வேலூரிலிருந்து ஏறத்தாழ 95கி.மீ தொலைவிலும், ஏலகிரியிலிருந்து ஏறத்தாழ 5கிமீ தொலைவிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக அமைந்துள்ளது நிலாவூர் ஏரி.
சிறப்புகள் :
படகுகளில் குதூகலமாக பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாக நிலாவூர் ஏரி திகழ்கிறது. இந்த ஏரி நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
நிலாவூர் ஏரி ஒரு சிறிய ஏரி ஆகும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்த ஏரி மிகவும் ரம்மியமான சூழலில் பார்ப்பதற்கு கொஞ்சம் பசுமையாகவும், கிராமத்தின் மண் மணமும் கலந்த ஒரு சிந்தனை ஊற்றாக இருக்கிறது. இந்த ஊரில் உள்ள அழகுகான இடங்கள் உங்களை மீண்டும் வரவழைக்கும்.
இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அமைதியான சூழலுடன் காட்சியளிக்கின்றன. நீங்கள் இந்த இடத்திற்கு சென்றால் மன அமைதியாகவும், பிரச்சனைகள் இல்லாமலும், சந்தோஷமாகவும் இருக்கலாம்.
எப்படி செல்வது?
ஏலகிரியிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களில் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஏலகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
ஏலகிரி மலை.
ஜலகம்பாறை அருவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக