>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 10 டிசம்பர், 2019

    தை மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியம் !

     Image result for தை மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியம் !
    னவரி 15 முதல் பிப்ரவரி 15 வரையிலான இடைப்பட்ட காலமே தை மாதம் ஆகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். தை மாதப்பிறப்பு என்பது சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலமாகும்.

     இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், கற்பனை திறன் மிகுந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் கஞ்சத்தனமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார்கள்.

     இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள். ஆகையால் இவர்கள் பல இடங்களில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்கள் தமக்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது பிடித்த ஒரு நபரையோ பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பதால் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்யமாட்டார்கள். வருமானத்திற்கு ஏற்ப தான் செலவு செய்வார்கள். வேலை என வந்துவிட்டால் மிகவும் புத்திசாலித்தனமாகவும், கெட்டிக்காரர்களாகவும் செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் நல்ல பணிவுடன் நடந்து கொள்வார்கள். தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.

     இவர்களுக்கு காதல் திருமணம் ஒத்துவராது. இந்த மாதத்தில் பிறந்தவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. ஆனால் தை மாதத்தில் பிறந்தவர்களின் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல் இருக்கும். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகிய முகம் கொண்டவர்களாக இருப்பர். தை மாதத்தில் பிறந்தவர்களுக்கு உடன்பிறப்புகள் இருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும், இல்லையெனில் அவர்களின் விருப்பத்திற்கே நடந்து கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தாருடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்துப் போகும் தன்மையுடையவர்கள்.

    நிலபுலன்கள், வீடு போன்ற அசையா சொத்துகள் பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புண்டு. இருந்தாலும் இவர்கள் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள். இவர்கள் தை மாதத்தில் பிறந்ததால், ஏற்ற தொழில் விவசாயம் தான். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவார்கள். இவர்கள் பயணம் செய்வதில் மிகவும் பிரியம் கொண்டவர்கள். ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல அறிவும், ஆற்றலும், அழகும் உள்ள வாழ்க்கைத் துணைவி அமைவார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக