இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:
- உருளைக் கிழங்கு ஒன்று
- வெங்காயம் ஒன்று
- கீரை ஒரு கப்
- சாமை அரை கப்
- பூண்டு ஐந்து பல்
- சீரகம் கால் ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் நான்கு ஸ்பூன்
- மிளகுத் தூள் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- உருளைக் கிழங்கை நன்றாகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பூண்டுப் பற்களையும், வெங்காயத்தையும் கூட பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- (உங்களுக்கு பிடித்த) கீரையை ஆய்ந்து, மண் நீக்கிக் கழுவி, நறுக்கி ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே போல கொத்தமல்லியையும் மண் நீக்கி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- சாமையை ஊற வைத்துப் பின் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தண்ணீரை வடித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகிய இவற்றைப் பொன்னிறம் வரும் வரையில் நன்கு வறுக்கவும்.
- மேற்கண்டவை பாதி வதங்கிய மாத்திரத்தில் நறுக்கி வைத்த உருளைக் கிழங்கு, கீரை ஆகிய இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
- இப்போது முக்கால் வாசி வெந்த மாத்திரத்தில் தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பின்னர் நன்கு கிண்டி தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்த சாமையை இதனுடன் கலந்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
- பின்னர் மேற்கண்டவற்றில் இருந்து ஒரு பாதி பங்கை மட்டும் எடுத்து மிக்சியில் சிறிது ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த பாதியை ஏற்கனவே அடுப்பில் கொதித்துக் கொண்டு இருக்கும் பாதியுடன் கலந்து விடவும்.
- பின்னர் இறக்கி வைத்து மிளகுத் தூள், கொத்தமல்லி ஆகிய இவற்றை மேலே தூவி அருந்தவும்.
- இதோ இப்போது சுவையான சாமை, கீரை சூப் தயார்.
- கண் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாமை, கீரை சூப்பை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக