கைரேகை ஜோதிடத்தில் பல முறைகளில் ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. அந்த வகையில் இப்பொழுது சுண்டு விரலின் அளவை வைத்து அவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்.
சுண்டு விரலானது ஆள்காட்டி விரல் அளவுக்கு நீளமாக இருந்தால், அவர்களுக்கு அரசியல் துறை சிறப்பாக இருக்கும். ராஜதந்திரங்கள் தெரிந்தவராக இருப்பார்கள்.
சுண்டு விரல், பாம்பு விரல் அளவுக்கு நீண்டு இருந்தால் விஞ்ஞானத்திலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குவார்கள்.
சுண்டு விரலானது மோதிர விரல் அளவுக்கு நீண்டிருந்தால் தங்களுடைய சக்தியையும், சாமார்த்தியத்தையும் விரயம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை வெகு விரைவில் தன்வசமாக்கிக் கொள்வார்கள்.
மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் ஒரே அளவில் இருந்தால் அதிக பலமும், ஆளுமை சக்தியும் கொண்டு திகழ்வார்கள். எதிலும் தனித்தன்மை கொண்டிருப்பார்கள்.
ஆள்காட்டி விரல், பெருவிரல் மற்றும் மோதிர விரல் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சுண்டு விரல் மட்டும் சற்று கீழ் நிலையில் இருந்தால், அவர்கள் கனவுலகில் வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்கள் கனவுகளை நிஜமாக்க அதிக கஷ்டப்படுவார்கள்.
சுண்டு விரல் எல்லா விரல்களையும் விட நீண்டு இருந்தால், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்க மாட்டார்கள். அனைத்து துறையிலும் பிரபலமடைவார்கள். எப்போதும் யோசனையில் இருப்பார்கள். மற்றவர்களை நம்ப மாட்டார்கள். அரசு அனுகூலம் இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிறருக்கு உபதேசம் செய்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக