இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சந்திரமுகி
திரைப்படத்தில் பகலில் நார்மலான கங்காவாக இருக்கும் ஜோதிகா, இரவானதும் பரத நாட்டிய
உடை அணிந்து, சந்திரமுகி அறையில் நடனமாடுவார். இந்த காட்சியை அன்றைய காலத்தில் தியேட்டரில்
பார்க்கும்போதே பலரும் டர்ர் ஆனார்கள். ஆனால் இந்த சம்பவத்தைப்போன்று தற்போது கேரளாவில்
ஒன்று நடந்துள்ளது.
கேரள
மாநிலம், கண்ணூர் என்னும் இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சசி. 45 வயதான இவர்,
பகல் நேரங்களில் மர வேலை தொடர்பான பணிகளை செய்து வந்துள்ளார். ஆனால் இரவு நேரங்களில்
மிகவும் வித்தியாசமாக நடந்துக்கொண்டுள்ளார்.
முதலில்,
வெறும் சேலை போன்ற பெண்களுக்கான உடைகளை அணிந்துக்கொண்டு கிராமத்தில் வலம் வரத்தொடங்கிய
அவர், ஒரு கட்டத்திற்கு மேல், பெண்களுக்கான நகைகளையும் அணிந்துக்கொண்டு, சுடுகாட்டில்
வலம் வந்திருக்கிறார். இதனை அப்பகுதி கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, எதற்காக
இவர் இவ்வாறு செய்கிறார் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்திருக்கின்றனர்.
இவரின்
இந்த செயல் அடுத்த நிலைக்கு சென்று, பெண்கள் போன்று, உடை, நகை ஆகியவற்றை அணிந்துக்கொண்டு
சுடுகாட்டிலேயே உறங்கவும் ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் சுடுகாட்டின் வழியாக அப்பகுதி
பெண்கள் விறகு எடுக்க வந்தபோது, அங்கு சசி உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனைக்கண்டு
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி
வந்தனர்.
முதற்கட்ட
விசாரணையில், சசியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் விஷப்பாட்டில்கள் இருந்தது என்றும்,
இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் எதற்காக
இந்த மாதிரி சுடுகாட்டில் உறங்கும் பழக்கத்தை வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்தும்
காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக