இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமராவதி
அணை தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி நகரில் இந்திரா காந்தி
வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது.
அமராவதி நீர்த்தேக்கமானது 9.31 சதுர கி.மீ.
பரப்பளவும், 33.53 மீ ஆழமும், 90 அடி உயரமும் கொண்டது.
இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு மற்றும் கரூர்
ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.
சிறப்புகள் :
திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின்
குறுக்கே 1957ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டப்பட்டது.
இந்த
அணை வேளாண்மைக்காகவும், வெள்ளக் கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக்
கட்டப்பட்டது.
இங்கு மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள்
பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை மீன்பிடிக்க முடிகிறது.
ஆண்டுக்கு
110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டில் ஹெக்டேர்
ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச் சூழலில்
வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் பண்ணை உள்ளது. சேற்று முதலைகள் என
அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு
வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37
சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இவை மீன்கள், ஊர்வன மற்றும்
பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன.
நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின்
முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன.
இங்கு
சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம்.
அமராவதி
அணையில் மிகச்சிறந்த முறையில் அழகான பூங்காவொன்று அமைந்துள்ளது. இந்த விளையாட்டுப்
பூங்கா பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்விக்கும் தன்மை கொண்டுள்ளது.
இவ்வணையில்
உள்ள செங்குத்தான படிக்கட்டுகளில் சென்று வடக்கு பகுதியில் உள்ள சமவெளி
பகுதியையும், தெற்குப் பகுதியில் உள்ள ஆனைமலை மற்றும் பழனிமலை அழகைக் காண
முடிகிறது.
மேற்குத்
தொடர்ச்சி மலையின் பசுமைக் காட்சி வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து
வருகிறது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அணைக்கட்டு
அழகிய
பூங்கா
மீன்பிடி
தலம்
முதலை
பண்ணை
எப்படிச் செல்வது?
கோயம்புத்தூரில்
இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 94கி.மீ. தொலைவில் உள்ள அமராவதி அணைக்கு
திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான
பேருந்து வசதிகள் உள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக