குழந்தைகளுக்கு வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் உலர் பழங்களை வைத்து சாதம் செய்து கொடுத்தால் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த உலர் பழங்களை வைத்து சாதம் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
இலவங்கம் - 5
பட்டை - 1 துண்டு
வெங்காயம் - 2
கேரட் - 2 (துண்டாக நறுக்கியது)
பன்னீர் - தேவையான அளவு
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
முதலில் பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அரிசியை நன்றாக களைந்து சுத்தம் செய்து, வேகவைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும் முந்திரி, பாதம், திராட்சை ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைச் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் கேரட் துண்டுகளைப் போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள வெண்ணெயில் பட்டை, இலவங்கம், மிளகு போட்டுப் பொரிந்ததும், வெங்காயத்தைப் போட்டு தாளித்து, ஆறிய பாசுமதி சாதத்தைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
கடைசியாக அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளற வேண்டும். பின் திராட்சை கலவையை அதில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு நெய் விட்டுக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறினால், சத்து நிறைந்த உலர்பழச் சாதம் தயார்!!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக