Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 நவம்பர், 2019

பங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா?

Image result for பங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்'


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

எல்லாப் பங்குகளும் TCS போல டைட்டன் போல அள்ளிக்கொடுக்காது என்பதும், பங்குகளில் பல வாங்கியவர்களுக்கு நஷ்டம் கொடுத்திருக்கிறது என்பதும் உண்மை. எல்லாப் பங்குகளும் லாபம் மட்டுமே தரும் என்றால், அதுவும் பிரமாதமாகத் தரும் என்றால், உலகில் மக்கள் வேறு எதிலுமே முதலீடு செய்ய மாட்டார்கள். எல்லோரும் அவர்களுடைய எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தைக்கு எடுத்து வந்துவிடுவார்கள்.
எந்த வங்கி டெபாசிட்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதனால்தான் அவற்றைப் பற்றி அதிக பேச்சுகள், தேடுதல்கள், ஆலோசனைகள், ஆலோசகர்கள், விவாதங்கள் இல்லை. தங்கத்துக்கும் அப்படித்தான். ஆனால், பங்குச் சந்தை அப்படிப்பட்டது அல்ல. அதற்குள் ஏகப்பட்ட விவரங்கள் உண்டு. அவற்றில் தெளிந்து, தேர்ந்து வாங்கி, லாபம் பார்க்க நிச்சயம் உதவி தேவைப்படுகிறது.
பங்குகள் என்பது மிக வித்தியாசமான முதலீடு. கிட்டத்தட்ட பங்குச் சந்தை முதலீடு என்பது மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல. நூற்றுக்கணக்கானவர்கள் ஓடுவார்கள். சிலர் மட்டுமே சரியாக முடிப்பார்கள். ஃபுல் மாரத்தான் என்பது 41.950 கி.மீ தூரம். ஆர்வம், ஆசை, தொடங்குவது மட்டும் போதாது. தொடர்ந்து ஓட, ஓடி முடிக்க, ’ஸ்டாமினா’ வேண்டும். ஸ்டாமினா என்ற உடல் வலு தவிர, முக்கியமாய் நிதானம் ரொம்ப அவசியம்.
பங்குகள் முதலீட்டில், சில நிமிடங்களில் சம்பாதிக்கலாம் என்பது போலவே சில நிமிடங்களிலேயே பெரும் பணம் காணாமல் போய்விடும்.
பாரிஸ் கார்னரில் வேறு ஒரு வியாபாரம் செய்துகொண்டிருக்கும் அவருக்கு வயது, சுமார் 55 இருக்கலாம். அவர் டிமேட் கணக்கு மட்டும்தான் வைத்திருக்கிறாராம். டிரேடிங் அக்கவுன்ட் கிடையாதாம். அவர் டிமேட்டில் இருப்பதெல்லாம் எப்போதோ வாங்கிய பங்குகள். அவற்றில் பலவும் குட்டிகள் போட்டு, இப்போது பெருங்கூட்டமாய் அவருடன் இருக்கின்றன. ஆண்டுக்கு பலமுறை அவர்மீது டிவிடெண்ட் மழை பொழிகின்றன.
100 என்ற அளவில் வாங்கிய அந்தப் பங்குகளில் சில, போனஸ் பங்குகள் பல பெற்றும், ’ஸ்டாக் ஸ்பிளிட்’ என்று 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகள், 5 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளாக மாறி, எண்ணிக்கை பெருகி, பெரும் குடும்பமாய் அவர் டி.பி-யில் குடியிருக்கின்றன. அவர் அந்தப் பங்குகளைக் காலிசெய்யச் சொல்வதில்லை.
அவர் வைத்திருப்பவை HDFC, HDFC பேங்க், TCS மற்றும் பிடிலைட் மற்றும் இன்னும் ஒன்றிரெண்டு நிறுவனப் பங்குகள். பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியவை. அப்படியே வைத்திருக்கிறார். 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டபோதும் இவர், தனது இந்தப் பங்கு முதலீட்டைச் சந்தேகிக்கவில்லை. விற்று, வெளியேறவில்லை. இன்னமும் வைத்திருக்கிறார்.
ஏன் விலை ஏறுகிறது? ஏன் விலை இறங்குகிறது? மேலும் இறங்குமா அல்லது மேலும் உயருமா? என்றெல்லாம் இவர் கணிப்பது, யூகிப்பது அல்லது வேறு எவரிடமும் கேட்பது போன்றவற்றைச் செய்வதில்லை. அவருக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை. ஆனாலும், அவை அவருக்கு லாபமே தருகின்றன. காரணம், இவர் வைத்திருக்கும் பங்குகள் அனைத்தும் ’ப்ளூ சிப்’ வகையைச் சேர்ந்தவை.

அதென்ன ’ப்ளூ சிப்’ என்று சந்தேகம் வருகிறதா?

‘ப்ளூ சிப்’ ’என்றால் மிக நல்ல நிறுவனப் பங்குகள். ஓர் அடையாளப் பெயர். அவர் வைத்திருக்கும் சிலவற்றைப் போல வேறு சில ‘ப்ளூ சிப்’ நிறுவனப் பங்குகள் உண்டு. முன்பெல்லாம் பாண்ட்ஸ், புரூக்பாண்ட் போன்ற ’ப்ளூ சிப்’ பங்குகள் இருந்தன. அவை பின்னர், வேறு சில நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஏசியன் பெயின்ட்ஸ், போஷ், எம்ஆர் எஃப், பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா, நெஸ்லே, கோல்கேட் போன்றவை தற்போது ‘ப்ளூ சிப்’ பங்குகளாகப் பார்க்கப்படும் பங்குகளில் சில.
முன்பு, நாம் பார்த்த ஐந்து லட்சணங்கள் பொருந்திய நிறுவனங்கள் இவை என்பது தவிர, இவற்றின் வியாபாரமும் வருமானமும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நன்றாகவே இருக்கும். மேலும், இந்த நிறுவனப் பங்குகளின் டிஸ்டிரிபூஷன் தொடர்ந்து நன்றாகவே இருக்கும். டிஸ்டிரிபூஷன் என்றால் அவை தரும் போனஸ் மற்றும் டிவிடெண்ட் வருமானங்கள்.
 விவரம் தெரிந்தோர், பெரும் செல்வந்தர்கள் இந்த வகைப் பங்குகளைத்தான் வாங்கி வைத்திருப்பார்கள். இவை பற்றிப் பலருக்கும் தெரியும் என்பதால், இவற்றின் விலைகள் சற்று அதிகமாகவே இருக்கும். எப்போது வாங்கப் பார்த்தாலும் அவை ‘ஃபுல்லி பிரைஸ்டு’ மாதிரித் தெரியும். 'Fully priced' என்றால் அதற்கு என்ன விலை கொடுக்கலாமோ அந்த விலைக்கு ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது என்று பொருள்.
அந்த விலையில் வாங்கினால் உடனடியாக விலை ஏறாது. அதனால், பெரும்பாலோனோர் அதிலும் குறிப்பாகச் சந்தையை, சந்தை முதலீட்டை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள், புதிதாக உள்ளே வருகிறவர்கள், டிரேடர்கள் அவற்றை வாங்க மாட்டார்கள். எனவேதான், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சில விவரங்கள் அறிந்திருக்க வேண்டும் எனச் சொல்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக