Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்

Image result for காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்


ம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவிலாகும். தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் திருக்கோவில். இங்குள்ள அம்பாள், காமாட்சி அம்மன் என்ற பெயரில் காட்சி தருகிறாள்.

இந்த அம்பாளுக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய சிறப்பு பெயர்களும் உண்டு.

கோவில் வரலாறு :

முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தவவலிமை பெற்று எல்லாரையும் வென்று, தன்னால் கொன்றவரின் பலம் தனக்கு வந்து விட வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான். மேலும் அவனுக்கு ஒன்பது வயது பெண் குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற விதியும் இருந்தது. இதனால் தேவர்களும், இந்திரர்களும் மிகவும் வேதனை அடைந்தனர். ஆகவே சக்தி தேவி ஒன்பது வயது குழந்தை போல வடிவம் எடுத்து அசுரனை வதம் செய்து அமர்ந்த இடம் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்.

பிறகு அந்த கோபத்தை குறைக்க ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஒன்றை உருவாக்கி, அம்பாளின் கோப சக்தியை அருள் தரும் சக்தியாக மாற்றினார் என்பது வரலாறு.

அம்பாளின் சிறப்பு பெருமை :

இந்த திருத்தலத்தில் அம்பிகைக்கு மூன்று உருவங்கள் உண்டு. அவை ஸ்தூலம், காரணம், சூட்சுமம் என்பன. மேலும் இந்த அம்பாளை வணங்குவதால் கோடான கோடி நன்மைகள் உள்ளது. ஆகவே இந்த அம்பாள் காமகோடி காமாட்சி என்ற சிறப்பு பெயரோடு அருள்பாலிக்கிறாள்.

இந்த ஊரில் உள்ள அனைத்து கோவில்களும் காமாட்சி அம்மனை பார்த்தபடியே அமைந்து உள்ளது. மேலும் இந்த ஊரில் எந்த கோவிலில் பூஜை நடந்தாலும் உற்சவர் காமாட்சி அம்மனை சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.

கோவில் அமைப்பு :

காமாட்சி அம்மன் தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார். தனது ஆசனத்தில் பஞ்ச பிரம்மாக்களை கொண்டும் நான்கு கரங்களுடன், கரும்பு வில் ஏந்தியும் காட்சி தருகிறாள்.

இந்த கோவிலில் சரஸ்வதி, லக்ஷ்மி, அருபா லக்ஷ்மி, சியாமளா, வராகி, அன்னபூரணி, அர்த்தநாரிஸ்வரர் ஐயப்பன், துர்வாச முனிவர் ஆகியோர் தனி தனி சன்னிதியில் உள்ளனர்.

கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலிருந்து தங்கம்வேயந்த கோபுர விமானத்தினை பார்க்கலாம்.

கோவில் சிறப்பு :

விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னிதி அம்பாளுக்கு அருகில் இருப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும். இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதப்படுவது துண்டீர மகராஜா சன்னிதி. இந்த தலத்தை ஆட்சி செய்த துண்டீரர் என்ற ஆகாசபூபதிக்கு குழந்தை இல்லை. அவர் காமாட்சி அம்மனை தினமும் வழிபட்டு வந்தார். இவரது பக்தியில் அம்மன் தனது முதல் குழந்தையான பிள்ளையாரை கொடுத்தாள். கணபதி துண்டீரர் என்ற பெயரோடு அந்த ஊரை ஆட்சி செய்தார். பிள்ளையார் துண்டீரர் என்ற பெயரில் ஆட்சி செய்ததால் அந்த ஊரிற்கு தொண்டை மண்டலம் என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது. துண்டீர மகராஜா காமாட்சி அம்மனுக்கு எதிரே அமர்ந்துள்ளார். இவரை காண செல்லும் முன் அமைதியாக செல்ல வேண்டும். ஏனெனில் மகாராஜா சாபம் இடுவர் என்பது ஐதீகம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக