில் நிலையம் தான் கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம். கோயம்புத்தூர் சந்திப்பு கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் ஆகும்.
விமானம் :
மதுரை விமான நிலையம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை விமான நிலையங்கள் சேவையில் உள்ளது.
செல்லவேண்டிய நேரம் :
வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்.
எங்கு தங்குவது :
கொடைக்கானலில் பல்வேறு கட்டணங்களில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.
பார்க்கவேண்டிய இடங்கள். :
குறிஞ்சி ஆண்டவர் கோவில்
கொடைக்கானல் வீதி உணவு
பிரையண்ட் பார்க்
தொலைநோக்கிக் காப்பகம்
தூண் பாறைகள்
கொடைக்கானல் ஏரி
கவர்னர் தூண்
கோக்கர்ஸ் வாக்
அப்பர் லெக்
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான் சோலை
செண்பகனூர் அருங்காட்சியம்
டால்பின் னோஸ் பாறை
பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
பியர் சோலா நீர்வீழ்ச்சி
அமைதி பள்ளத்தாக்கு
செட்டியார் பூங்கா
படகுத் துறை
வெள்ளி நீர்வீழ்ச்சி
கால்ஃப் மைதானம்
தற்கொலை முனை
இதர சுற்றுலா தலங்கள் :
பேரணை
சிறுமலை
மலைக்கோட்டை
பழனி
திருமலைக்கேனி
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக