Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 11



  தட்சனின் பேச்சுக்களால் இங்கு என்ன அனர்த்தம் உண்டாகுமோ என ஐயம் கொண்ட தாட்சாயிணி தேவி தன் தந்தையிடம் நிகழ்ந்தவை எதுவாக இருப்பினும் சினத்தை தவிர்த்து என் பதியானவர் செய்த பிழையை மிகைப்படுத்தாமல் அவரை மன்னிக்க வேண்டுகிறேன் என்று கூறி நின்றார்.

தாட்சாயிணியின் இந்த பேச்சுக்களால், யார் இழைத்த பிழையை யார் மிகைப்படுத்துவது? உறவுகளுடன் வாழ்ந்தால் மட்டுமே தெரியக்கூடியவை யாவற்றையும் அறியாமல் சுடுகாட்டில் வாசம் செய்து, அங்கு உள்ள சாம்பலை பூசி பித்தனாக திரியும் உன் கணவன் செய்த தவறை நீர் மறைக்கலாகாது என்று கூறி, இனி வரும் நாட்களில் உன்னை காண எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி அவ்விடத்தை விட்டு தன் மனைவியான பிரசுதியுடன் புறப்பட்டார் பிரஜாபதியான தட்சன்.

தன் தந்தை புறப்பட்டு சென்றதை அடுத்து, தாட்சாயிணி தேவி தன் பதியான கணவரை நோக்கி தாம் செய்தது சரியா? தந்தையை மகன் ஆசிர்வாதம் செய்வது என்பது உசிதமான செயலா? என்று கூறி, தன் இருப்பிடமான கைலாயத்திற்கு சென்றார் தேவி.

நாரதர் செய்த செயலால் பிரஜாபதியான தட்சன் சினம் கொண்டு பேசியதும் தாட்சாயிணிக்கும், சிவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. இதை எல்லாம் கவனித்த நாரதர் இனி நாம் இங்கு இருந்தால் விபரீதம் நமக்கு தான் என்று எண்ணி 'நாராயண நாராயண" என சொல்லி அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

சத்தியலோகத்தில் இருந்து தேவி கைலாயத்திற்கு திரும்பியதும் சிவனும் கைலாய மலைக்கு சென்றார். என்னுடைய தந்தையை நீங்கள் எல்லோர் முன்னிலையில் இவ்விதம் செய்தது சரியா என இருவருக்கும் இடையே உரையாடல் நிகழ்ந்தது.

அப்போது சிவபெருமான் என்னில் பாதியாக விளங்கும் ஆதிசக்தி நீர் இவ்விதம் பேசுவது சரிதானா. இந்த பிரபஞ்ச உயிர்களை உருவாக்கி அவர்களை காத்தும், அழித்தும் செய்பவனான பரம்பொருள் ஆகிய நான், உருவாக்கிய சிருஷ்டியில் உள்ள பிரஜையை வணங்குவது என்பது அவருக்கு பாவம் உண்டாகும் என்பதை அறிந்தே அவரை ஆசிர்வதித்தேன் என்று சிவபெருமான் கூறினார்.

சிவபெருமான் கூறிய கூற்றில் உள்ள பொருளை உணராத தாட்சாயிணி தேவி நீங்கள் வணங்குவதால் எப்படி தன் தந்தைக்கு பாவம் நேரிடும்? என்று கேட்டார். ஏனெனில் ஆதிசக்தியாக இருந்தாலும் மானிட பிறவி எடுத்து சிவனை அடைந்ததால் மானிட கர்மாக்களும் செயல்படத் தொடங்குகின்றன.

பிரஜாபதியான தட்சன் சத்தியலோகத்தில் சிவபெருமான் செய்த செயலால் மிகவும் சினம் கொண்டார். பிரஜாபதியான என்னை சிவன் ஆசிர்வதிப்பதா? அதுவும் எல்லோர் முன்னிலையில் செய்தது உசிதம் அன்று.

இதை இப்படியே விட்டால் மென்மேலும் தம்மை சிவன் அவமானப்படுத்துவான். அவனை அவமானம் செய்யும் விதமாக ஏதாவது ஒன்றை செய்து அவனை வணங்க விடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

இந்த சமயத்தில் தாரகாசுரன் சிவபெருமானையும், தாட்சாயிணி தேவியையும் பிரிக்க முடியாமல் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தான். தாட்சாயிணி தேவியை கொல்வதற்காக அனுப்பப்பட்ட வீரர்கள் அனைவரும் மடிந்துவிட்டார்கள்.

இவ்விதம் நாம் செய்து கொண்டு இருந்தால் நம்மிடம் உள்ள பல வீரர்களை நாம் இழக்க நேரிடும் என்று யோசித்தான். தம் குலத்தின் குருவாகிய சுக்கிராச்சாரியாரும் சஞ்சீவினி மந்திரத்தை பெற தவம் மேற்கொள்ள சென்றுள்ளார்.

தாட்சாயிணி தேவியை கொல்வதற்கு ஏதேனும் உபாயம் கிடைக்கும் என எதிர்பார்த்த எனக்கு இதுவரை எந்த வித செய்தியும் வரவில்லையே இனி நான் என்ன செய்வேன் என்று குழம்பி நின்றான் அசுர குல வேந்தனான தாரகாசுரன்.

தேவலோகத்தில் இருக்கும் இந்திரதேவன் தேவலோக கன்னிகளுடன் உரையாடிக் கொண்டும், அவர்களின் அபிநயங்களைக் கண்டும் தனது நேரத்தை செலவு செய்து கொண்டு இருந்தான். இந்திரதேவன் தேவலோக ஒற்றர்கள் மூலம் வந்த செய்தியை கூட செவி கொடுத்து கேட்க முடியாமல் சுகபோகங்களில் மூழ்கியிருந்தார்.

சிவபெருமான் பிரஜாபதியான தட்சனை விட அதிக சக்தியை பெற்றிருப்பதால் என் பாதங்களில் அவர் விழுந்து ஆசிர்வாதம் பெற்றால் அவருக்கு தானே பாவம் உண்டாகும். அதை தவிர்க்கவே நான் அவரை ஆசிர்வதித்தேன் என்று கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக