>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 20 பிப்ரவரி, 2020

    ஒற்றுமை.!!

    Image result for ஒற்றுமை  ரு வயல் வரப்பில் மூன்று கொக்குகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தன. எங்கு சென்றாலும், ஒன்றாக சென்றன. இரை தேடச் சென்றாலும் கிடைத்த இரையை மூன்று கொக்குகளும் பகிர்ந்து உணவு உண்டு வாழ்ந்து வந்தன. இவர்கள் ஒற்றுமையுடன் இருப்பது மற்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பொறாமையாக இருந்தது.

    அங்கிருந்த நரி ஒன்று, அந்த மூன்று கொக்குகளையும் பிரித்தே தீருவேன் என்று சபதமிட்டபடி களம் இறங்கி சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தது. ஒரு நாள் மூன்று கொக்குகளும் வயல் வரப்பில் இரை தேடிக்கொண்டிருந்தன. நரி தன் சூழ்ச்சியை பயன்படுத்த திட்டமிட்டது.

    அதன்படி முதலில் மூன்று கொக்குகளிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டது. சிறிது நாட்களுக்கு பிறகு, தனிமையில் இருந்த ஒரு கொக்கிடம் சென்று, கொக்கு நண்பரே! இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள், அவலட்சணத்தின் ஒட்டு மொத்த உருவமாக திகழும் உங்கள் நண்பர் கொக்குகளுடன் எப்படி நட்புடன் இருக்கிறீர்கள்! உங்கள் அழகுக்கும் அந்தஸ்துக்கும் அவர்கள் நட்பு சரியானதா? என்று கேட்டது.

    இதனை கேட்ட கொக்குவிற்கு நரி சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. என்ன செய்வது! எல்லாம் என் நேரம் என்றபடி புலம்பியது. வந்த காரியம் முடிந்த திருப்தியில் உடனே நரி அந்த இடத்தை விட்டு சென்றது. இப்போது நரி இரண்டாவது கொக்குவிடம் சென்றது. கொக்கு நண்பரே எப்படி உள்ளீர்கள் என்று நலம் விசாரித்தது.

    நலம் நரி நண்பரே, என்று பதிலுக்கு இரண்டாவது கொக்கு கூறியது. இப்போது தன் சூழ்ச்சியை தொடங்கியது நரி. கொக்கு நண்பரே! நீர் எவ்வளவு அறிவு உடையவர். எந்த குளத்தில் எவ்வளவு மீன்கள் உள்ளது என்பதை உங்களுடைய அறிவால் கண்டுபிடித்து விடுவீர்கள். இவ்வளவு அறிவுடைய நீங்கள் ஒன்றும் தெரியாத உங்கள் நண்பர் கொக்குகளுடன் நட்பு கொள்வதா? என்று சூழ்ச்சியை கிளப்பிவிட்டது. நரி கூறிய வார்த்தைகளால், இரண்டாவது கொக்குவும் யோசனை செய்ய ஆரம்பித்தது. நரி தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் கிளம்பிப் போனது.

    இப்போது மூன்றாவது கொக்குவிடம் நரி சென்றது. அந்த கொக்குவிடம், கொக்கு நண்பரே! நீங்கள் எவ்வளவு வீரம் படைத்தவர். இரை பிடிப்பதிலும்! பறப்பதிலும், எவ்வளவு வீரமானவர். இவ்வளவு வீரம் உடைய நீங்கள் ஒன்றுக்கும் உதவாத மற்ற இரண்டு நண்பர் கொக்குகளுடன் சுற்றித் திரிந்தால் உங்களின் வீரமே உமக்கு மறந்துவிடும்! என்று கொக்குவிடம் கூறியது.

    நரியின் சூழ்ச்சியால் அந்த மூன்று கொக்குகளுக்குள் நாளடைவில் பகைமையும், யார் பெரியவன் என்ற சண்டையும் ஏற்பட்டது. ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டன. இதனால் ஒற்றுமையுடன் இருந்த மூன்று கொக்குகளும் தனித்தனியே பிரிந்தன.

    இவற்றையெல்லாம், பார்த்துக் கொண்டிருந்த கிளி ஒன்று, மூன்று கொக்குகளையும் சந்தித்து நரியின் சதித் திட்டத்தை சொல்லி முடித்தது. இதனைக் கேட்ட மூன்று கொக்குகளும்! நரியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டன. நல்ல நட்பை இழந்தோமே! என்று வருந்தின. இதுபோல் இனிமேல் புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்! என்று கிளி அறிவுரை கூறிய பின்பு மூன்று கொக்குகளும் மறுபடியும் நட்புடன் இருந்தன.

    தத்துவம் :

    முன்பின் தெரியாதவர்கள் தேவையில்லாமல் நம்மைப் புகழ்ந்தால் அதற்கு மயங்கி விடக்கூடாது. அப்படி மயங்கும் பலவீனம் ஒருவருக்குள் இருந்தால் அவரை மற்றவர்கள் விரைவில் தங்கள் வசப்படுத்திவிட முடியும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக