புதன் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் பகுதியை குறிக்கும். புதன் மேடு நல்ல முறையில் அமைந்திருந்தால் உயரம் குறைவானவர்களாகவும், பருமனான தோற்றம் உடையவர்களாகவும், இளமை பூரிக்கும் முக அமைப்பை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
குணநலன்கள் :
புதன் மேடு உயர்ந்து காணப்பட்டால் நல்ல புத்தி சாதுர்யமுள்ளவர்களாகவும், குடும்பத்தின் மீது பாசம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி ஒழுங்கு முறை தவறாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு சரியாக திட்டமிடத் தெரியாது. ஒரு பிரச்சனையை ஆரம்பித்து மற்றொரு பிரச்சனையில் நுழைவார்கள்.
இவர்களின் குடும்பத்தில் இன்ப சூழ்நிலை நிலவும். சிறிய வயதில் திருமணம் நடக்கும். மனைவி, மக்கள் மேல் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும், தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். ஓரளவு நீதி, நேர்மையில் நம்பிக்கை உடையவர்கள். மற்றவர்களிடம் பெரும்பாலும் ஏமாற மாட்டார்கள்.
எந்த வகையிலாவது முன்னேற துடிப்பார்கள். பயணத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள்.
தந்திரம் நிறைந்தவர்கள். மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவர்கள்.
சூழ்நிலையை அனுசரித்து பேசுபவர்கள். பிறரை புகழ்ந்து பேசக்கூடியவர்கள். இவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க முடியாது.
இவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும். மனமாற்றம் உடையவர்கள். புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புவார்கள்.
புதன் மேடு தாழ்ந்து இருந்தால் அல்லது இடம் பெயர்ந்து இருந்தால் இவர்கள் திருடர்களாகவும், கொள்ளையடிப்பவர்களாகவும் குடும்பத்தில் அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக