Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 4 ஜனவரி, 2020

நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலைக்கு செல்லும் பெண்ணா? அப்போ கட்டாயம் "இதை" தெரிந்துகொள்ள வேண்டும்!

கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில் இன்டர்நெட் சேவை இருக்கிறது என்கிற தைரியத்தில் தான் பெண்பிள்ளைகளை பெற்றெடுத்த அப்பா அம்மக்கள் தங்கள் மகள்களை தைரியமாக இரவு நேரங்களிலும் கூட வெளியே அனுப்பி வைக்கிறார்கள், இது சில ஆண் "குழந்தைகளை" பெற்ற அம்மா அப்பாக்களுக்கு பொருந்தும்.
ஆனால் நாம் நம்புவது போல எல்லா நேரத்திலும் இணைய இணைப்பு நமக்கு கைகொடுப்பதில்லை. சில நேரங்களில் இணையம் சரியாக வேலை செய்யாதா பகுதிக்குள் நாம் இருப்போம்.

அம்மாதிரியான சூழ்நிலைகளில் நமது இருப்பிடத்தை பற்றிய தகவல்களை நமது அம்மா அப்பாவுடன் அலல்து நண்பர்கள் அலல்து குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அம்மாதிரியான சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ளும் பட்சத்தில் இந்த "தந்திரத்தை" பின்பற்றவும்!
 
லோக்கேஷனை (இருப்பிடத்தை) பகிர பல வழிகள் உள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளுக்கு இணைய இணைப்பு தேவை. ஒருவேளை இணைய இணைப்பு இல்லை என்றால் அந்த இடத்தில் RCS எனப்படும் Rich Communication Services உங்களுக்கு கைகொடுக்கும்.

ஆர்.சி.எஸ் என்பது பயனர்கள் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் ஒரு சேவையாகும். ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியிலான எஸ்எம்எஸ் வழியாக இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறன் எப்போதும் கவனிக்கப்படாத அம்சங்களில் ஒன்றாகும். அதை கவனிக்க வைக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

சரி வாருங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எஸ்எம்எஸ் வழியாக உங்கள் இருப்பிடத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை பற்றி நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம்.

1. நீங்கள் இதுவரை பதிவிறக்கம் (டவுன்லோட) செய்யவில்லை என்றால், Google Play Store-இலிருந்து Android Messages பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

2. பின்னர் அதை இன்ஸ்டால் செய்து, தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கவும்.

 
3. பின்னார் அதை உங்களின் ஸ்மார்ட்போனின் default SMS ஆப் ஆக மாற்றி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

4. இப்போது Start Chat பொத்தானை கிளிக் செய்யவும்.

5. பின்னர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை கைமுறையாக உள்ளிடவும் அல்லது காண்டாக்ட்ஸ் பட்டியலிலிருந்து தேர்வு செய்யவும்

6. இப்போது சாட் விண்டோவில் உள்ள ‘+’ ஐகானை கிளிக் செய்யவும்.

7. பின்னர் கீழே ஸ்க்ரோல் செய்து ‘Maps’ எனும் விருப்பத்தைத் தேடி அதை கிளிக் செய்யவும்.

8. இப்போது அடுத்த விண்டோவில் காட்சிப்படும் ‘Send this location' எனும் விருப்பத்தை கிளிக் செய்ய உங்களின் இருப்பிடம் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு ஷேர் செய்யப்படும், அவ்வளவுதான்!

1 கருத்து: