Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜனவரி, 2020

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

 Image result for திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்"
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கின்றது. மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8கி.மீ தொலைவில் உள்ள இந்த திருக்கோவிலில் தான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருக்கோவில் வரலாறு :

கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

கடைசியில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து அருளினார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன், பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்தார். தேவர்கள், முருகப்பெருமானுக்குத் தங்களுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன், தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருக்கோவில் அமைப்பு :

சுப்ரமணிய சுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சன்னிதி, துர்காதேவி சன்னிதி, கற்பக விநாயகர் சன்னிதி, சத்தியகிரீஸ்வரர் சன்னிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சன்னிதி ஆகிய ஐந்து சன்னிதிகள் இங்கு உள்ளன. இந்த ஐந்து சன்னிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சன்னிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சன்னிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் படைப்புச் சிற்பங்களும் உள்ளன.

திருக்கோவில் சிறப்புகள் :

முருகப் பெருமானின் அறுபடை வீடு கோவில்களில், திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அளவில் பெரியதாகும்.

லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமய குரவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் ஆகியோர் இத்திருத்தலத்தில் ஆலய வழிபாடு செய்து பாடல்கள் பல பாடியுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக