இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மருதம் பட்டையை ஒன்றிரணடாக இடித்து அதை நீரில் இட்டு நன்கு
காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் கொண்டு புண்களை கழிவிவர புண்கள் விரைவில்
ஆறும்.
மருதம் பட்டையை பொடித்து பல் துலக்கி வர பல் வலி, பல் ஈறு
வீக்கம் ஆகியவை குணமாகும்.
மருத மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து
காலை மாலை ஆகிய இருவேளை 3 நாட்கள் குடித்துவர பித்தவெடிப்பு குணமாகும்.
மருதம் பழுத்தை நீராவியில் அவித்து பிசைந்து புண்களின் மீது
வைத்து கட்டிவர கொடிய புண்களும் ஆறிவிடும்.
மருதம் பட்டையை பொடித்து அதில் 2 கிராம் அளவு வெந்நீரில்
கலந்து உட்கொண்டுவர வாத நோய்கள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
மருதம் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி 4 பங்கு நீரில் அதை
கலந்து ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டி குடித்துவர இரைப்பு, இருமல், காய்ச்சல்,
கழிச்சல் ஆகியவை குணமாகும்.
மருதம் பட்டை, அரசம் பட்டை, வில்வப் பட்டை
ஆகியவற்றை தலா 35 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஜாதிக்காய்,
சாதிபத்ரி, இலவங்கபட்டை ஆகியவற்றை 20 கிராம் எடுத்து, இவை அனைத்தையும் நீரில்
போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கழிச்சல் தீரும். இதயம் வலுப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக