தேவர்கள் இருந்த தேவலோகத்தில் அசுரர்கள் இருந்தனர். தேவலோகத்தில் உள்ள அனைத்து
தேவர்களையும், போரில் உயிர் பிழைத்த தேவர்களையும், சிறை பிடித்து அவர்களுக்கு
பல்வேறு இன்னல்களை உருவாக்கி அவர்கள் துன்பப்படும் போது அசுரர்கள் மகிழ்ந்தனர்.
பின் அசுரர்களின் படைகள் ஒரு சேர வகுத்து அவர்கள் முன்னிலையில் அசுரர்களின்
வேந்தனான மகாவீரர் தாரகாசுரன் மூவுலகிற்கும் நானே நிரந்தரமான அரசன் என்று
முடிகட்டிக் கொண்டார்.
மேலும்
தேவேந்திரன் அமர்ந்த இருக்கையில் அமர்ந்து தன்னுடைய அசுரப்படை வீரர்களின்
முன்னிலையில் போரில் தோல்வியுற்ற மற்ற தேவர்களையும், தோல்வி அடைந்ததும் மறைந்து
போன தேவர்களின் அரசனான தேவேந்திரனையும், சிறை பிடித்து வருமாறு தன் வீரர்களுக்கு
கட்டளை பிறப்பித்தான்.
தன்னுடைய
மகனான பார்வதிதேவியை தேடி இமவான் மன்னனும், அவரது வீரர்களும் தேடி அலைந்தனர்.
இருப்பினும் எவராலும் தேவி இருக்கும் இடத்தை யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
என்ன செய்வது என்றும், தன் ஆசை மகள் என்ன துன்பத்தில் இருக்கின்றாளோ என வேந்தரும்,
தந்தையுமான இமவான் மனம் தவித்தார். இவரின் துன்பம் எவ்விதம் அறிந்தாரோ அங்கு
நாரதர் உதயமானார்.
முக்காலமும்
உணர்ந்த நாரதரை கண்டதும் இமவான் மன்னன் பணிந்து நின்றார். எல்லாம் தெரிந்த
நாரதரும் ஏதும் அறியாதது போல் வேந்தனின் முகத்தில் பணிவு இருந்தாலும் அகத்தில்
ஏதும் மகிழ்ச்சி இல்லையோ என வினவினார். அவ்விதம் இல்லை ரிஷி முனிவரே, தோழிகளுடன்
வந்த என் மகள் இந்த வனத்தில் தனியே சென்று விட்டாள். தேவியை எங்கு தேடியும்
எவராலும் கண்டறிய முடியவில்லை என்று கூறினார்.
தொலைந்த
பொருளை தொலைத்த இடத்தில் தேடினால் மட்டுமே கிடைக்கும் அதை விடுத்து மற்ற இடங்களில்
தேடினால் எவ்வாறு கிடைக்கும் என்று கூறினார் நாரதர்.
வேந்தனான
இமவான் மன்னனுக்கு நாரதரின் கூற்றுகள் புரிந்ததும் நாரத ரிஷியே என் மகளை இழந்த
இடம் அறியாவண்ணம் உள்ளேன் என்று மன்னன் உரைத்தார். தங்கள் மகள் இருக்கும் இடத்தை
கூறும் பட்சத்தில் யாது செய்வீர்கள் மன்னா எனக் கேட்டார் அனைத்தும் அறிந்த ரிஷியான
நாரதர். நாரதரே ரிஷியே என் மகள் இருக்கும் இடத்தை கூறும் பட்சத்தில் என் ராஜ்ஜியமே
தங்களுக்கு உரியதே என்றார் மன்னனான இமவான்.
என்
ராஜ்ஜியமே தங்களுக்கு உரியதே என்று இமவான் கூறியதைக் கேட்ட நாரதர், இம்மூவுலகிலும்
சுற்றி திரியும் எனக்கு உங்கள் ராஜ்ஜியம் எதற்கு வேந்தரே அதற்கு பதிலாக தங்களால்
எனக்கு ஒரு உபயம் நடக்க வேண்டியுள்ளது. அதை தாங்கள் செய்து தருவதாக கூறினால் தேவி
இருக்கும் இடத்திற்கு நான் உங்களை அழைத்து செல்கிறேன் என்றார்.
நாரதர்
கூறிய கூற்றை கேட்டதும் சிறிது சிந்தித்து பார்த்தார் வேந்தன். சிந்தித்தும் வேறு
வழியாதும் இல்லாத பட்சத்தில் அனைத்து வாயில்களும் அடைபட்ட நிலையிலே இருந்தன.
இவருக்கு வேண்டிய உபயம் செய்தால் தான் தேவி இருக்கும் இடத்தை அறிய முடியும் என
யூகித்தார். சிந்தித்துக் கொண்டு இருந்த வேந்தனை கண்டதும் என்ன வேந்தரே உம்மால்
முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள் நான் புறப்படுகிறேன் என்று கூறினார் நாரதர்.
பொறுமை
கொள்ளுங்கள் ரிஷி அவர்களே நான் கூறும் வாக்குறுதிகளால் என் நாட்டில் வாழும் மக்கள்
யாவரும் துன்பம் அடையக்கூடாதல்லவா. அதைக் கொண்டே நான் சிந்தனைக் கொண்டேன் ரிஷி
அவர்களே என கூறினார் வேந்தன். நான் கேட்கும் உபயம் தங்களாலும், தங்களின் மகளால்
மட்டுமே நிறைவேற்றக்கூடிய ஒன்றாகும்.
இதில்
குடி மக்களுக்கு எவ்விதமும் தொடர்பு இல்லை என ரிஷியான நாரதர் கூறினார். ரிஷியின்
கூற்றுகளை ஏற்றுக்கொண்ட வேந்தரும் நாரதர் வினாவிய உபயத்தை செய்து தருவதாக
வாக்குறுதி அளித்தார்.
இன்னல்கள்
இன்னும் தொடரும் என்று கூறிய தேவேந்திரன் கூற்றுக்கு இன்னல்கள் முடிவுக்கு வரும்
காலமும் கணிந்து வந்துள்ளன. இந்த காலத்தில் தேவர்களாகிய நீங்கள் சிறு முயற்சி
செய்தால் இன்னல்கள் நீங்கி வளம் உண்டாகும் என்று கூறினார். பிரம்ம தேவரின் கூற்றை
கேட்ட தேவேந்திரனோ நாங்கள் யாது செய்ய வேண்டும் என கூறினால் அப்பணியை சிறப்போடு
செய்து முடிக்கிறேன் என்று கூறினார்.
மூன்று
உலகங்களிலும் தனது அதிகார பலத்தையும், படையை நிறுவிய தாரகாசுரன் தன் படைகளை கொண்டு
உலக மக்களையும், தேவர்களையும் துன்புறுத்தினாலும் முழு திருப்தி ஏதும் இல்லாமல்
ஒரு குழப்பமான நிலையுடனே காணப்பட்டான் அசுர குல வேந்தன்.
ஏனெனில்,
போரில் தப்பித்த தேவர்களையும், தேவேந்திரனையும் இன்றளவும் கைது செய்ய முடியவில்லை.
தன்னை அழிக்க ஏதாவது திட்டம் தீட்டுவார்களோ என எண்ணினான். மேலும் யோக நிலையில்
உள்ள சிவபெருமானின் நிலையையும் அறியும் பொருட்டு தன் ஒற்றர்களை அனுப்பி விவரத்தை
அறிந்து வருமாறு கூறினான்.
சிவபுராணம்
நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக