இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தபாலில் வந்த தபாலைப் படித்துப்
பார்த்த தலைமை ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்தார். டீச்சர்ஸ் மீட்டிங் போட்டு இது
பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இந்த தபால் சம்பந்தமாக தான் மட்டும்
ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மீண்டும்
மீண்டும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். உடனடியாக சுற்றறிக்கை நோட்டில்
மதியம் ஒரு மணிக்கு டீச்சர்ஸ் மீட்டிங் என்ற தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும்
அனுப்பி வைத்தார்.
மதியம் ஒரு மணிக்கு ஆசிரியர்கள் தலைமை
ஆசிரியர் அலுவலகத்திற்கு வந்தனர். நடுநிலைப்பள்ளி, ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு
பிரிவுகள் உண்டு. ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். ஒருவர் சொன்னார் ஆண்டு
விழவாக இருக்கும், அது பற்றி பேசவே அழைக்கப்பட்டிருக்கிறோம். இக்கருத்தை
மறுக்காமலே ஒரு வேளை கல்விச் சுற்றுலாவாக இருக்குமோ என்றார், ஒருவர். இவ்வாறு
பேசிக் கொண்டிருக்கும் போது தலைமை ஆசிரியர் உள்ளே நுழைந்து அனைவருக்கும் வணக்கம்
சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த தபாலைக் காட்டிப் பேச ஆரம்பித்தார். கடந்த
ஓராண்டு காலமாக நம் தமிழ் நாட்டில் மனித உரிமை கழகம் சார்பில் ஆசிரியர்களுக்குப்
பயிற்சி வகுப்புகள் பல கட்டமாக நடத்தப்பட்டது. அதில் அனைத்து ஆசிரியர்களும்
பயிற்சி பெற்று மாணவர்களுக்கும் மனித உரிமை பற்றி பயிற்சியளித்திருக்கிறோம்.
ஓராண்டுப் பயிற்சி நிறைவுற்ற நிலையில், மாநில அளவில் போட்டி
அறிவித்திருக்கிறார்கள். போட்டியானது நாடகக் கலை வடிவில் இருக்க வேண்டும்.
நடிப்பின் மூலம் மனித உரிமை எவ்வாறு மீறப்படுகிறது, அதற்கு என்ன தீர்வு என்று
சுட்டிக்காட்ட வேண்டும்.
சமுதாயத்தில் பல்வேறு மாவட்டங்களில்
மனித உரிமை மீறல்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதில் ஏதாவது ஒன்றை எடுத்து ஐந்து நிமிட
நேரத்தில் நடித்துக் காட்ட வேண்டும். பங்கு பெறுவோர் ஒரு ஆசிரியர் இரண்டு
மாணவர்கள் அல்லது மாணவியர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் போட்டியின்
விதி. பதினைந்து நாட்கள் கால அவகாசம் இருக்கிறது. ஆசிரியர்களில் ஒருவர் நீங்களாகவே
முன் வந்தால் நன்றாக இருக்கும். மாநில அளவிலான போட்டி என்றாலும் முதலில் மண்டல
அளவில் போட்டி நடைபெறும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய ஐந்தும்
மண்டலமாகும். நமக்கு மதுரை மண்டலம். போட்டிக்கு தயார் செய்யும் ஆசிரியருக்கு
மற்றவர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். பேசி முடித்தார் தலைமை
ஆசிரியர்.
தலைமை ஆசிரியரின் முகத்தை நேருக்கு
நேர் பார்க்காமல் ஆசிரியர்களில் சிலர் கீழே பார்த்துக்கொண்டும், சிலர் எங்கோ
பார்த்தும்கொண்டும் இருந்தனர். மாணவர்கள் நம்மிடம் படிக்க வந்திருக்கிறார்கள்,
இல்ல நல்ல நடிக்க வந்திருக்கிறார்களா! இதெல்லாம் நமக்குத் தேவையா? என்பது போல்
சிலருடைய முகம் மாறியிருந்தது.
தலைமை ஆசிரியரின் இந்த முயற்சி
பலிக்கவில்லை அவருடைய எண்ணத்தில் உடனே வந்தவர் ஆசிரியர் சிகாமணி. அதனால் தலைமை
ஆசிரியர் நீங்கள் போட்டிக்கு மாணவர்களைத் தயார் செய்யுங்கள் என்;று சிகாமணியைப்
பார்த்து சொன்னார்.
பதிலுக்கு சிகாமணி, சார் நானே
அடிக்கடி இது போன்ற கலைப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்து அழைத்துச்
செல்கிறேன். அதனால் மற்ற ஆசிரியர்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள் என்றார்.
ம்க்கும்... எதுக்கெடுத்தாலும்
முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு நிப்பாரு. சும்மா பேச்சிக்கு ஆசை இல்லாத
மாதிரி நடிப்பாரு என்று மனசுக்குள் ஒரு ஆசிரியர் நினைப்பதை அவரது கண்ணும் முக
பாவனையும் காட்டியது.
இன்னொரு ஆசிரியை பக்கத்திலிருக்கும்
ஆசிரியையிடம் சொன்னார், இந்த எச்.எம்-க்கு வேற வேலையே இல்ல, அங்க போட்டிக்கு
போகனும், இங்க போட்டிக்கு போகனும்ன்னு உயிர எடுப்பாரு. வேனும்ன்னா இவரு
கூட்டிக்கிட்டு போக வேண்டியதுதான. சும்மா சும்மா நம்மளையேப் போட்டு டார்ச்சர்
பன்னிக்கிட்டு இருக்காரு.
ஆமாம் டீச்சர், முதல்ல இவரு மேல ஒரு
கம்ப்ளைன்ட் பண்ணி டிரான்ஸ்பர் பன்னனும். வந்தோமா, வேலையைப் பாத்தோமான்னு இல்லாம
கலைப் போட்டி, அறிவியல் கண்காட்சி என்று நம்மள நிம்மதியா இருக்க
விடமாட்டேங்கிறாரு.
டீச்சர்ஸ் இது பற்றி வேறு ஏதேனும்
கருத்த சொல்றதுன்னா சொல்லுங்க. ஐந்து நிமிடம் நடிக்கிறது மாதிரி ஏதேனும்
ஸ்கிரிப்ட்; இருந்தாலோ அல்லது ஜடியா இருந்தாலோ அப்புறமா சொல்லுங்க. நன்றி என்று
சொல்லி ஆசிரியர்களை அனுப்பி விட்டு சிகாமணி சாரை மட்டும் நிற்கச் சொன்னார்.
சிகாமணி சார், இந்த மாதிரி சவாலான
போட்டிகளுக்கெல்லாம் நீங்க தான் சரியான நபர். உங்கள் திறமையைப் பற்றி நான்
மட்டுமல்ல நம்முடைய பள்ளி ஆசிரியர்கள் எல்லோருக்கும் தெரியும். உங்க மேல எனக்கு
நம்பிக்கை இருக்கு. நீங்க எந்த மாணவர்களை வேண்டுமனாலும், எந்த வகுப்பு மாணவர்கள்
வேண்டுமனாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு பரிசு முக்கியமல்ல பங்கெடுப்பு
இல்லாமல் பரிசு இல்லை.
சார் நான் என்ன சொல்ல வர்றேன்னா…
என்று சிகாமணி சார் ஏதோ சொல்லும் முன்... சார் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு
எனக்கு நல்லாத் தெரியும். மற்ற ஆசிரியர்கள் என்ன பேசிக்குவாங்கன்னு பயப்படுறீங்க.
நீங்க ஒன்றும் பயப்படதேவையில்லை. அவங்க குறை பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்,
நமக்கு முக்கியம் நம்ம மாணவர்களின் கலைத்திறன், அவங்களுக்கு நாம இதன் மூலம்
கொடுப்பது முயற்சியும், நம்பிக்கையும்.
சார் என் மீது நீங்க வைத்திருக்கிற
நம்பிக்கைக்கு நன்றி. என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் சிகாமணி சார்.
தலைமை ஆசிரியருக்கு பாரம் இறங்கியது.
சிகாமணி ஆசிரியருக்கோ பாரம் அதிகமாகியது. மனித உரிமை மீறல் சம்பந்தமான கதை எழுத
வேண்டும் அல்லது யாரவது எழுதிய கதையோ, நாடகமோ பொருத்தமாக கிடைக்க வேண்டும்.
நடிப்பு மட்டும் இருந்தாப் போதாது. அதைப் போல சிறந்த நாடகம் மட்டும் இருந்தாப்
போதாது. நாடகமும் நடிப்பும் பொருந்திப் போக வேண்டும். ஒவ்வொன்றையும் நினைக்கிற
போது தான் மாணவர்களைப் போட்டிக்கு தாயார் செய்வது எவ்வளவு பாரமானது என்று, சிகாமணி
சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்.
சாப்பிடும் போதும் நாடகம் பற்றிய
சிந்தனை, படுக்கும் போதும் அதே சிந்தனை. மனைவி குழந்தைகளுடன் உறவாடிக்
கொண்டிருந்தாலும் சிந்தையில் போட்டிக்கான நாடக தேர்வே நடமாடிக் கொண்டிருந்தது.
ஓய்வாக இருக்கும் போதெல்லாம்
சிறுகதைப் புத்தக்கங்கள், சிறு, குறு நாடக புத்தகங்கள் போன்ற புத்தகங்களை நூலகம்
சென்று தேடித் தேடிப் படித்துப் பார்த்தார். 'அப்பாடா எத்தனை எத்தனைக் கோணங்களில்
கதை எழுதியிருக்கிறார்கள். ஒல்வொன்றும் ஒவ்வொரு பாடம் சொல்கிறது. ஒரு கதைத்
தேர்வுக்காக எத்தனை விதவிதமான கதைகளைப் படித்து விடட்டேன்". நூலகத்தின்
அலமாறியில் இருக்கிற புத்தகங்கள் எல்லாம் 'சிறு குழந்தைகள் இரு கைகளையும் உயர்த்தி
என்னைத் தூக்கி கொஞ்ச மாட்டீர்களா என்று ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல"
சிகாமணிசாரைப் பார்த்து ஏங்குவது போல் இருந்தது.
பறிபோன என்று உரிமை என்ற தலைப்பில்
இருந்த புத்தகத்தை எடுத்தார். அதில் ஒரு சிறு குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை ஒரு பெண்
குழந்தை. ஆண் குழந்தைக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை, பெண் குழந்தைக்கு உரிமை
மறுப்பு. இந்தக் கதை எல்லா வீடுகளிலும் கிட்டத்தட்ட நடந்தாலும், பெண் குழந்தைகள்
கூட இது தான் எதார்த்தம் என்று புரிதலோடு நடந்து கொள்ளும் ஒரு சிறந்தக் கதையைத்
தேர்வு செய்தார். அத்தோடு தனது கருத்தையும் அதில் ஏற்றி சிறு நாடகம் ஒன்றை எழுதி
முடித்தார்.
நாடகம் தயார். இனிமேல் அந்த கதாப்
பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான ஒரு மாணவனும், ஒரு மாணவியும் தேர்வு செய்ய
வேண்டும். பள்ளியில் நடக்கும் இலக்கிய மன்ற விழாக்கள், ஆண்டு விழா போன்ற விழாக்களில்
அடிக்கடி நடக்கும் திறமையான மாணவர்களைத் தேர்வு செய்வதா? அல்லது கதையில் வரும்
பாத்திரங்கள் போல் பாதிக்கப்படும் மாணவ-மாணவியரைத் தேர்வு செய்வதா என்று சிந்தனையை
முடுக்கிவிட்டிருந்தார் சிகாமணி சார். ஒவ்வொரு மாணவர்களாக மனதில் வலம் வரச் செய்து
தேர்வு செய்யும் பணியை ஆயத்தப் பணியாகச் செய்து கொண்டிருந்தார்.
சார் இந்த சிகாமணியைப் பாருங்க. இவர்
தான் இந்த ஸ்கூலயே தூக்கி நிறுத்த வந்த பிரம்மான்னு நினைப்பு. இவருக்கு என்ன பெரிய
கேடயமா கொடுக்க போறாங்க.
ஆமா சார் இந்த எச்.எம். அதுக்கு மேல.
என்னமோ சிகாமணிக்கு மட்டும்தான் திறமை இருக்கிறது மாதிரியும், நம்மெல்லாம்
சோப்ளாங்கி மாதிரியும் தெரியுது. இது தேவையில்லாத வேலை. போட்டிக்குப் போகலைன்னா
ஏன் போகலைன்னு யாரும் கேட்கப் போறாங்களா என்ன? வேலையத்த மாமியா மருமகன தொட்டில்ல
போட்டு தாலாட்டினாளாம் அந்தக் கதையா இருக்கு இந்த எச்.எம் பன்ற வேலை.
சார்...சார்... அதோ வர்றான், ஆல் இன்
ஆல் அழகு ராஜா சிகாமணி என்று இரண்டு ஆசிரியர்களும் பேசிக் கொள்கின்றனர்.
ஒரு மாணவன் சிகாமணி சாரைப் பார்த்து
ஓடி வந்தான். சார் உங்கள எச்.எம் சார் கூப்பிட்டாங்க.
எச்.எம் சாரிடம் வந்த சிகாமணி வணக்கம்
சொன்னார். பதிலுக்கு எச்.எம் வணக்கம் சொல்லி விட்டு 'சார் போட்டிக்கு மாணவர்கள
தயார் படுத்திட்டீங்களா? நாடகம் ரெடியா? என்றார்.
நாடகம் ரெடி பண்ணிட்டேன் சார்.
மாணவர்களத்தான் இன்றைக்கு தேர்வு செய்து நாடகம் சொல்லிக் கொடுத்து தயார் செய்யனும்.
நான் எடுத்திருக்கிற தீமுக்கு எட்டாம் வகுப்பு 'ஆ" பரிவுல இருக்கிற உhவும்,
சேகரும் சரியா இருப்பாங்க. அதனால அவங்க ரெண்டு பேரையும் நாடகத்துக்கு
எடுக்கலாம்ன்னு இருக்கேன்.
சரி சார் உங்களுக்கு யார் இந்த
நாடகத்துக்குப் பொருத்தம்ன்னு நினைக்கிறீங்களோ தேர்வு செய்யுங்க. மேலும் என்ன
உதவின்னாலும் கேளுங்க. இதுல முழு சுதந்திரம் உங்களுக்கு எப்ப வேனும்ன்னாலும்
பயிற்சி கொடுங்க, என்றார். தலைமை ஆசிரியர்.
தேங்க்யூ சார் என்று விடை பெற்றார்.
சிகாமணி எட்டாம் வகுப்பு 'ஆ" பிரிவில் ஆசிரியை திலகவதி இருந்தார். அவர்தான்
வகுப்பாசிரியை. பள்ளியில் மூத்த ஆசிரியையும் அவர் தான்.
எட்டாம் வகுப்பு ஆ பிரிவில் படிக்கிற
உhவையும், சேகரையும் தேர்வு செய்வதற்காக வகுப்பு வாசலுக்கு வந்தார்.
ஆசிரியை திலகவதிக்கு வணக்கம்
சொன்னார். பதிலுக்கு வணக்கம் சொன்ன ஆசிரியை திலகவதி என்ன சிகாமணி சார். என்ன வியம்
என்றார்.
டீச்சர் உங்க வகுப்பில இருக்கிற
உhவையும், சேகரையும் தான் இந்த நாடக கலைப் போட்டிக்கு தேர்வு செய்திருக்கிறேன்.
அவங்கள தான் இந்த நாடக கதாபாத்திரங்களுக்கு பொருத்தமா இருப்பாங்க. அதனால அவங்க
ரெண்டு பேருக்கும் நாடகம் பயிற்சி கொடுக்கனும். கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா
என்று கேட்டார். இதைக் கேட்டதும் உhவுக்கும், சேகருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி
முகத்தில் சந்தோம் தொற்றிக் கொண்டது.
சிகாமணி சார் அவங்க இங்க
வந்திருக்கிறது பாடம் படிக்க. நாடகம் நடிக்க இல்ல. பரிட்சையில மார்க்கு குறைஞ்சா
பேரண்ட்ஸ் உங்கள கேக்க மாட்டாங்க. என்னையத் தான் கேப்பாங்க. அதனால நீங்க வேற
கிளாஸ்ல போயி வேற யாரையாவது கூப்பிட்டு நடிப்பு சொல்லிக் கொடுங்க, என்றார் திலகவதி
கண்டிப்புடன்.
இல்ல டீச்சர் அவங்ககிட்டே ஒரு
வார்த்தை கேட்டுப் பார்போம். அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேற மாணவர்களைத்
தேர்வு செய்யலாம்.
சார் சொன்னா புரியதா உங்களுக்கு.
அவங்களுக்கு என்ன தெரியும். நாடகம் நடிக்கறேன்னு சொல்லி வகுப்ப கட்டடிச்சிட்டு
படிப்ப கோட்டை விட்டிருவாங்க. நீங்க வேற யாரையாவது கூத்தடிக்கிற மக்குகல வேற
வகுப்பில போயி பாருங்க என்று சொல்லி விட்டு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார் பதிலை
எதிர் பாராமல்.
வருத்தம் இருந்தாலும் சிகாமணி வேறு
வகுப்பில் இரண்டு பேரைத் தேர்வு செய்து, பயிற்சி கொடுக்க அழைத்துக் கொண்டு போனார்
ஆசிரியர், ஓய்வு அறைக்கு.
எதிரே வராண்டாவில் நடந்து வந்த தலைமை
ஆசிரியர் சிகாமணி சாரிடம், சார் நாடகத்துக்கு உhவையும், சேகரையும் தேர்வு
செய்திருப்பதாக சொன்னீர்கள், ஆனால் வேறு இரு மாணவர்களைத் தேர்வு
செய்திருக்கிறீர்கள் என்றார்.
ஆமா சார், நான் மனித உரிமை மீறல்
பற்றிய செய்திக்கு நூலகத்திலயும், புத்தகங்கள்லயும் கருத்து தேடினேன். உரிமை மீறல்
வீடுகளிலும், சமுதாயத்தில் பிற வீடுகளிலும் மீறப்படுவதாக நினைத்திருந்தேன்;. ஆனால்
பள்ளிக்கூடத்திலே மீறப்படுவதை யார் தடுப்பது. ஒரு மாணவனுக்குக் கிடைக்கிற
வாய்ப்பைத் தடுப்பதும் மனித உரிமை மீறல் தானே.
தலைமை ஆசிரியர் புரிந்து கொண்டார்.
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக