Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 செப்டம்பர், 2019

USB 1.0, USB 2.0 மற்றும் USB 3.0-க்கு இடையே அப்படி என்னதான் வித்தியாசம்?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஒரு யூ.எஸ்.பி-ஐ அதன் வண்ணத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? இப்படி உங்களுக்கு தெரியாத விடயங்கள் நிறைய இருக்கிறது!


USB 1.0, USB 2.0 மற்றும் USB 3.0-க்கு இடையே அப்படி என்னதான் வித்தியாசம்?
நம்மில் பலருக்கு USB என்பதின் விரிவாக்கம் ஆனது Universal Serial Bus என்பது மட்டுமே தெரிந்து இருக்கலாம். இன்னும் சிலருக்கு அதுகூட தெரியாமல் இருக்கலாம். கவலையை விடுங்கள்! யூ.எஸ்.பி-ஐ பற்றி தெரியாமல் இருப்பதொன்றும் பெரிய தேசியக்குற்றம் அல்ல.

ஆனால் பள்ளி சிறுவர்களுக்கு கூட தெரிந்த ஒரு விடயம், நமக்கு தெரியவில்லை என்பது தெரிந்தும் கூட அதை கற்றுக்கொள்ளமால் இருந்தால் அது நிச்சயமாக ஒரு "குற்றம்" தான்!

இக்கட்டுரையின் வழியாக யூ.எஸ்.பி 1.0 என்றால் என்ன? யூ.எஸ்.பி 2.0 என்றால் என்ன? யூ.எஸ்.பி 3.0 என்றால் என்ன? இவைகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன, வேறுபாடு என்ன? என்பதை பற்றி அலச போகிறோம்.

யூ.எஸ்.பி 1.0, 2.0 மற்றும் 3.0 தலைமுறைகளுக்கு இடையே பல "வேறுபட்ட வேறுபாடுகள்" உள்ளன, அவற்றில் வேகம், பரிமாணங்கள், பொருந்தக்கூடிய தன்மை மற்றும் வேறு சில அம்சங்கள் வேறுபடுகின்றன.

வண்ணத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்!

பொதுவாக, யூ.எஸ்.பி 1.0, யூ.எஸ்.பி 2.0 மற்றும் யூ.எஸ்.பி 3.0-க்கு இடையிலான வித்தியாசத்தை வண்ணத்தை வைத்தே சொல்ல முடியும். அளவு மற்றும் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட சாதனத்தின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக்கின் நிறத்தைப் பார்ப்பது முக்கியம்.

யூ.எஸ்.பி 1.0 ஆனது வெள்ளை பிளாஸ்டிக் நிறத்தையும், யூ.எஸ்.பி 2.0 ஆனது கருப்பு நிறத்திலும், யூ.எஸ்.பி 3.0 ஆனது நீல நிறத்திலும் காணப்படும். எப்போதாவது நீங்கள் ஒரு யூ.எஸ்.பி-ஐ சிவப்பு நிற பிளாஸ்டிக்கில் காணலாம். அது Standby அல்லது Sleep mode-ல் இருந்தாலும் கூட எதையும் பொருட்படுத்தாமல் எல்லா நேரங்களிலும் செயலில் இருக்கும் என்பதை குறிக்கப் பயன்படுகிறது.

தரவு பரிமாற்ற விகிதங்கள் (Data Transfer Rates)

யூ.எஸ்.பி 1.0-ன் தரவு பரிமாற்ற வேகமானது வினாடிக்கு 12 எம்பி மட்டுமே இருந்தது, பின்னர் யூ.எஸ்.பி 2.0-ன் உடன் அதன் வேகம் வினாடிக்கு 480எம்பி ஆக முன்னேறியது. பின்னரே யூ.எஸ்.பி 3.0 மற்றும் 3.1 அந்த இந்த வேகத்தை முறையே வினாடிக்கு 5 ஜிபி மற்றும் வினாடிக்கு 10 ஜிபி வரை கொண்டு வந்துள்ளன.

திசைகள் (Directions)

தரவு பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, யூ.எஸ்.பி 2.0 மற்றும் பழைய மாதிரிகள் ஆனது ஒரே நேரத்தில் ஒரே திசையில் (Single direction) மட்டுமே தரவைச் செயலாக்கும் திறனை கொண்டுள்ளன. ஆனால் புதிய 3.0 மற்றும் 3.1 மாதிரிகள் ஆனது இரு திசைகளிலும் (Both direction) தரவு பரிமாற்றத்தை அனுமதிக்கின்றன. அதாவது சமீபத்திய ஃபிளாஷ் டிரைவ்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் தரவை அனுப்பவும், பெறவும் முடியும் என்று அர்த்தம்.

இடைப்பட்ட 2.0 மற்றும் அதற்கு மேற்பட்ட தலைமுறை யூ.எஸ்.பி-ஆல் ஒரே நேரத்தில் தரவை அனுப்பவோ அல்லது தரவை பெறவோ மட்டும் தான் முடியும். இதற்குக் காரணம், 2.0 ஆனது Half duplex data transmission முறையைப் பயன்படுத்துகிறது. பின்னர் வந்த 3.0 மற்றும் புதியவைகள் ஆனது Full duplex data transmission முறையைப் பயன்படுத்துகின்றன.

சக்தி நிலைகள் (Power Levels)

யூ.எஸ்.பி 2.0 மற்றும் யூ.எஸ்.பி 3.0 ஆகிய இரண்டும் 5V, 1.8A, கொண்டு இயங்குகின்றன, ஆனால் யூ.எஸ்.பி 3.1 ஆனது அதை 20V, 5A,20 ஆக உயர்த்தி உள்ளது, இதனால் பயனர்களால் பெரிய சாதனங்களை இயக்க முடிகிறது.

என்கோடிங் திறன்கள் (Encoding Capabilities)

2.0 வரையிலான யூ.எஸ்.பி பதிப்புகள் ஆனது யூனிகோடை (Unicode) அவற்றின் குறியாக்க முறையாகப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் 3.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் ஆனது 8b /10b குறியாக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

கம்பி வகை மற்றும் கேபிள் நீளம் (Wire and Cable Length)

யூ.எஸ்.பி 2.0 சாதனங்களின் கேபிள் நீளம் ஆனது அதிகபட்சமாக 16' 5" வரை இருக்கலாம், ஆனால் 3.0 சாதனங்களோ அதிகபட்சம் 9’10" வரை நீள முடியும். இந்த கேபிள்களின் நீளத்தை நீட்டிக்க வேண்டுமானால், நீங்கள் ஒரு Hub அல்லது பிற இணைப்பைப் பயன்படுத்த வேண்டும்.

உள்ளே இருக்கும் வயரிங்கை வைத்தும் யூ.எஸ்.பி தலைமுறைகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை கண்டுபிடிக்கலாம். 2.0 தலைமுறை ஃபிளாஷ் டிரைவ்களில் 4 செப்பு கம்பிகள் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் 3.0 மாடல்களில் 9 செப்பு கம்பிகள் உள்ளன.

ஸ்லாட்களை மாற்றினால் என்னவாகும்? அதாவது யூ.எஸ்.பி 3.0 மற்றும் யூ.எஸ்.பி 3.1 சாதனங்களை 2.0 ஸ்லாட்களுடன் இணைக்க முடியுமா?

நிச்சயமாக முடியும்! யூ.எஸ்.பி 3.0 மற்றும் யூ.எஸ்.பி 3.1 சாதனங்களை 2.0 ஸ்லாட்களுடன் இணைக்க முடியும், ஆனால் அதன் வேகம் யூ.எஸ்.பி 2.0-ஐ மட்டுமே எட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதேபோல் யூ.எஸ்.பி 2.0 சாதனங்களை உங்களால் யூ.எஸ்.பி 3.0 போர்ட்களுடனும் இணைக்க முடியும்.

எதை பயன்படுத்துவது நல்லது?

இப்போது, இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்லலாம், இருந்தாலும் நாங்கள் சொல்கிறோம்! வேகமான தரவு பரிமாற்ற விகிதங்கள் மற்றும் ஒரே நேரத்தில் தரவை அனுப்பும் மற்றும் பெறும் திறனை பெற விரும்பினால் - யூ.எஸ்.பி 3.0 அல்லது அதற்கு மேலான சாதனத்தை தான் பயன்படுத்த வேண்டும். இது யூ.எஸ்.பி பற்றிய அடிப்படை அறிவை வழங்கும் கட்டுரை என்பதல் இங்கே யூ.எஸ்.பி 4.0-ஐ பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக