பெண்களுக்கு
உண்டாகும் பொதுப்படையான ஒன்று வெள்ளைப்படுதல். இது லுகோர்ஹொயா என்று அழைக்கப்படுகிறது.
பெண்கள் பூப்படையும் போது உண்டாகும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் யோனி பகுதியில்
உண்டாகும் அடர்ந்த திரவமே வெள்ளைப்படுதல் என்றழைக்கப்படுகிறது. பெண்கள் பிறப்பு உறுப்பு
எப்போதும் ஈரப்பசையோடு வழவழப்பாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இந்த பிசுபிசுப்பான
வெள்ளை திரவம் சுரக்கிறது. அரிப்பு இல்லாமல், அதிக அளவும் இல்லாமல், சிறிதளவு சுரக்கும்
வரை இது இயல்பானது பெண் களின் பிறப்புறுப்பில் தசைபகுதி. கருப்பையின் வாய் அதன் உட்சுவர்களில்
இருந்து சிறிதளவு என்று சுரக்கும் இது அளவுக்கு அதிகமாகி நிறங்களிலும் மாற்றங்கள் உண்டாகும்
போது அதை வெள்ளைபடுதல் என்று சொல்கிறோம்.
வெள்ளைபடுதல்
பூப்படையும்
போது பெண்கள் தங்கள் உறுப்பில் வெள்ளைபடுதலை உணர்வார்கள். அதன் பிறகு சினைப்பையில்
இருந்து சினை முட்டை வெளியேறி கருப்பை வரும் நாள், மாதவிடாய் வருவதற்கு முன்பு பின்பு
வெள்ளைப்படுதல் உணரலாம்.அதை தொடர்ந்து பெண்கள் திருமணத்துக்கு உறவுக்கு முன்பும், பின்பும்
வெள்ளைப்படுதலை சற்று அதிகமாக உணர்வார்கள். கர்ப்பகாலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக
இருக்கும்.
இதை
தொடர்ந்து மேலும் வெள்ளைப்படுதல் அதிகரித்தால் அது தொற்றுபிரச்சனை ஆக இருக்கலாம். வெள்ளைபடுதலோடு
கீழ்கண்ட அறிகுறீகள் அதிகமாக இருக்கும். நிறத்தை கொண்டு பிரச்சனைகளின் தீவிரத்தை உணரலாம்.
தொற்று பாதிப்பு
இலேசாக
பிசுபிசுப்புத்தன்மை கொண்ட இந்த திரவம் பென் உறுப்பில் தொற்றுகள் ஏற்ப டாமல் பாதுகாக்கும்.
ஆனால் பிறப்பு உறுப்பில் பாக்டீரியா, ஈஸ்ட் தொற்று உண்டானால் அது வெள்ளைப்படுதல் அமிலத்தன்மை
காரத்தன்மை இரண்டையும் பாதிப்புள்ளாக்கும்.
பெண்
உறுப்பின் அருகில் சிறுநீர்ப்பாதையும் அமைந்திருக்கிறது. கருப்பை வாய் பகுதி யும் அருகில்
உள்ளது. இதனால் தொற்று ஏற்பட்டால் அவை வேகமாக பரவிவிடும். வெள் ளைப்படுதல் வெள்ளை நிறத்தில்
சளி போன்று இருப்பது இயல்பானது. ஆனால் இவை சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் வெளிவந்தால்
கண்டிப்பாக தொற்று ஏற்பட்டிருக் கிறது என்பதை உறுதி படுத்தி கொள்ளலாம். அதோடு உடனடியாக
மருத்துவரை சந்திப்பதும் அவசியம். எந்தெந்த நிறத்தில் அந்த திரவம் இருந்தால் என்ன மாதிரியான
தொற்றுகள் பரவும் தெரிந்துகொள்வோமா?
நிறம் மாறுதல்
வெள்ளைப்படுதல்
இயல்பான நிறத்தில் இருக்கும் வரை பிரச்சனையில்லை. ஆனால் அது வழக்கதை விட வேறுமாதிரியான
நிறமாற்றத்தை கொண்டிருந்தால் கண்டிப்பாக அது ஒருவித தொற்றுக்கான அறிகுறி என்பதை உணருங்கள்.பொதுவாக
உங்கள் மாத விடாய் காலத்தில் மட்டுமே சற்று அதிகம் உணரக்கூடிய வெள்ளைப்படுதலை வழக்கத்
துக்கு மாறாக அவ்வபோது உணர்ந்தாலோ பேடு வைக்கும் அளவு அதிகரித்தாலோ அது கவனிக்ககூடியது.
அடர்த்தியான நிறம்
வெள்ளைப்படுதலில்
அதிக அடர்த்தி இருக்கும் சமயங்களில் உதிரப்போக்கு போன்று கட்டியாகவும் இருக்ககூடும்.
பாலாடைக்கட்டி போன்று இருக்கும். வெள்ளையாக இருப்பதால் பலருக்கும் இந்த மாற்றம் தெரிவதில்லை.
ஆனால் இவை ஈஸ்ட் மற்றும் காளான் தொற்றால் பெரும்பாலும் உண்டாககூடியது. பிறப்புறுப்பில்
இயல்பாக இருக்கும் நுண்ணுயிர்கிருமிகளில் இந்த தொற்று உண்டாகும்.
வெள்ளைப்படுதலில்
மட்டும் அறிகுறிகளை காணாமல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அதிக வலி, பிறப்புறுப்பில்
கட்டி, புண் போன்றவை இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
வெள்ளைப்படுதல்
படிப்படியாக வெள்ளை நிறத்திலிருந்து இலேசான மஞ்சள் நிறத்திற்கு மாற்றத்தை உண்டாக்கும்.
மருத்துவரை அணுகினால் எளிமையான சிகிச்சையின் மூலம் இதை குணப்படுத்திவிடுவார்கள். அதே
நேரம் இதை கவனியாவிட்டால் மாதவிடாய் கோளாறுகள், கருப்பையில் சில குறைபாடுகளை உண்டாக்கிவிடும்.
பழுப்பு வெள்ளை
இவை
பெரும்பாலும் திருமணத்துக்கு பின்பும் கருத்தரிப்பு காலங்களிலும் பெண்கள் உணர்கிறார்கள்.
கர்ப்பிணிபெண்கள் 30% பேர் கர்ப்பக்காலத்தில் இந்த பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில்
வெள்ளைப்படுதலை கவனிக்கிறார்கள். திருமணத்துக்கு பின்பு உறவுக்கு பிறகு இதை சற்று அதிகமாக
உணர்கிறார்கள். இது இலேசான துர்நாற்றத்தை அளிக்ககூடியது. திருமணத்துக்கு பிறகு அடிக்கடி
இந்த பிரச்சனை இருந்தால் குறிப்பாக வருடத்துக்கு மூன்று முறைக்கு மேல் இந்த பிரச்சனையால்
நீங்கள் மேற்கொண்டிருந்தால் உறவின் போது ஆணுறை அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்
மருத்துவர்கள்.
பச்சை, சாம்பல்,சிவப்பு
கலந்த மஞ்சள் நிறம் - டிஐவி (Desquamative inflammatory vaginitis)
பெண்களின்
மெனோபாஸ் காலங்களிலும் அதற்கு பிந்தைய நிலையிலும் இவை வரக்கூடும். பெண்களின் உடலில்
சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது பெண் உறுப்பு சிவந்து தடித்து இருக்கும்.
அப்போது வெள்ளைப்படுதல் மஞ்சள், பச்சை நிறங்களில் இருக்கும். பிறப்புறுப்புக்கு வழவழத்தன்மையை
அளிக்கும் வெள்ளைப் படுதலில் உண்டாகும் மாற்றத்தால் அதிக வறட்சியை சந்திக்கும்.
இந்த
நேரங்களில் உடல் உறவு கொள்வது அதிக வேதனையை உண்டாக்கும். மருத்து வரை அணுகினால் பெண்
உறுப்பில் களிம்புகள் பரிந்துரைப்பார். இது அந்த இடத்தின் வறட்சியை குறைத்து எரிச்சலை
போக்கும். வலியையும் குறைக்கும். மேலும் ஈஸ்ட் ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதை தவிர்க்கவும்
சிகிச்சை அளிக்கப்படும்.
எப்போது கவனிக்க வேண்டும்?
இயல்பான
நிறத்தில் மணமற்று இருக்கும் வரை அது சாதாரணமானது. நிறங்களில் மஞ் சள் , பச்சை, சிவப்பு
கலந்த மஞ்சள், பழுப்பு, அடர்த்தி, கட்டியாக வெளிவருவது போன் றவை கவனியுங்கள். இதனோடு
பெண் உறுப்பில் கட்டி, துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் இருக்கிறதா
என்பதையும் கவனியுங்கள். அதோடு துர்நாற்றம் வீசுகிறதா என்பதையும் கவனியுங்கள். இவை
எல்லாம் இருந்தாலே கண்டிப்பாக வெள் ளைப் படுதலில் பிரச்சனை. தொற்று உண்டாகியிருக்கிறது
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதை
அனைத்தையும் முறையாக அறிந்து கொண்டு உங்கள் மருத்துவரை அணுகுங்கள். உங்கள் அறிகுறிகளை
அவருக்கு தெளிவாக அறிவிப்பதன் மூலம் உங்களுக்கான சிகிச்சை எளிதாக இருக்ககூடும்.
சிகிச்சை
எடுத்த பிறகும் இந்த பிரச்சனை தொடர்ந்தால் மீண்டும் சிகிச்சை எடுக்க தயங்காதீர்கள்.
பெண்கள் எப்போதும் பெண் உறுப்பில் உண்டாகும் மாதவிடாய் வெள்ளைப்படுதல் குறித்த நிகழ்வை
குறித்துவைத்திருப்பது நல்லது. அதே போன்று உண்டாகும் மாற்றங்களை கவனிப்பதன் மூலம் தொற்று
தீவிரமாகாமல் பரவாமல் தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக