Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 4




  தாரகாசுரன் சிவபெருமானிடம் நான் இந்த பூவுலகில் தோன்றும் உயிர்கள் மற்றும் எவராலும் அழியாமல் இருக்கும் சாகாவரத்தை தந்தால் அடியேனின் உள்ளம் குளிரும் என தன் மாய வார்த்தைகளால் அசுரனான தாரகாசுரன் கேட்டான்.

எதற்கும் மயங்காத மாய வித்தைகளுக்கு அப்பாற்பட்ட பக்தியால் மட்டும் உணரக்கூடிய பரம்பொருளான சிவபெருமான், தாரகாசுரனே! பிரம்மன் சிருஷ்டித்த இந்த பூவுலகில் தோன்றிய அனைத்து உயிர்களும், தோன்றினால் என்றாவது ஒரு நாள் மடிய வேண்டும் என்பது விதி.

இதுவே பிரம்மன் படைத்த உலகில் இயற்கையின் நியதி. இதற்கு நானும் அடிபணிவேன். இவ்வரத்தினை விட்டு வேறு வரத்தினை கேள் என்று கருணாமூர்த்தியான சிவபெருமான் கூறினார்.

தான் எண்ணிய வரம் கிடைக்கப் பெறாததால் மிகவும் சோர்வுற்ற தாரகாசுரன் வேறு வரத்தினை பற்றி சிந்தித்து சிவபெருமானிடம் வினவினான். குல வேறுபாடு இன்றி யாவருக்கும் காட்சியளிக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் என்னுடைய அந்திமா முடிவு என்பது தங்களின் புத்திரர்களால் மட்டுமே இருக்க வேண்டும் பெருமானே!. இதுவே அடியேனின் விருப்பம் என்று தாரகாசுரன் கூறினான்.

தாரகாசுரனின் இந்த வரத்தினை கருணாமூர்த்தியான சிவபெருமான் அளித்து அடியேனின் மனதை குளிர வைத்தார். எல்லா யுகங்களில் நடக்கும் எல்லா நிகழ்வுகளை அறிந்த காலன் எதையும் அறியாத அசுரனால் உண்டாகும் நன்மையை அறிந்து தாரகாசுரனே நீர் வேண்டிய வரத்தினை யாம் அளித்தோம் என்று சிவபெருமான் கூறி பஞ்சபூதங்களில் கலந்து மறைந்தார்.

சிவபெருமான் தாரகாசுரனுக்கு வரம் அளிக்கும் போது ஆதிசக்தி இல்லாத யோகி வடிவிலே உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சியளித்தார். ஏனெனில், சிவனின் ஒரு பாதியான சக்தி தட்சப் பிரஜாபதிக்கு மகளாக பிறந்துள்ளார் என்பதை மும்மூர்த்திகள் மட்டுமே அறிந்தது.

ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்மனின் மகனான தட்சன் செருக்கு மற்றும் ஆணவத்தினால் இவ்வுலகம் மட்டுமல்லாமல் மூவுலகிலும் உள்ள தேவர்கள், முனிவர்கள் மற்றும் மானிட பிறவிகள் யாவையும் என் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்னும் பேராசை கொண்டு பிரம்மாவிடம் அதற்கான வழி ஏதும் உண்டோ? என்று வினவினான்.

தன் மகனான தட்சன் மீது அன்பு கொண்ட பிரம்ம தேவர் நீர் அண்டநாதனான சிவபெருமானின் பதியான அம்பிகையை நோக்கி தவம் மேற்கொண்டு அந்த அம்பிகையை உனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்னும் வரத்தினை கேட்டு பெறுவாயின் நீர் விரும்பிய எண்ணம் ஈடேறும் என்று தந்தையான பிரம்ம தேவர் தன் மகனுக்கு உபதேசித்தார்.

உபதேசம் பெற்ற தட்சனுக்கு அம்பிகை எனக்கு மகளாக பிறப்பெடுத்தால் மூவுலகமும் என் ஆணைக்கு கட்டுபடுவார்கள் என்னும் பேராசை உண்டாயிற்று. தன் தந்தையின் உபதேசங்களை ஏற்றுக்கொண்ட தட்சன் ஆதி சக்தியான உமாமகேஸ்வரியை நோக்கி நீண்ட யுகங்களாக தவத்தினை மேற்கொண்டார்.

இந்த தவத்தின் பலனாக அண்டத்தை ஆளும் பரம்பொருளின் ஒரு பாதியான அம்பிக்கை தட்சனின் தவத்தால் மனம் மகிழ்ந்து பிரஜாபதியான தட்சனுக்கு காட்சியளித்தார். அம்பிகையை கண்ட தட்சன் தான் செய்த தவத்தினால் இன்று வரை அனுபவித்த இன்னல்கள் யாவும் நீங்கி நான் சிறப்படைந்தேன் தேவி என்று தன் மட்டற்ற மகிழ்ச்சியை அம்பிகையிடம் கூறி தன் அகம் மகிழ்ந்தார் தட்சன்.

கருணாமூர்த்தியின் இல்லத்தாளான பரம்பொருளின் ஒருபாதியான அம்பிகை நீர் வேண்டும் வரத்தினை கேள் என்று கூறினாள். பிரஜாபதியான தட்சன் அம்பிகையே மூவுலகில் உள்ள தேவர்கள், முனிவர்கள் மற்றும் மானிடர்கள் யாவரும் என் ஆணைக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் என்றும் அது மட்டுமல்லாமல் அம்பிகையே தாங்கள் எனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்னும் வரத்தினை வேண்டினார்.

தாயுள்ளம் கொண்ட அம்பிகை தனது பக்தரின் வேண்டுதலுக்கு இணங்கி தட்சன் கேட்ட வரத்தினை தந்து அருள் பாவித்தாள். மேலும், நீர் நல்வழி விட்டு விலகும் தருவாய் உண்டாயின், நீர் பெற்ற வரமே உனது அழிவிற்கான பாதையாகி விடும் என்று கூறி அம்பிகை மறைந்தார்.

மனம் மகிழ்ந்த தட்சன் ஒரு பேரரசை நிறுவி தட்சமபுரி என்னும் நாட்டை ஆண்டு வந்தார். தட்சனுக்கு பிறந்த புதல்விகளில் ஒரு புத்திரியே அம்பிகை அம்சம் உள்ள சதி தேவி ஆவாள். சிவனிடம் பெற்ற வரத்தால் மனம் மகிழ்ந்த தாரகாசுரன் யோகியாக இருக்கும் சிவபெருமானுக்கு எப்போதும் வாரிசுகள் பிறக்க போவது இல்லை என்றும், நான் சாகாவரம் பெற்றேன் என்றும் எள்ளி நகையாடினான்.

பின்னாளில் சிவனின் மீது ஏற்பட்ட வன்மம் காரணமாக தன் மகளான சதியை சிவனுக்கு மனம் முடித்து தர மறுத்த தட்சன், தன் தந்தையான பிரம்ம தேவரிடம் இதற்கான தீர்வை அளிக்குமாறு வேண்டி நின்றான். பிரம்ம தேவர் நீர் செய்த தவத்தால் தான் இன்று அம்பிகையே உனக்கு மகளாக பிறந்துள்ளாள் என்றும், தன் மகனுக்கு நிகழ்ந்த பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தினார்.

இருப்பினும் தன் அன்பு மகளான சதியை சுடுகாட்டில் வாசம் செய்யும் பித்தனாகிய சிவபெருமானுக்கு மனம் செய்து வைக்க தயங்கினார் பிரஜாபதியான தட்சன். தன் தந்தையின் அறிவுரைகளால் திருப்தி அடையாத தட்சப் பிரஜாபதி தன் நாட்டிற்கு திரும்பினார்.

அங்கு சதி சிவனை மணம்முடிப்பதற்கான விரதங்களை மேற்கொண்டாள். இதனைக் கண்ட தட்சப் பிரஜாபதி சிவனை உனக்கு மணம்முடித்து வைக்க எனக்கு விருப்பம் இல்லை என்று தன் முடிவினை திடமாக கூறினார் தட்சன். இதனால் மிகவும் கவலையுற்ற சதி தேவி எந்நிலை யாயினும் தான் மேற்கொண்ட விரதத்தை கைவிடல் ஆகாது என்று கூறி விரதத்தை கடைபிடித்தாள்.

இந்நிலையில் சிவனின் வாரிசுகளால் மட்டுமே அழிவு நேரிடும் என வரம் வாங்கிய தாரகாசுரன் இவர்களின் மையல் விஷயங்களை அறிந்து தனது அழிவிற்கான காலம் நெருங்கி விட்டதா? என அறிந்து வெகுண்டான். பின் தேவி இருந்தால் மட்டுமே சிவனுக்கு திருமணம் நிகழும் இல்லாவிடில் சிவன் என்றுமே யோகி வடிவம் ஆவான் என்று கூறி சிவனின் ஒரு பாதியான சதியை கொல்ல தனது படையில் உள்ள சிறந்த படைவீரர்களை அனுப்ப ஆயத்தமானான்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக