Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 நவம்பர், 2019

DHFL மீது பாய்கிறது திவால் நடவடிக்கை.. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிறுவனம்..!

Image result for DHFL மீது பாய்கிறது திவால் நடவடிக்கை.. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிறுவனம்..!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மும்பை : திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் செய்த கடன் மோசடியின் பலானாக தற்போது இந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டிஹெஎஃப்எல் நிறுவனத்தினை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ஆர்.பி.ஐ.
முன்னதாக இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனம் 30,000 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சட்டை முன்வைத்து புலனாய்வு ஊடகமான கோப்ரா போஸ்ட் நாட்டில் நடந்து மிகப்பெரிய நிதி மோசடிகளில் இதுவும் ஒன்று என்று நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தது.

போலியான ஆவணங்களுக்கு கடன்
வீட்டுகடன் வழங்கும் இந்த நிறுவனம் போலியான பல ஆவணங்களை உருவாக்கி பல நிறுவனங்களுக்கு மோசடி செய்து கடன் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவிர இந்த வங்கி பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என பாராபட்சம் இல்லாமல் கடன் வாங்கி இருப்பதாகவும், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் 50,000 கோடி ரூபாய் மேல் கடன் வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பல மோசடிகள் அரகேற்றம்
இது இன்னும் பல விதமான, வித விதமான மோசடிகளும் இந்த நிறுவனத்தில் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பல மாதங்களாக நீடித்து வந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான ரிசர்வ் வங்கி இந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நடவடிக்கைகளுக்காக இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்து தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் நடவடிக்கை
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் சார்பில் இதை கவனிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.சுப்பிரமணிய குமார் என்பவரை நியமித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் மீதான திவால் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது ஆர்பிஐ.
பெயிலியர் ஆன திட்டம்
டிஹெஎஃப்எல்லின் கடன் சுமையை குறைப்பதற்கும் கடனின் ஒரு பகுதியை அடமானக் கடனாக மாற்றவும், வங்கிகள் டிஹெஎஃப்எல் நிறுவனத்தில் 51 சதவிகித பங்குகளை அடமானக் கடனாக மாற்றுவதற்கும் வங்கிகள் செயல்பட்டு வந்த முந்தைய திட்டம், பெரு நிறுவன விவகார அமைச்சகம் அதில் தலையிட்டதை அடுத்து அந்த திட்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டெபாசிட் தாரர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை
கடந்த அக்டோபர் 10-ம் தேதி மும்பை உச்ச நீதிமன்றம் பாதுகாப்பற்ற கடனாளர்களுக்கு பணம் செலுத்துவதை டிஹெச்எஃப்.எல் நிறுவனத்திற்கு தடை செய்தது. இதில் கொடுமை என்னவெனில் கடந்த நவம்பர் 13 அன்று டி.ஹெச்.எஃப்.எல் பத்திரமயமாக்கல் ஒப்பந்தங்களுக்கு பதிலாக பணம் செலுத்தவும் அனுமதித்தது. எனினும் இதில் வைப்புத் தொகையாளர்களுக்கு இதன் மூல எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
மக்கள் நம்பிக்கை இழப்பு
அப்பாவி மக்களின் டெபாசிட் தொகைகளும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கும் இது வரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில், இந்த நடவடிக்கையால் தீர்வு கிடைத்தால் சரி தான். இதுபோன்று சிலர் செய்யும் அப்பட்டமான தவறினால் தான், மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இதுபோன்று ஆர்.பி.ஐ கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் ஆவது இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க முடியும். ஏற்கனவே பி.எம்.சி வங்கி, டி.ஹெச்.எஃப்.எல் என தொடர்ந்து அடி வாங்கியவர்களுக்கு ஏதேனும் சரியான பதில் கிடைத்தால் சரி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக