இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலை,
கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து
வரும் மலைத்தொடர் ஆகும்.
இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருவண்ணாமலை
மாவட்டத்தில் 262 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறு ஆறுகளுக்கிடையில்
உள்ள இம்மலையின் சராசரி உயரம் சுமார் 1000 மீட்டர் ஆகும். கிழக்குத்தொடர்ச்சி
மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80கி.மீ. நீளமும், 32கி.மீ. அகலமும்
கொண்டுள்ளது.
சிறப்புகள் :
ஜவ்வாது மலைத்தொடர் திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் அருகில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் காட்பாடி வரையிலும் பரவியுள்ளது.
இம்மலை காடுகள், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் என காண்போரை பரவசப்படுத்துகிறது.
இம்மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும்,
மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும், மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை
நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.
இம்மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டல
நதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில்
படவேட்டிற்கு அருகில் செண்பக தோப்பு அணையும், மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்ட
நதி அணையும் கட்டப்பட்டு அவையும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.
ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு
குழாமும், பீமன் நீர்வீழ்ச்சியும் இயற்கையின் கொடைகளாகும்.
இம்மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவின்
மிகப்பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் அமைந்துள்ளது. இங்கு வானியல்
தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இம்மலையில் ஆண்டுதோறும் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும்.
இவ்விழாவின் போது இம்மலைவாழ் மக்களின் படைப்புகள், மலர்கள், காய் கனிகள் கண்காட்சி
என கண்களுக்கு விருந்து படைக்கும் அளவிற்கு ஜவ்வாது மலை திகழ்கிறது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
மலையின் பேரழகு...
இனிமையான பரிசல் பயணம்...
மகிழ்ச்சியை அள்ளித்தரும் பாரா கிளைடிங்...
அச்சத்தை தரும் விலங்கினங்கள்...
கண்ணாடி மாளிகை...
மிகவும் அகலமான நீர்மத்தி மரம்...
பசுமையான நிலப்பரப்புடன் சந்தன மரங்களும், பழ
மரங்களும்...
இதர சுற்றுலாத் தலங்கள் :
கோட்டை வரதர் ஆலயம்...
பர்வத மலை சிவன் கோயில்...
அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா...
எப்படி செல்வது?
இம்மலைக்கு செல்ல திருவண்ணாமலை
மாவட்டம் போளுரில் இருந்தும், வேலூரில் இருந்தும், திருப்பத்தூரில் இருந்தும்
பேருந்துகள் இயக்கப்படுகிறது.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக