காலையில் சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு உணவை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சூப்பரான சேமியா வெண்பொங்கல் எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
சேமியா - 3 கப்
பயத்தம் பருப்பு - 3 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
முந்திரிப்பருப்பு - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இஞ்சியை துருவி வைத்துக்கொள்ளவும். பின் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்க வேண்டும். பின் பயத்தம் பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்க வேண்டும்.
பிறகு அதனுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்கவும். பின் அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
கடைசியாக மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அதை சேமியா கலவையில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்கினால், அருமையான சேமியா வெண்பொங்கல் தயார்!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக