இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நஷ்டம் 2,253.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாகும்.
இதுவே
கடந்த 2018 - 2019ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 487.26 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இதே நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 342 கோடி ரூபாய் நஷ்டத்தில்
இருந்துள்ளது இந்த வங்கி.
இதே
கடந்த மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் 5,024 கோடி ரூபாயாக உள்ளது. இதே
முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 5,348.35 கோடி ரூபாயாக இருந்தது
குறிப்பிடத்தக்கது.
இதே
இந்த வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 20 சதவிகிதமாக (28,673.95
கோடி ரூபாயாக) நிலை நிறுதப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 24.73
சதவிகிதமாக (37,109.96 கோடி ரூபாயாக) இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே
இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 1,204 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனால்
இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது. எனினும் வருவாய் குறைந்து
நஷ்டம் அதிகரித்த போதிலும் இதன் வாராக்கடன் சற்று குறைந்திருப்பது நல்ல விஷமாக
கருதப்படுகிறது.
இந்த
நிலையில் இந்த வங்கியின் பிஎஸ்.இ சந்தை மதிப்பு 1,233.43 கோடி ரூபாயாக வீழ்ச்சி
கண்டுள்ளது. இதே இதற்கு முன்பு 9,717.57 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இந்த
நிலையில் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமையன்று
வெளியிடப்பட்ட நிலையில், அன்று 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், தற்போதைய நிலையில்
இன்று இதுவரை 3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
எனினும்
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு இந்தியன் ஒவர்சீஸ் வங்கிக்கு
கூடுதல் மூலதனமாக 3,857 கோடி ரூபாயை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது துவண்டு
போயுள்ள இந்த வங்கிக்கு மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும், தொடர்
நஷ்டத்தினை சரிசெய்யவும், இந்திய ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ள நிலையில், கடந்த
இரண்டாவது காலாண்டில் முன்பை விட 5 மடங்கு நஷ்டம் கண்டுள்ளது இந்த வங்கி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக