Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஜூன், 2019

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?


 யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


இணையத்தில் ஜிஃப் ரக ஃபைல்கள் சமீப காலங்களில் அதிகளவு பிரபலமாகி விட்டது. டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயவிகளில் ஜிஃப் பயன்பாடு பயனர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிலர் நிமிடங்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் நகைச்சுவை மிக்க ஜிஃப்களை உருவாக்கும் வகையில் இதன் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுதவிர இணையத்தில் இருந்தும் ஜிஃப்களை டவுன்லோடு செய்து அவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

ஜிஃப்களை உருவாக்குவது எப்படி?

ஆன்லைனில் ஜிஃப் உருவாக்க Gifs.com அல்லது Gifsrun.com வலைதளங்களை பயன்படுத்தலாம். இந்த தளங்களை கொண்டு யூடியூப் வீடியோக்களில் மிக எளிமையாக ஜிஃப் உருவாக்கலாம்.

யூடியூப் வீடியோவின் இணைய முகவரிக்கு சென்று GIF என்ற வார்த்தையை யூடியூப் வார்த்தைக்கு முன் டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது ஜிஃப்களுக்கான வலைதளம் திறக்கும். இங்கு யூடியூப் வீடியோவின் இணைய முகவரியை பேஸ்ட் செய்து அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

வீடியோவில் எந்த பகுதியில் இருந்து எதுவரை ஜிஃப் உருவாக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்துவிட்டு பின் ஜிஃப் பட்டனை உருவாக்கி அதற்கான தலைப்பை பதிவிட வேண்டும்.

இனி உருவாக்கப்பட்ட ஜிஃப் ஃபைலினை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதேபோன்று gifrun.com வலைதளத்தில் சர்ச் என்ஜின் தெரியும். அங்கு யூடியூப் வீடியோக்களை தேட முடியும். வீடியோக்களை தேடி முடித்த பின் வீடியோவை தேர்வு செய்து அவற்றை இடதுபுறத்தில் லோடு செய்ய வேண்டும். இணைய முகவரி ஏற்கனவே அங்கு இருக்கும் பட்சத்தில் அதனை ஜிஃப் ஃபைலாக உருவாக்க வீடியோ இணைய முகவரியை பேஸ்ட் செய்ய வேண்டும்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

 இனி வீடியோவின் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஜிஃப் ஃபைலாக மாற்றப்பட்டு இருக்கும். இனி ஜிஃப்- பார்த்து அதன்பின் அதனை உருவாக்க முடியும். அதனை மீண்டும் பார்க்க விரும்பும் பட்சத்தில் அவற்றை டவுன்லோடு செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக