Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஆங்கில முற்றுப்புள்ளி (Full Stop or Period)


Image result for ஆங்கில முற்றுப்புள்ளி (Full Stop or Period)
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




முற்றுப்புள்ளி என்பதை பிரித்தானிய ஆங்கிலத்தில் "Full stop" என்றும், சில சமயங்களில் "Full point" என்றும் அழைக்கின்றனர். அமெரிக்க ஆங்கிலத்தில் "Period" என்று அழைப்பர்.

முற்றுப்புள்ளியின் பயன்பாடுகள்

01. ஒரு வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி  பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

I can speak in English.
எனக்கு ஆங்கிலத்தில் பேச முடியும்.

Tamil is a classical language.
தமிழ் ஒரு செம்மொழி.

02. ஆங்கிலச் சொற்களை சுருக்கப்பயன்பாடாக (Abbreviations) எழுத்தில் குறிக்கும் பொழுது இந்த முற்றுப்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Jan.
e.g.
a.m.
p.m.
etc.

03. இணைய முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் திகதி போன்றவற்றை எழுதும் பொழுது இடப்படும் புள்ளியை "முற்றுப்புள்ளி" என்று அழைப்பதில்லை. அதனை "புள்ளி" என்றே அழைக்கவேண்டும். ஆங்கிலத்தில் "dot" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

oorkodangi.blogspot.com
oorkodangi@gmail.com
02.08.2019

குறிப்பு

நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாட்டை Aristophanes of Byzantium என்பவரே கிரேக்க மொழியில் அறிமுகப்படுத்தினார். அவரே முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். அதனைத்தொடர்ந்து அதன் பயன்பாடு மருவி வெவ்வேறு மொழிகளில் இடம் பெறத்தொடங்கின. அவ்வாறே ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் எமது பயன்பாட்டிலும் வந்தடைந்துள்ளது.

இருப்பினும் ஒரு வாக்கியத்தின் முடிவை குறிக்க பயன்படும் முற்றுப்புள்ளிக்கு பதிலாக; யப்பான் சீன மொழிகளில் ஒரு சிறிய வட்டம் "
" இடப்படுகின்றது. (Chinese and Japanese, a small circle is used instead of a solid dot: "") பாக்கிஸ்தானிய உருது மொழியில் ஒரு சிறிய கிடைக்கோடு இடப்படுகின்றது. (Urdu uses "۔")

ஏனைய நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடுகள் தொடர்ந்து வரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக