நாராயணனோ ஆதிசக்தியின் புனர் ஜென்மமாகவும், தாட்சாயிணி தேவியின் மறுபிறவியாகவும் இருக்கும் இந்த அகிலத்தின் தாயாகவும் விளங்கும் பார்வதிதேவி சிவபெருமானை மனம் செய்வேன் என உறுதியுடன் இருக்கிறார்.
ஆனால், அகிலத்தை படைத்த எம்பெருமானான சிவபெருமான் இல்லற வாழ்க்கையை விடுத்து என்றும் யோகி நிலையில் இருக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டுள்ளார். இவ்விருவரின் இணைப்பை இந்த பிரபஞ்சத்தின் இயற்கையும், காலச் சக்கரமுமே உறுதி செய்யும் என கூறினார்.
குகையை அடைந்த பார்வதிதேவியின் தந்தையான இமவான் தன் மகளின் நிலையினை கண்டு என்ன நேர்ந்தது தேவி எனக் கேட்டுக் கொண்டே தரையில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்த தன் மகளின் அருகில் சென்றார்.
தன் மகளை அரவணைத்து யாது நேர்ந்தது மகளே ஏதோ அனர்த்தம் உண்டாயிற்றா? என தன் மகளிடம் வினவினார். இருப்பினும் தேவி ஏதும் உரைக்காமல் தன் தந்தையுடன் நிதானமாகவும், அமைதியாகவும் அவரின் இருப்பிடமான அரண்மனைக்கு சென்றார்.
எப்போதும் மகிழ்வுடனும், கலகலப்பாகவும் இருக்கும் என் மகளான பார்வதிதேவி மிகுந்த வருத்தத்துடன் காணப்படுவது என்பது சரியானதல்ல. நிகழ்ந்தவை யாதாயினும் அதை விரைவில் என் பொருட்டு சரி செய்து என் மகளை முன்பை போல என்றும் இன்முகத்துடன் இருக்கும் பார்வதிதேவியாக மாற்றுவேன் என்று தன் மனதளவில் இமவான் உறுதி பூண்டார்.
அரண்மனைக்கு வந்த பார்வதிதேவி கலகலப்பின்றி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அதனால் சிவபெருமான் தவம் செய்த குகையில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை என தந்தையான பர்வதராஜன்(இமவான்) மிகவும் கவலையுற்றார்.
தன் மகளின் இந்நிலைக்கு காரணமான நாரத முனிவரே இதற்கு சரியான தீர்வையும் அளிக்க வேண்டும் என இரவு நேரத்தில் நித்திரை இல்லாமல் சிந்தனையுடன் ஆழ்ந்து இருந்தார்.
சிறிது நேரத்திற்கு பின்பு நித்திரையில் ஆழ்ந்த பர்வதராஜன்(இமவான்) கனவில் கருமையான இருளைக் கொண்ட இடத்தில் யாரும் உதவும் வண்ணம் இல்லாமல் தனிமையில் இருந்தபோது தன்னைக் காக்க தான் வணங்கும் கடவுளான நாராயணன் அழகிய தாமரை மலரில் இருந்து இருளை போக்கக்கூடிய அழகிய ஒளிகளுடன் காட்சியளித்தார்.
நிகழ்பவை என்னவென்று புரிவதற்குள் தான் என்றும் பூஜிக்கும் நாராயணனை கண்டதும் அவரை பணிந்து வணங்கி நின்றார். பர்வராஜனின் வணக்கங்களை ஏற்றுக்கொண்ட நாராயணன் பர்வதராஜன் தன் மனதில் கொண்டுள்ள மனக்கவலையை கூற முயலுகையில் என் பக்தர்களில் சிறந்தவரான பர்வதராஜனே உன் மனதில் கொண்டுள்ள ஐயத்தை நான் அறிவேன்.
ஞானம் என்றால் என்ன?
ஞானம் என்பது அறிவிற்கு அப்பாற்பட்ட மெய்பொருளை உணர்வது ஆகும். பிறவிக் பெருங்கடலை நீந்தி முக்தி என்னும் பிறவா நிலையை அடையவேண்டும் என்ற உணர்வு எப்பொழுது தோன்றுகிறதோ அக்கணத்தில் இருந்து ஞானம் உதயமாகிறது.
ஞானத்தை பெறும் வழிகள் யாவை?
ஞானத்தை பெற வேண்டுமாயின் எச்செயல் புரிய வேண்டுமாயினும் அச்செயலில் உள்ள உண்மைப் பொருளை, அதாவது மெய்பொருளை உணர்ந்து அச்செயலை செய்யும் போது ஞானம் பிறப்பெடுக்கும்.
மெய்பொருள் உணர்தல் என்றால் என்ன?
எது உண்மை? எது பொய்? நாம் செய்கின்ற செயலினால் விளைகின்ற பலனானது நிரந்தரமான துணையா? தற்காலிகமான துணையா? எனப் பிரித்து பார்த்தலையே மெய்பொருள் உணர்தல் ஆகும். இது தான் உண்மையான பகுத்தறிவு ஆகும்.
இனி அதனை நினைத்து எவ்விதமான கவலையும் கொள்ள வேண்டாம். உன் மகளான பார்வதி தேவி சிவபெருமானை திருமணம் புரிவதற்கென இப்பிறவியை எடுத்துள்ளார். இனி தேவி பார்வதிக்கு சிவபெருமானை திருமணம் செய்து வைக்க தேவையான அனைத்து செயல்களை செய்வீர்களாக என கூறினார் திருமால்.
தன்னுடைய மனதில் நீண்ட நேரமாக கொண்டு இருந்த ஐயம் நீங்கியது என மகிழ்ச்சி கொண்டு நாராயணனை வணங்க, நாராயணன் அவ்விடத்தை விட்டு மறைந்தார். திடீரென எழுந்த பர்வதராஜன் தான் கண்டது கனவா அல்லது நான் என்றும் வழங்கும் நாராயணனின் விருப்பமா என யோசித்த கணத்தில் ஓர் அசரீரி ஒலித்தது.
பர்வதராஜனே நீர் கண்ட கனவில் கூறப்பட்டவை யாவும் உண்மையே என அசரீரி ஒலித்தது. உடனே எழுந்த பர்வதராஜன் தான் என்றும் பூஜித்து வணங்கும் நாராயணனை கண்டு வணங்கி தங்களின் விருப்பம் எனது கடமையாகும் எனக் கூறி வணங்கி நின்றார் பர்வதராஜன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக