>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 24 பிப்ரவரி, 2020

    பரதன் குகனை சந்தித்தல்!

     ரதனும், சத்ருகனும் தவக்கோலம் பூண்டு, பரிவாரங்கள் புடைசூழ இராமரை காண கானகம் சென்றனர். அவர்கள் பரிவாரங்களுடன் கங்கைகரையை அடைந்தார்கள். பரதன் பரிவாரங்களுடன் வருவதை கண்ட குகன், இராமரை தாக்க தான் வருகிறார்கள் என்று எண்ணினான். இவன் அரசாட்சியை கவர்ந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் இராமரை இடர் செய்வதற்காக கானகம் வந்துள்ளான் என எண்ணினான், குகன். பரம ஏழையாகிய என்னை இராமர் தம்பி என்று சொன்னாரே. அந்த ஒரு சொல்லுகாக நான் உயிரையும் இராமருக்காக தருவேன். வேடர்களே, எதிர் பரிவாரங்களுடன் வரும் பரதனை போர்புரிய ஆயத்தமாக இருங்கள். குகன் போர் பறையறைந்தான். போர் பறையறந்ததை கேட்ட பரதர், அண்ணாவை தேடி மனம் நொந்து வரும் நம்மீது போர் புரிகின்றவர் யார் என சுமந்திரரிடன் கேட்டார். பெருமானே! கங்கை கரைக்கு அதிபரான குகன் என்னும் வேடன் உள்ளான். அவன் தாங்கள் இராமரை இடர் செய்ய வருவதாக எண்ணி போருக்கு ஆயத்தம் புரிகின்றான், என்றார்.
     வேடனுக்கு கூட என் மீது கோபமா? நான் என்ன பாவம் செய்தேன் என்று கூறி சேனைகளை அங்கேயே நிறுத்துவிட்டு பரதர் குகனை பார்க்க சென்றார். அவரை பின் தொடர்ந்து சத்ருக்கனும் சென்றார். பரதர் தொலைவில் வருவதை கண்டார் குகன். வருபவர் இராமர் அண்ணாவை போல் இருக்கின்றாரே, அவருக்கு பின்னே வருபவர் இலட்சுமணர் போல் இருக்கின்றாரே எனக்கூறி இராமர் சென்ற திசை நோக்கி தொழுது வணங்கினான், குகன். அழுத கண்களும் உருகிய உள்ளமுடனும் தவக்கோலத்துடன் வரும் பரதரை கண்டார். இராமர் அண்ணாவிடம் ஒரு நாள் பழகிய எனக்கே நற்குணங்கள் இருக்குமானால், இராமர் அண்ணாவின் உடன் பிறந்த பரதருக்கு தீய குணம் ஒருபோதும் இருக்காது. நான் ஒரு அவசரக்காரன். நல்லவரை தீயவர் என எண்ணிவிட்டேன். பரதர் வந்தவுடன் அவருடைய திருவடியில் விழுந்து வணங்கினான், குகன். பரதர் குகனை கட்டி தழுவி கொண்டார்.

     குகன் பரதரை பார்த்து, தாங்கள் ஏன் தவக்கோலத்துடன் வனத்துக்கு வந்துள்ளீர் என வினவினான். பரதர், அரசக்குலத்தில் மூத்தவன் தான் ஆட்சி புரிய வேண்டும். அண்ணன் இராமர் இருக்க நான் ஆட்சி புரியலாமா? ஆதலால் தான் அண்ணனை அழைத்து செல்ல வந்துள்ளேன் என்றார். இதை கேட்ட குகன் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தான். பரதா! தாய் வரம் கேட்க, தந்தை தந்த மகத்தான அரச பதவியை உதறி தள்ளிவிட்டு கானகம் செல்ல தவக்கோலத்துடன் வந்த உனக்கு ஆயிரம் இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஈடாகுமா? உன்னை போன்ற உத்தம குணங்கள் நிறைந்தவர் இவ்வுலகில் இல்லை எனக் கூறினான் குகன்.

     பரதர், குக பெருமானே! அண்ணன் இராமர் எங்கே தங்கி இருந்தார் எனக் கேட்டார். குகன் இராமர் தங்கி இருந்த ஆசிரமத்தை காட்டினான். பரதர் ஆசிரமத்தை பார்த்து வருந்தினார். குக பெருமானே! இலட்சுமணர் எங்கே படுத்து உறங்கினார். குகன், இலட்சுமணர் படுத்து உறங்கினாரா? அவர் இராமரும், சீதையும் உறங்க விடியும் வரை வில்லூன்றி கண் இமைக்காமல் நின்று காவல் புரிந்தார் என்றான் குகன்.

    பிறகு அனைவரும் அக்கரையை கடக்க படகுகளில் ஏறினார்கள். தசரத குடும்பத்தினர் தனி படகில் சென்றனர். குகன், மிக துயரமாய் அமர்ந்திருக்கும் கௌசலையை பார்த்து இவர் யார் எனக் கேட்டார். குகன் அண்ணா, பன்னிரண்டு மாதம் சுமந்து பெற்ற இராமனின் தாய் கௌசலை என்றார், பரதர். குகன் கௌசலையின் மலரடியில் வீழ்ந்து பணிந்து வணங்கினான். கௌசலை, பரதா குழந்தை போல் அழும் இந்த மகன் யார்? என்று கேட்டாள். பரதர், அம்மா இவர் இராம் அண்ணாவுக்கு தம்பி, எனக்கும், இலட்சுமணருக்கும், சத்ருகனக்கும் தமையன் என கூறினார். கௌசலை, ஐவரும் பல்லாண்டு அரசு புரிந்து ஒற்றுமையாக வாழுங்கள் என்று ஆசி கூறினாள். பரதர் மற்ற தாய்மார்களையும் அறிமுகம் செய்தார்.

    தொடரும்.....

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக