![Image result for நன்றி மறவாமை..!](https://www.chillzee.in/images/kidSpecial/deer.jpg)
ஒரு
நாட்டினுடைய ராஜா பத்து வெறி நாய்களை வளர்த்து வந்தார். அவர் தன் மந்திரிகள்
செய்யும் தவறுகளுக்கு அந்த நாய்களை வைத்து அவர்களை கொடுமைப்படுத்தினார்.
ஒருமுறை
அரசவையில் மந்திரி ஒருவர் வெளிப்படுத்திய கருத்து தவறாக இருந்ததால் அதனை ராஜாவால்
ஏற்க முடியவில்லை. அதனால் ராஜாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மந்திரி தவறான
கருத்தை கூறியதால் அவரை நாய்களுக்கு இரையாக்கத் தீர்மானித்தார்.
மந்திரி
ராஜாவிடம் பத்து வருடங்கள் தங்களுக்கு சேவை செய்ததற்கு இதுதானா பலன்? இத்தண்டனையை
நிறைவேற்றும் முன் எனக்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கெஞ்சிக்
கேட்டார். உடனே ராஜாவும் சம்மதித்தார்.
மந்திரி
நாய்களின் காப்பாளரிடம் சென்று அடுத்த பத்து நாட்களுக்கு அவரே நாய்களுக்கு
உணவளிக்க விரும்புவதாக கூறினார். காப்பாளருக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும்
சம்மதித்தார். மந்திரி நாய்களுக்கு உணவளித்து வந்தார் மேலும் பல தேவைகளையும்
கவனித்து வந்தார்.
இவ்வாறு
பத்து நாட்கள் கழிந்தன. அதனால் ராஜா மந்திரியை நாய்களுக்கு இரையாக்கிப் போடும்படி
உத்தரவிட்டார். நாய்களின் கூண்டில் மந்திரி நுழைந்தவுடன் நாய்கள் அவரின் கால்களை
நக்கி முத்தமிட்டன. இதைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர். ராஜாவும்
நாய்களுக்கு என்ன ஆகிவிட்டது என்று நினைத்தார்.
அதற்கு
மந்திரி கூறிய பதில்.! நான் இந்நாய்களுக்குப் பத்து நாட்கள் தான் சேவை செய்தேன்
ஆனால் ஆழ்ந்த நன்றி உணர்ச்சியை அவை காண்பிக்கின்றன. தங்களுக்கு பத்து வருடங்கள்
சேவை செய்த போதிலும் ஒரு சிறு தவறுக்கு தாங்கள் எனக்கு பெரிய தண்டனை கொடுக்க
நினைத்தீர்கள் என்று கூறினார். இதைக்கேட்ட ராஜா தலைகுனிந்து தன் தவறை உணர்ந்து
மந்திரியை விடுதலை செய்தார்.
தத்துவம் :
நாமும்
மற்றவர்களின் நற்குணங்களை மறந்து ஒரு சிறு தவறுக்காக அவர்களை வெறுப்பதும்
தண்டிப்பதும் சரியல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக