Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 31




ர்வதராஜன் அமைதியுடன் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அவ்வேளையில் நாரத முனிவரும் வருகைத் தந்தார். நாரதரை கண்ட மன்னனான பர்வதராஜன் தான் கண்ட கனவு பற்றியும், அந்த கனவில் நாராயணன் வருகைத் தந்ததையும், அதில் அவர் கூறிய கருத்துக்களையும் கூறினார்.

மேலும், தன் மகள் பார்வதிதேவி சிவபெருமானுக்கு பணிவிடை செய்து வந்ததில் இருந்து என் மகள் ஏனோ சோர்வான நிலையில் காணப்படுகிறாள். அதற்கான காரணமும் தெரியவில்லை என பர்வதராஜன் நாரதரிடம் கூறினார்.

இனி தாங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என சொல்லி பார்வதிதேவியை காணச் சென்றார் நாரதர். நாரதரை கண்ட பார்வதிதேவி அவரை வணங்கி நின்றார். நாரதரோ தேவி கைகள் மட்டும் வணக்கம் சொல்லுகின்றன. ஆனால், மனமோ இங்கில்லை தேவி எனப் பேச்சை தொடர்ந்தார். பார்வதிதேவியோ எதையும் உரைக்காமல் அமைதி காத்து வந்தார்.

ஆனால், தன் மனதில் எழுந்துள்ள ஐயத்தை போக்க எவறுமில்லை என எண்ணிய கணத்தில் நாரதரோ ஏதாவது ஐயம் ஏதேனும் இருப்பின் என்னிடம் நீங்கள் தாராளமாக கேட்கலாம். என்னால் இயன்றளவு உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று கூறினார்.

தேவி பார்வதியோ வேறு மார்க்கங்கள் இல்லாததாலும் தன் மனதில் எழுந்த ஐயங்களை நாரதரிடம் கூறி அதற்கான மார்க்கங்கள் உள்ளனவா? என அறியலாம் என எண்ணினார். அதற்காக பார்வதிதேவி, நாரதரிடம் முக்காலமும் உணர்ந்த நாரத முனிவரே நான் ஒருவரின் மீது மையல் கொண்டுள்ளேன். ஆனால், அவரோ என் அன்பை உணராமல் வெறுக்கின்றார். என் மனமும், சிந்தையும் அவரையே எண்ணுகிறது. அவரின் மனதில் எண்ணைப் பற்றிய எண்ணங்களை மாற்றி அவர் என் மீது மையல் கொள்ள ஏதேனும் வழிகள் இருப்பின் தாங்கள் கூற வேண்டும் என்று கூறினார்.

தேவி என்னிடம் மையல் சம்பந்தப்பட்ட உதவிகளை கேட்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை தேவி. நானோ உலகவாழ்க்கையில் உள்ள அனைத்தையும் துறந்தவன் என்று கூறினார். இருப்பினும் ஆண் மகன்களின் மனம் விரும்பிய செயல்களை செய்யும் போது அவர் உங்கள் மீது உள்ள எண்ணங்களை மாற்ற இயலும் என்று கூறினார்.

தேவியே நீங்கள் மையல் கொண்டவரை நான் அறிந்து கொள்ளலாமா என நாரதர் கேட்டார். ஆனால், அங்கு நிகழ்ந்தவை யாவையும் நாரத ரிஷி உணர்ந்தவர். தேவியோ எதையும் கூற இயலாமல் காலம் பதில் உரைக்கும் என நாரத முனிவரிடம் கூறினார்.

பார்வதிதேவி தன் தந்தையான பர்வதராஜனை கண்டு அவரிடம் தன் விருப்பத்தை கூறினார். அதாவது சிவபெருமானை மணக்க வேண்டும் என்பதை தேவி கூறினார். தேவி கூறியதும் நாராயணன் கனவில் வந்து உரைத்தவை யாவும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என தன்னுடைய மனதில் நினைத்து மகிழ்ச்சி கொண்டார்.

சிவபெருமானை திருமணம் செய்ய ஏதாவது உபயம் உள்ளதா தந்தையே என பார்வதிதேவி வினவினார். அவ்வேளையில் நாரத முனிவரும் வருகைத் தர, இதுவே சரியான காலம் என கருதி சிவபெருமானை பற்றிய ஐயத்தை எழுப்பினார். நாரதரோ இங்கு நிகழும் நிகழ்வுகள் யாவையும் உணர்ந்தவராகவும் ஆனால், எதுவும் அறியாதவராக சிவபெருமானை பற்றி கூறினார்.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்பது மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தி நமது சிந்தனைகளை மேம்படுத்தும்.

மேலும், தியானம் நமது உயிர் வாயுவான பிராண வாயுவை சீராக்கி நமது உடலின் சக்தியை அதிகப்படுத்தக்கூடியவை ஆகும்.

தியானத்தால் நாம் அடையக்கூடிய பயன்கள் யாவை?

தான் என்ற ஆணவம் நீங்கும்.

உடலும், மனமும் சீராகும்.

தியானத்தின் மூலம் கிடைக்கும் மனஅமைதி என்பது மிகப் பெரியதாகும்.
இந்த பிரபஞ்சத்தை படைத்த எம்பெருமானான சிவபெருமான் எதன் மீதும் பற்று கொள்ளாமல் என்றும் யோக நிலையிலே இருக்க விரும்புபவர். அவரை அடைவது என்பது தவத்தினால் மட்டுமே அடையே இயலும் என்று கூறினார்.

தவத்தினால் மட்டுமே சிவபெருமானின் மனதை குளிர்விக்க இயலும். மேலும், சிவபெருமான் தவத்தினால் அகம் மகிழ்ந்தார் எனில் தவம் மேற்கொண்டவர் வேண்டும் வரத்தினை வேறுபாடு இன்றி வழங்கக்கூடியவர் என்று கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக