இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலம் என்கிற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீலக்ஷ்மி குபேரர் கோவில். இந்த லக்ஷ்மி குபேரர் கோவில்தான் குபேரனுக்கு என்று தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட உலகின் முதல் கோவில் என்றும் சொல்லப்படுகிறது. 5 அடுக்கு கோபுரத்துடன் அழகாக இக்கோவில் அமைந்துள்ளது.
மூலவர் : லட்சுமி குபேரர்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
ஊர் : ரத்தினமங்கலம்
தலச் சிறப்பு :
லட்சுமி குபேரன் கோவிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன். இந்த காட்சியைப் பார்ப்பதே பரவசத்தை ஏற்படுத்தும். அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நம்பிக்கை.
தல வரலாறு :
பிரம்மா, ஆக்கலின் அதிகாரம் கொண்ட இறைவன். இவரின் புத்திரன் விஸ்வரா ஆவார். விஸ்வராவின் மைந்தன் குபேரர். குபேரனின் மாற்றாந்தாயின் மகன் இராவணன். இலங்கையின் முதல் அரசன் குபேரன் ஆவார். குபேரன், வைர வைடூரியங்களுடன், புஷ்பக விமானத்தில் ஏறி வானத்தில் பறந்து செல்லுகையில், வானமே பிரகாசமாக ஒளிர் விட்டு தெரியுமாம். இராவணன் குபேரனிட மிருந்து இலங்கையை கைப்பற்றியதால், குபேரன் இலங்கையை விட்டு சென்றபின்பு அனைத்து சங்கடங்களையும் அனுபவித்து, உயிர் துறக்க நேரிட்டதாம். குபேரன் சிவனிடம் அதிகம் பக்தி கொண்டவர். ஒரு முறை குபேரன் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க சென்றார். சிவபெருமானையும், அன்னை பார்வதி தேவியையும் அருகில் கண்ட குபேரருக்கு, அன்னை பார்வதி தேவியின் அழகைக்கண்டு பிரமித்து, இவ்வளவு அழகுமிக்க தேவியை இதுவரை நான் தரிசிக்கவில்லையே என எண்ணினார். அப்போது தன்னை மறந்து ஒரு கண்ணை சிமிட்டினார், குபேரர்.
அதைக்கண்ட, பார்வதி தேவி கோபம் கொண்டு, தன்னை தவறான நோக்கத்தோடு பார்ப்பதாக எண்ணி, குபேரனின், சிமிட்டிய கண்ணை வெடித்து சிதற வைத்தார். பார்வையை இழந்த குபேரன், சிவபெருமானிடமும், பார்வதி தேவியிடமும், தான் எந்த விதமான கெட்ட எண்ணத்தோடும் அன்னையை பார்க்கவில்லை என்றும், தன்னை மன்னித்து அருள வேண்டும் என்றும் வேண்டினார். சிவபெருமான், இதை பற்றி, பார்வதிதான் முடிவு எடுக்கவேண்டும் என்று கூறினார். பார்வதி தேவியும், உண்மையை புரிந்து, குபேரனை மன்னித்து, இழந்த கண்ணுக்கு மாற்று கண் கொடுத்தார். ஆனால் அந்த கண் அளவில் சிறியதாக அமைந்துவிட்டது. குபேரன் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம். குபேரனுடைய பக்தியை மெச்சி, எட்டு திசைகளில், ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி. செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதி ஆக்கினாராம்.
திருவிழாக்கள் :
தீபாவளி சிறப்பு பூஜைகள்
வைகுண்ட ஏகாதசி
அட்சய திருதியை
பிராத்தனை :
இக்கோவிலுக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வந்தால் இல்லங்களில் செல்வம் கொழிக்கும், உள்ளங்களில் மகிழ்ச்சி திளைக்கும்.
செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும்.
திருப்பதிக்கு செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரன் கோவிலுக்குச் சென்று லட்சுமி குபேரனை வழிபட்டுச் செல்வதும் மிகுந்த விசேஷமாகும்.
அட்சய திரிதியை தினத்தன்று இந்த கோவிலில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக