இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தடா என்றால் 'மலை' என்று பொருள்.
அதாவது மலையை போன்று ஆடாமல், அசையாமல் நேராக நிற்பதை இந்த ஆசனம் குறிக்கிறது.
மேலும் நின்ற நிலையில் செய்யப்படும் அனைத்து விதமான ஆசனங்களுக்கும் ஆரம்ப நிலை
தாடாசனம் ஆகும்.
செய்முறை:
- முதலில் குதிக்கால்களும், கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்கிற விதத்தில் பாதங்களை ஒட்டி வைத்து நேராக நிற்க வேண்டும்.
- கால் பாதங்கள் , மற்றும் கால் விரல்கள் தரையில் நன்றாக பதிந்து இருக்க வேண்டும்.
- முட்டியை மடக்க கூடாது. வயிற்றுப்பகுதியை உள்ளிழுத்தவாறு சாதாரண சுவாசத்தில் இருக்க வேண்டும்.
- வயிறு, மார்பு, கழுத்து போன்ற பகுதிகள் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
- கைகள் இரண்டும் உடலோடு ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
- உடல் எடையானது இரு பாதங்களுக்கும் சமமாக இருக்குமாறு நிற்க வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்:
- முதுகெலும்பு பலம் பெறுகிறது.
- இடுப்பு தசைகள் வலுப்பெறுகிறது.
- மார்புப்பகுதி விரிவடைகிறது.
- இடுப்பு மற்றும் வயிறு பகுதிக்கு பயிற்சி கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக