சென்னையிலிருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும், T.நகரிலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அமைந்துள்ள இடம் தான் செம்மொழிப் பூங்கா.
சிறப்புகள் :
செம்மொழிப் பூங்கா தென்னிந்தியாTக்கே புதிதான செங்குத்து தோட்டத்தை நுழைவாயிலாகக் கொண்டுள்ளது. இந்த செங்குத்துத் தோட்டம் பல்வேறு விதமான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தTடனே இந்த பூங்காவிற்கு செல்லலாம் என்று நமக்கே தோன்றும்.
ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பூங்காவின் உட்புறத்தில் வாசனை மிக்க மலர் தோட்டங்கள், தாவரங்கள், செடிகள் மற்றும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விதவிதமான மூங்கில் மரங்கள், நம்முடைய கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் பட்டாம்பூச்சிகள் என நீங்கள் சுற்றி பார்ப்பதற்கு இந்த பூங்காவில் அதிகமான இடங்கள் இருக்கின்றன.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்
வண்ண விளக்குகள் நிறைந்த நீருற்று,
குற்றாலத்தை நினைவுட்டும் அருவி
வாத்துகள் வாழும் குளம்
நீரோடை என்று அனைத்தையும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.
பூங்காவின் இருபுறமும் கொரியப் புல்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவைச் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். இந்தப் பூங்காவை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
தமிழரின் பெருமைகளை செம்மொழிப் பூங்கா நமக்கு நினைTப்படுத்துகிறது.
எப்படி செல்வது?
சென்னை மற்றும் T.நகரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக