டால்பின் மூக்கு ஊட்டியிலிருந்து 31கி.மீ தொலைவிலும், குன்னூரில் இருந்து 11கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
டால்பின் மூக்கின் வலது மற்றும் இடது புறங்களில் பரவசமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கோத்தகிரிப் பகுதியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும், குன்னூரின் நீரோடையும் சங்கமிக்கும் காட்சி, மேலும் இவ்விரண்டும் பணிவுடனே பவானி ஆற்றில் கலக்கும் சிறப்பு ஆகியன கவின்மிகு காட்சிகளாகும்.
இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
எனவே இது சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக கருதப்படுகிறது.
சிறிது தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டி இருந்தாலும், இது தரும் காட்சியமைப்புகள் அதற்கான தகுதிகளை உடைய இடம் தான் இது என்று கூற வைக்கிறது.
நீலகிரியின் பல முக்கிய இடங்களை இங்கிருந்து காணலாம். கோத்தகிரியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் அதில் ஒன்று. மலை உச்சியில் இருக்கும் போது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.
குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் டைகர் ஹில் பகுதிக்கு அண்மையில் அமைந்த அற்புதம் கலந்த பாறை மலையான இம்மலை தன் முகத்தை வெளிப்பக்கம் நீட்டி டால்பினின் மூக்கு போல் அமையப் பெற்றது தான் இதன் பெயர்க்காரணமாகும்.
இது ஒரு இயற்கை தலமாக உள்ளது. இங்கு நீண்டு கொண்டிருக்கிற பாறைகள் டால்பினின் மூக்கைப் போல இருக்கும். மலை ஏறுவதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.
இது (Dolphins Nose) கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் கேத்தரின் அருவி பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அழகிய காட்சியை முழுமையாக காணலாம். வளைந்த சாலைகளையும், தேயிலைத் தோட்டங்களையும், பார்க்க இது ஒரு சிறந்த இடமாகும்.
எப்படி செல்வது?
ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது?
வருடத்தின் அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
ஊட்டி தாவரவியல் பூங்கா.
ரயில் பொம்மை.
ரோஸ் கார்டன்.
நூல் தோட்டம்.
ஊட்டி ஏரி.
தொட்டபெட்டா மலைச் சிகரம்.
கல்ஹத்தி நீர்வீழ்ச்சி.
எமரால்ட் ஏரி.
புலிமலை.
காமராஜ் சாகர் ஏரி.
கோத்தகிரி.
அண்ணாமலை கோவில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக