Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

நம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி!

ங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி ரகசிய எண்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை தமிழ்நாடு போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.

முதியவர்கள், பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் போல பேசுவதுதான் மோசடிக் கும்பலின் வழக்கம். குறைந்த வட்டியில் கடன் என்றோ, வங்கிக் கணக்குக்கு ரிவார்டு பாய்ண்டுகள் கிடைத்துள்ளதாகவோ, வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு முடக்கப்பட்டதாகக் கூறியோ இந்தக் கும்பல் ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்றது தெரியவந்துள்ளது.

ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண், நிறைவுத் தேதி, சிவிவி எனப்படும் பாதுகாப்புக் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பலரிடம் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. கார்டு விவரங்களைக் கொண்டு கூகுள் பே, மோபிக் விக், பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளில் கணக்குகளைத் தொடங்கி இந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

 இந்த கும்பல் செல்போன் எண்களை மாற்றி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால் அவர்களைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும் அந்தக் கும்பல் அடிக்கடி மாற்றும் செல்போன் எண்களை தொழில் நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், அவர்கள் டெல்லியில் இருந்து மோசடியை அரங்கேற்றுவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டெல்லியில் 4 நாட்கள் முகாமிட்ட தமிழ்நாடு தனிப்படை போலீஸார், தீவிரக் கண்காணிப்பு, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தீபக் குமார், தேவ்குமார், வில்சன் என்ற 3 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாகியுள்ள சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களிடமும் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறுவோரிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கார்டுகளின் ரகசிய விவரங்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக