Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 25




  குகையில் நிகழ்ந்த மாற்றங்களை கண்ட நாரத ரிஷி தேவேந்திரனே நீர் அனுப்பிய மன்மதன் மட்டுமே இச்செயலை இவ்விதம் புரியக்கூடிய ஆற்றல் கொண்டவர் எனக் கூறி மன்மதனை அனுப்பி நீர் சரியானவரை தான் தேர்வு செய்து உள்ளாய் என தேவேந்திரனை பாராட்டினார்.

மன்மதனோ அடுத்த கட்டமாக, ஆசைகளை தூண்டக்கூடிய தன்னிடம் வலிமை வாய்ந்த அம்பினை தியான நிலையில் இருக்கும் எம்பெருமானை நோக்கி எய்தார். தியான நிலையில் இருந்த சிவபெருமான் பார்வதி தேவியை ஏற்றுக் கொள்வார் என தேவர்கள் யாவரும் எதிர்பார்த்த சுபவேலைகள் நிகழும் என நினைத்த மாத்திரத்தில் அனைத்தும் நேர்மாறாக நிகழ்ந்தன.

பார்வதி தேவியின் மனதை தான் எய்த அம்பினால் மாற்றியதைப் போன்று இந்த பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களிலும் கலந்துள்ள எம்பெருமானை நோக்கி அம்பினை ஏய்த அயத்தமானார் மன்மதன். இருப்பினும் எல்லாம் கொண்டவருமான சர்வேஸ்வரனை வணங்கி தான் இழைக்க போகும் தவறினை மன்னிக்க வேண்டினார்.

பின் காம ஆசைகளை தூண்டக்கூடிய நீல அம்பினை எடுத்து சிவபெருமானை நோக்கி எய்தார். மன்மதன் எய்திய அம்பினால் சிவனின் மீது உள்ள காதல் எண்ணங்கள் மிகைவுற்று சிவனை பார்த்த வண்ணம் பார்வதி தேவி இருந்தார். தன் பதியானவர் எப்போது தவத்தில் இருந்து எழுந்து என்னை அழைப்பார் என ஒவ்வொரு கணப் பொழுதிலும் எண்ணங்கள் அதிகரித்த வண்ணம் பார்வதி தேவி இருந்தார்.

தாட்சாயிணி தேவியின் மறைவுக்கு பின் அவர்களின் உடற்கூறுகளை சக்தி பீடங்களாக அமைத்து அதன்பின் இவ்வுலக வாழ்க்கையை மறந்து தன்னிலை அறிந்து தியான மார்க்கத்தில் அமைதி நிலையில் இருந்த சிவபெருமானை மன்மதனின் அம்புகள் அவருக்கு இடையூறு ஏற்படுத்துவது போல் அமைந்தது. இதனால் சிவபெருமானின் கோபம் மிகையுற்றன.

தேவர்கள் தியான நிலையில் இருந்து தாட்சாயிணி தேவியின் அம்சமாக உள்ள பார்வதி தேவியை ஏற்றுக்கொண்டு இந்நாள் வரை தாரகாசுரனால் அனுபவித்து வந்த இன்னல்களை கலைய சிவபெருமான் அருள் புரிவார் என எதிர்பார்த்த தேவர்களுக்கு அவர்கள் நினைத்த செயலுக்கு எதிர்மாறாக நடந்தன.

சிவனின் அன்பு பார்வையால் பார்வதி தேவி அரவணைக்கப்படுவார் என எண்ணியவர்களுக்கு அவரின் நெற்றிக்கண் திறந்தது என்பது அவ்வளவு சுபநிகழ்வல்ல மற்றும் ஏதோ அசம்பாவிதம் நிகழ உள்ளது என நினைப்பதற்குள், சிவபெருமானின் கோபத்தால் நெற்றிக்கண் திறந்து அதில் இருந்து வந்த நெருப்பு சுவாலைகள் மன்மதனை நோக்கி சென்றன.

தான் செய்த பிழையால் ஏற்பட்ட நெருப்பு சுவாலைகள் தன்னை நோக்கி வந்து அதில் எரிய ஆரம்பித்தார் மன்மதன். யாரும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வால் மன்மதன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி முழுவதும் எரிந்து சாம்பலாகினார்.

இதுநாள் வரை அமைதியாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வந்தவரும் தன்னை விரும்பியவரையும் ரௌத்திரமாக பார்த்த பார்வதி தேவி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்.

மன்மதன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வரும் நெருப்பு சுவாலையால் எரிவதை கண்ட தேவர்கள் பிரபஞ்சத்தில் உதித்த உயிர்களை காக்கும் கடவுளான விஷ்ணுவிடம் சென்று மன்மதன் சிவனின் கோபத்தால் எரிக்கப்பட்டு இருக்கிறார். இவ்விதம் தொடர்ந்தால் மன்மதன் அழிந்து சாம்பலாகி விடுவார் பிரபுவே. தாங்கள் தான் சிவபெருமானின் சினத்தை குறைத்து மன்மதனைக் காக்க வேண்டும் என வேண்டி நின்றனர்.

ஆனால், விஷ்ணு என்னால் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் சிவபெருமானின் மூன்றாம் கண் எந்த நோக்கத்திற்காக திறந்துள்ளதோ அந்த நோக்கத்தை முடிக்கும் வரை கண்கள் மூடுவது என்பது சாத்தியம் இல்லை. இப்பணியை என்னாலும், பிரம்மாவாலும் கூட செய்ய இயலாது என்றார்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த நெருப்பு சுவாலையால் மன்மதன் எரிந்து சாம்பல் ஆனதும் சிவனின் கோபம் குறைந்து நெற்றிக்கண் இமைகளை மூடியது. பின் தியான நிலையில் இருந்த சிவபெருமான் கண்களை திறந்தார். அவரின் அருகில் பார்வதி தேவி திகைப்புடன் நின்று கொண்டு இருந்தார். இன்னிலையில் மன்மதனின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த ரதிதேவி, மனதில் ஒரு இனம்புரியா கவலையும், பதற்றத்தையும் உணர்ந்தாள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக