ராமநாதபுரத்திலிருந்து ஏறத்தாழ 51கி.மீ தொலைவிலும், தேவிப்பட்டினத்திலிருந்து ஏறத்தாழ 25கி.மீ தொலைவிலும் காண்போரைக் கவர்ந்திழுக்கும் இடமாக காரங்காடு கடற்கரை அமைந்துள்ளது.
சிறப்புகள் :
ராமநாதபுரத்தின் அழகிய சுற்றுலாத்தலமாக காரங்காடு கடற்கரை திகழ்கிறது. காரங்காடு பகுதிகள் சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த எழில் கொஞ்சும் கடற்கரையாகவும் அமைந்துள்ளது.
இந்தக் கடற்கரைப் பகுதியைச் சுற்றிலும் இயற்கையான சதுப்புநிலக்காடுகள் அமைந்துள்ளது. அங்கு மணற்பாங்கானப் பகுதிகளாக இருப்பதால் நண்டுகள் மற்றும் நத்தைகள் காணப்படுகிறது.
விலங்குகளின் இருப்பிடமாக விளங்கும் அழகிய மாங்குரோவ் காடுகள் இந்தப் பகுதியில் இருபுறமும் வளர்ந்து, நம் கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
சதுப்பு நிலக்காட்டில் நடுவில் காட்சிக் கோபுரம் ஒன்று உள்ளது. இதன் மீது நின்றுக் கொண்டு சுற்றுலாப்பயணிகள் கடலில் இருக்கும் அழகுகளை ரசிக்க முடியும்.
சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக படகுகளில் சவாரி செய்யும் வசதியும் உள்ளது. படகுகளில் சவாரி செய்யும்போது கடற்கரையின் ரம்மியமான காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கடல்பசு, கடல் புறா போன்ற கடல் வாழ் உயிரினங்களும், பிளமிங்கோ, நீர் காகம், கொக்கு, நாரை, கூழைக்கடா போன்ற பறவைகளும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
எப்படிச் செல்வது?
ராமநாதபுரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ராமநாதபுரத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக