
குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். இந்த மேடு நன்றாக அமைந்திருந்தால் ஆரோக்கியமான தேகத்தை கொண்டவர்களாகவும், நடுத்தரமான உயரம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
மற்ற மேடுகளை விட குருமேடு உயர்ந்திருந்தால் இந்தக் கைகளை உடையவர்கள் நியாயவாதிகளாகவும், நேர்மை, நாணயம் இதில் பற்று உடையவர்களாகவும் இருப்பார்கள்.
தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும், உபதேசம் செய்வதில் திறமை உள்ளவர்களாகவும், பேராசிரியர்களாகவும், உயர்ந்த இலட்சியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள்.
எல்லோரையும் விட தான் மேலானவர் என்ற நினைப்பு கொண்டவர்கள். பெற்றோர்களுக்கு கூட கட்டுப்பட விரும்பாதவர்கள்.
சமூக சேவை, அரசியல் மற்றும் அழகிய பொருட்களின் மேல் பிரியம் கொண்டவர்கள்.
இவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து பேசும் சுபாவம் உடையவர்கள். பிறர் பரிகாசம் செய்வதை வெறுப்பார்கள்.
சுத்தம், சுகாதாரத்தில் அக்கறையும் தனது காரியத்தில் மிகுந்த கவனமும் கொண்டவர்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அதிர்ஷ்டமுள்ளவராகத் திகழ்வார்கள். விடாமுயற்சி கொண்டவர்கள்.
தங்கள் வருமானத்தை பொதுநலன் மற்றும் தெய்வ காரியங்களுக்கு செலவிட தயங்கமாட்டார்கள்.
இந்த மேடு நேராக, அழகாக, சீராக உயர்ந்து காணப்படாமல் சற்று ஒதுங்கியும், கோணலாகவும் அமைந்தால் ஏமாற்றுக்காரர்களாகவும், வெட்டி பேச்சு பேசுபவர்களாகவும், வீண் ஆடம்பரம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக