இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிறுபான்மையினருக்கு எதிராக அருவருக்கத்தக்க கருத்தை சமூக
வலைதலங்களில் பகிர்ந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதிமன்றம்
ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சாதர் அஞ்சுமன் இஸ்லாமிய அமைப்பு கடந்த வாரம் பாரதி என்ற பெண் மீது பித்தோரிய காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இன ரீதியிலான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்வதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே பாரதி கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்றம் அப்பெண்ணிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் 5 பிரதிகளை மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் ஒரு பிரதியை புகாரளித்த சதார் அஞ்சுமன் அமைப்பிற்கும், மற்ற 4 பிரதிகளை வெவ்வேறு நூலகங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். அவர் வழங்கியதற்கான ரசீதை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் உள்ளது.
இதனிடையே நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை எனவும், இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் புகாருக்கு உள்ளான பாரதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ பேஸ்புக் பதிவை நான் பகிர மட்டுமே செய்தேன். அதனை பதிவிட்ட நபர் தான் முதலில் கைது செய்யப்பட வேண்டும். இன்று எனக்கு குரானை விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை ஒருவேளை நான் இஸ்லாமியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட சொல்லலாம்” என்று தெரிவித்தார்.
பாரதியின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், சிலர் அதற்கு எதிராக போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக