Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 26



  ரதி தேவி தன் பதியானவருக்கு ஏதோ நிகழக்கூடாத அனர்த்தம் நிகழ்ந்ததாக எண்ணி மன்மதன் சென்ற குகையை அடைந்தார். குகையில் இருந்து புகையானது வெளிவந்த மாயமாக இருந்தது. இதைக் கண்டதும் ரதி தேவி தன் கணவனை நினைத்துக்கொண்டு சிவபெருமான் தவம் மேற்கொண்ட குகைக்குள் சென்றார்.

சிவனின் ரௌத்திர பார்வை தனிந்து அமைதி வந்ததும் தேவி சிவனின் அருகில் சென்றார். ஆனால், சிவபெருமான் தேவியை காணாது காம தேவன் மீது கோபம் கொண்டு அவ்விடத்தை விட்டு புறப்பட்டார். சிவபெருமான் செல்வதை கண்ட தேவி சுவாமி என்று கூறி அவரின் அருகில் சென்று சிவபெருமானை கண்டார். 

காமதேவனின் செயலால் சிவபெருமானின் கோபம் இன்னும் தணியவில்லை இன்னும் என்னென்ன அனர்த்தம் நிகழப் போகிறதோ என தேவர்கள் ஐயம் கொண்டு இருந்தனர். அவ் வேளையில் சிவபெருமான் பார்வதி தேவியின் அழைப்பை ஏற்று நின்றார். 

அதைக் கண்டதும் தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். இனி எவ்விதமான அனர்த்தமும் நிகழப் போவது இல்லை. ஏனெனில், தேவி பார்வதி சிவபெருமானின் கோபத்தை தணித்து விடுவார்கள் என நாரதர் ரிஷி கூற தேவர்கள் அமைதி கொண்டனர்.

ஆனால், சிவபெருமானோ யார் தேவி நீங்கள் என வினவினார். நான் யாரென்று நீங்கள் அறியவில்லையா சுவாமி. நான் தான் பார்வதி உங்களின் இல்லத்தரசி ஆவேன். தாங்கள் கண் திறந்து பார்க்க வேண்டும் என பல காலமாக தங்களின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தேன் என்றார் பார்வதி தேவி.

நீங்கள் யாரென்று நான் அறிவேன் ஆனால் நீங்கள் நாடும் நபர் நானன்று என்று கூறினார் சிவபெருமான். ஆயினும் இல்லை சுவாமி நான் உங்களின் இல்லத்தாள் என்றும் என்னை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் சுவாமி என வேண்டி நின்றார் பார்வதி தேவி.

மேலும், எம்பெருமானே நானே உங்களின் தாட்சாயிணி தேவி ஆவேன். நான் இழைத்த பிழைக்கு தாங்கள் அனுபவித்த வந்த இன்னல்களுக்கும் நானே காரணமாவேன். தங்களின் கூற்றுகளை ஏற்காமல் என் தந்தையின் மீது கொண்ட அன்பால் தங்களுக்கு என்னால் நேர்ந்த அவ சொற்களை களைய சென்ற இடத்தில் அக்னிக்கு என் உயிரை மாய்த்த அதே தாட்சாயிணி தேவி தான் நான் என்று பார்வதி தேவி உரைத்தார். 

தாட்சாயிணி தேவி நான் தான் பார்வதி தேவி என்று உரைத்தார். ஆனால், சிவபெருமானோ நீங்கள் யாராக இருப்பினும் அதை நான் அறிவேன். ஆயினும் நீங்கள் தேடிக் கொண்டு இருக்கும் உங்களின் வாழ்க்கைத் துணையானவர் நான் இல்லை. வேறு இடம் சென்று தேடுவாயாக எனக் கூறிவிட்டு சிவபெருமான் புறப்பட்டார்.

இல்லை சுவாமி நான் உங்களுடன் வாழ்ந்த நாட்கள் தங்களுக்கு நினைவில்லையா? சுவாமி எனக்காக தாங்கள் இயற்றிய இசை மற்றும் எனக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்ற நீங்கள் மேற்கொண்ட செயல்கள் என யாவும் தங்களுக்கு நினைவில் இல்லையா?
நானே உங்களின் சரி பாதி ஆவேன் நீங்கள் தேடிக் கொண்டியிருக்கும் அமைதியை கொடுக்க வல்லவள். 

உங்களின் சக்தியின் சரி பாதி என பழைய நினைவுகளை நினைவுப்படுத்தும் விதமாக பார்வதி தேவி சிவபெருமானிடம் உரையாடிக் கொண்டு இருந்தார்.
தேவியின் பேச்சுகளால் எதை மறக்க வேண்டி எம்பெருமான் தியான நிலையில் இருந்தாரோ, அதே பழைய நினைவுகளை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்தது. அமைதி காத்து வந்த எம்பெருமானால் இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என எண்ணி நிறுத்து உன் உதரல்களை என சினத்துடன் அந்த குகையை அதிரும் அளவு உரைத்தார். 

நான் தாங்கள் தேடும் நபர் நான் இல்லை என்று ஏற்கனவே உரைத்துள்ளேன். மீண்டும் மீண்டும் தேவையில்லாத பேச்சுகளால் என்னை கோபப்படுத்தாதே தேவி. காலத்தை வீணடிக்காதே, உனக்கான பதியை தேடிக் கொள்வாயாக எனக் கூறி குகையை விட்டு சிவபெருமான் புறப்பட்டார்.

தேவி எவ்வளவு முயற்சித்தும் எம்பெருமானை நிறுத்தவும் முடியாமல் அவர் மீது கொண்ட மையலை விவரித்தும் பயனற்றதாக போனது. தான் படைத்த பிரபஞ்சத்திலேயை தனக்கு வேண்டிய அமைதியை தர வல்லக்கூடிய இடமானது என்பது தான் தியானம் மேற்கொண்ட இடமாகும்.

அவ்விடத்தை விட்டு சிவபெருமானும் புறப்பட்டு கைலாய மலைக்கு சென்றார். தன் பதியானவர் பார்வதி தேவி மற்றும் எம்பெருமானான சிவபெருமானை இணைக்க வந்த தன் சுவாமியை தேடி ரதி தேவி இறுதியில் பார்வதி தேவி இருந்த இடத்தை கண்டறிந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக