Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ம்ம்ம்... தனியா இருக்கியா..? இந்த நம்பருக்கு கால் பண்ணு... சொக்க வைத்த பெண் குரல்.!

செல்போனில் பெண் குரலில் கொஞ்சிப் பேசி பலரை ஏமாற்றிய நெல்லையைச் சேர்ந்த இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகனை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.


அதன் பின்னர் போலீசாரின் விசாரணையில் அவர் தெரிவித்ததாவது; '' ஆன்லைனில் நான் புகார் தெரிவிக்கவில்லை. நான் அண்ணாநகரில் உள்ள லிப்ட் கம்பெனியில் டெக்னீசியனாகப் பணியாற்றிவருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் யூடியூப் பார்த்தபோது ஒரு செயலியின் லிங்க் வந்தது. அதை டவுன்லோடு செய்தேன். அந்தச் செயலியில் வேலைவாய்ப்பு தொடர்பாக தேடிக் கொண்டிருந்தேன்.

சில மணிநேரம் கழித்து பிரியா என்ற பெயரில் பெண் ஒருவர் பேசினார். அவர் என்னிடம், பெண்களின் புகைப்படங்கள் தன்னிடம் உள்ளன. அதை அனுப்ப 100 ரூபாய் அனுப்புமாறு கேட்டார். நான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறி இணைப்பைத் துண்டித்தேன்.பிறகு பிரியா, தன்னுடைய செல்போன்களிலிருந்து எனக்கு தொடர்ந்து போன் செய்தார்.

மேலும் குறுஞ்செய்தி, போன் கால் செய்து தொல்லை கொடுத்தார். தொல்லை தாங்க முடியாமல் ஆன்லைனில் 100 ரூபாய் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தது. மீண்டும் அந்தப் பெண், வீடியோ அனுப்ப 1,500 ரூபாய் கேட்டார். நீங்கள் யார், நேரில் வாங்க என்று கூறி என்னால் பணத்தை அனுப்பமுடியாது என்று கூறினேன். அதன்பிறகுதான் என்னுடைய செல்போன் நம்பரை பதிவு செய்து காவல் துறை இணையதளத்தில் ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளார்.

எனவே எனக்கு தொல்லை கொடுத்த பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார். அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் பிரியா யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது பிரியா என்ற பெயரில் போனில் பேசியது நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த வளன் ராஜ்குமார் ரீகன் என்று தெரியவந்தது. வளன் ராஜ்குமார் ரீகன், செல்போனில் பெண் குரலில் பேசி பலரை ஏமாற்றியதை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவரின் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஸ்முக், உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வளன்ராஜ்குமாரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் எனப் பல இடங்களில் உள்ளவர்களிடம் வளன்ராஜ்குமார் பெண் குரலில் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.இவர், இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்துவந்துள்ளார். பின்னர் இந்தச் செயலி மூலம் கடந்த 3 ஆண்டுகளாக மோசடி வேலையில் ஈடுபட்டுவருகிறார்.

வளன்ராஜ்குமாரின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். வளன் ராஜ்குமார் ரீகன் பயன்படுத்திய செயலியின் நோக்கம் `நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா, தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியென்றால் இந்தச் செல்போன் நம்பருக்குப் பேசுங்கள்' என்பதுதான் என்கின்றனர் போலீஸார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக