சந்திர மேடு என்பது குரு மேட்டுக்கு
எதிரே உள்ள மேடாகும். இந்த மேடு நன்றாக அமையப்பெற்றவர்கள் வட்ட வடிவமான முகத்தைப்
பெற்றிருப்பார்கள்.
இவர்களுக்கு இளமையில் திருமணம் செய்ய முயற்சிகளை
மேற்கொண்டாலும் காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம்
உண்டாகும்.
சுறுசுறுப்பான எண்ணங்கள் இருக்கும். ஆனால்,
செயல் அப்படி இருக்காது. எல்லாவற்றையும் மனதில் வைத்து குழம்பிக் கொண்டே
இருப்பார்கள்.
பயணங்களில் விருப்பம் உள்ளவர்கள். ஓரிடத்தில்
இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
எப்படியாவது தான் விரும்பியதை அடைய
முயல்வார்கள். சுயநலவாதிகளாகவும், புதுமை விரும்பிகளாகவும் இருப்பார்கள். அழகை
ரசிப்பார்கள்.
இவர்கள் பொறுமைசாலிகளாகவும், நல்லவர்களாகவும்
இருப்பார்கள். தன்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வார்கள்.
சந்திர மேடு நன்றாக உயர்ந்து உச்சம் பெற்று
இருந்தால் தான் மேற்கூறிய பலன்கள் நடைபெறும். பள்ளம் தட்டி நீச்சமாக இருந்தால்
மேற்சொன்ன பலன்களுக்கு நேர்மாறான பலன்கள் நடைபெறும்.
கிரக
மேடு உயர்வாகவும், தாழ்வாகவும் இல்லாமல் நடுநிலைமையாக, சரிசமமாக இருக்குமேயானால்
பலன்கள் அதற்கு ஏற்ப அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக