இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடும்போது அவர்களுக்கு நல்ல பசியெடுக்கும், நன்றாகவும் சாப்பிடுவார்கள். மேலும், அவர்கள் எல்லோருடன் சேர்ந்து விளையாடும்போது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
அந்த வகையில் குழந்தைகளின் மனதிற்கு உற்சாகமாக இருக்கும் விளையாட்டுகளில் ஒன்றான துள்ளித் தொடு ஆட்டம் ஆடுவோமா? விளையாட்டைப் பற்றி இன்று பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 20 குழந்தைகள் வரை ஒன்றுச் சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை தொடங்குவதற்கு முன் முதல் போட்டியாளரை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
பிறகு விளையாடும் போட்டியாளர்கள் அனைவரும் மைதானத்தின் நடுப்பகுதியில் வட்டமாக நின்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒருவர் முதுகை மற்றவர் பார்த்தப்படி திரும்பி நின்றுக் கொள்ள வேண்டும்.
பின்பு விளையாட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் இரு கைகளையும் இடுப்பில் வைத்தப்படி, 'வெள்ளை வாத்து துள்ளி வருது.. ஓரம்போ, ஓரம்போ..!" என்று குரல் கொடுத்தவாறு வட்டத்தைச் சுற்றி துள்ளித் துள்ளிக் குதித்தபடி, மெதுவாகச் சுற்றி வர வேண்டும்.
இவ்வாறு முதல் போட்டியாளரும் அவருடைய இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி துள்ளித் துள்ளி வர வேண்டும். இந்த மாதிரி வட்டத்தைச் சுற்றி வருபவர்களில் யாரையாவது ஒருவரை முதல் போட்டியாளர் தொட வேண்டும்.
மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் உடனே 'வாத்துக் குஞ்சைத் தூக்கிப் போறான்.. காவல்காரன் கையைப் பிடி..!" என்று உரைக்க சொல்லிவிட்டு, வட்டத்தை சுற்றி வருவதை நிறுத்தி விட்டு, அப்படியே நின்றுக் கொள்ள வேண்டும்.
வட்டத்தில் இருக்கும் மீதமுள்ள போட்டியாளர்களில் முதல் போட்டியாளர் யாரைத் தொட்டரோ அவர் துள்ளித் துள்ளிக் குதித்தபடியே வேகமாகச் தூரத்திச் சென்று முதல் போட்டியாளரை தொட வேண்டும்.
முதல் போட்டியாளரும் துள்ளித் துள்ளிக் குதித்தபடியே வட்டத்தை சுற்றி வர வேண்டும். அதன்பின் தான் தொட்டவர் நின்ற அதே இடத்தில் நின்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த இடத்தில் முதல் போட்டியாளர் வேகமாய் சென்று நிற்பதற்கு முன்பு மீதமுள்ள போட்டியாளர்கள் அவரைத் தொட்டு விட்டால் அவுட் ஆகிவிடுவார்.
அவுட் ஆகாமல் முதல் போட்டியாளர் வந்து நின்று விட்டால் அவர் யாரைத் தொட்டரோ அவர் முதல் போட்டியாளராக மாறி இந்த விளையாட்டை இதே மாதிரி விளையாட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக